namakkal news today-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கருத்தரங்கம்
namakkal news today- JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் குளிர்பதனம் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது.;
namakkal news today-குமாரபாளையம், JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள செந்தூர்ராஜா ஹாலில், "இயற்கை குளிர்பதன அடிப்படையிலான குளிர்பதனம், வெப்பமூட்டும் மற்றும் குளிரூட்டும் சுழற்சிகள்" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.
JKKN கல்வி நிறுவனங்களின் தலைவர் ஸ்ரீமதி செந்தாமரை மற்றும் இயக்குநர் ஓம்சரவணா ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் நடந்த இந்த கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் டாக்டர். தமிழரசு, கருத்தரங்கில் முன்னிலை வகித்தார்.
namakkal news today-வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, பேராசிரியர் டாக்டர் ஜி.பிரவீன் குமார்,Resource person -ஆக கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் இந்த நிகழ்ச்சியில், குளிர்சாதன உருவாக்கம், செயல்பாடுகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு அளித்த விரிவுரை மாணவர்கள் விரிவாக ஆராய்ந்து தெளியும் வாய்ப்பு கிடைத்தது.
JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.