நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஜிங்க் மாத்திரையும் அதன் பயன்களும்.
Zinc Tamil Meaning-நாம் அன்றாடம் சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். சத்து குறையும்போதுதான் நமக்கு உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது.;
Zinc Tamil Meaning
Zinc Tamil Meaning-மனித பிறவி எடுத்தவர்கள் அனைவருக்குமே ஆரோக்யம் என்பது அவசியமான ஒன்று. தற்கால பரபரப்பான உலகில் பலர் தங்கள் ஆரோக்யத்தினை மறந்துவிடுகின்றனர். இதனால் பல நோய்களுக்கு ஆட்பட நேரிடுகிறது. நோய் வந்தபின் டாக்டர்களிடம்செல்வதை விட நோய் வராமலி்ருக்க தேவைான வழிமுறைகளை நாம் இனங்கண்டு அதன் படி வாழ்வது சிறந்தது.ஜிங்க் மாத்திரையின் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
இம்மாத்திரையானது குழந்தைகளின் வயிற்றுப்போக்கு, குன்றிய வளர்ச்சி, துத்தநாககுறைபாடு, மற்றும் காயத்தினை குணப்படுத்த, போன்றவற்றிற்கு இம்மாத்திரையானது பெருமளவில் பயன்படுகிறது.இம்மாத்திரையானது சுவாசக்குழாயில் ஏற்படக்கூடிய நோய்களைத் தீர்க்கவும், அதேபோல் மனித உடலில் நோயெதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கவும் இம்மாத்திரையானது டாக்டர்களினால் பரிந்துரைக்கப்படலாம்.
மேலும் இம்மாத்திரையானது கிரோன்நோய், டவுன்சின்ட்ரோம், ஹேன்சன் நோய், பெப்டிக் புண்கள், ஆண் மலட்டுத்தன்மை,விறைப்புத்தன்மைகுறைபாடு,கவனக்குறைவு-ஹைபராக்டிவிட்டிகோளாறு, ஹைபோஜீயா,டின்னிடஸ், அல்சைமர் நோய், ஆஸ்டிரியோபோரோசிஸ், முடக்கு வாதம், தசைப்பிடிப்பு, ஆகியவற்றின் சிகிச்சையில் ஜிங்க் மாத்திரை பயன்படுத்தப்படலாம்.
டாக்டரிடம் சொல்லுங்க
டாக்டர்கள் உங்களுக்கு பரிந்துரைத்தாலும் இந்த மாத்திரையினை உட்கொண்ட பின்னர் உங்களுக்கு ஏதேனும் அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் உடனடியாக டாக்டர்களிடம் சொல்லிவிட வேண்டியது அவசியம். மேலும் நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ அல்லது குழந்தைகளுக்கு பாலுாட்டுபவராக இருந்தாலோ அதனை முன்னதாகவே டாக்டர்களிடம்சொல்லிவிட வேண்டும்.
மேலும் வேறு ஏதேனும் நோய்களுக்கு நீங்கள் மாத்திரை உட்கொள்பவராக இருந்தாலோ அல்லது வேறு ஏதாவது ஆபரேஷன் செய்ய திட்டமிட்டிருந்தாலோ, உங்கள் டாக்டரிடம்சொல்லிவிடுங்கள்.முன்பே இருக்கும் நோய்கள் குறித்தும் டாக்டர்களிடம் சொல்லிவிட்டால் அதற்கு தகுந்தாற்போல் உங்களுக்குமாத்திரைகளை பரிந்துரைப்பார்.
வேறு ஏதேனும் ஹெர்பல் மருந்துகளை உட்கொண்டாலும் அதனை டாக்டரிடம் தெரிவித்துவிடுவது நல்லது.ஜிங்க் மாத்திரைகள் வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடியது. மருந்தின் அளவு, மருத்துவநிலை, உணவு, வயது, மற்றும்பிற மருந்துகளுடன் எதி்ாவினை போன்ற நிலைமைகளைப் பொறுத்தது.மேலும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வாயில் உலோக சுவை, மற்றும் தலைவலி, ஆகியவை ஜிங்க் மருந்தின் பக்க விளைவுகளில் அடங்கும்.
ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளவர்களுக்கு டாக்டர்களால்இந்த ஜிங்க் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். சொறி, வாய்வீக்கம், மூச்சுக் குறைபாடு, யூர்டிகேரியா போன்றவை பக்கவிளைவுகளுக்கான அறிகுறிகளாக கருதப்படுகிறது.மேலும் குழந்தையில்லா பிரச்னைகள் கொண்டவர்கள் மற்றும் வயதானவர்களின் நிமோனியாவின்அளவைக்குறைக்கவும், இந்த ஜிங்க் மாத்திரையானது பயனளிக்கிறது.
முன்னெச்செரிக்கை
உங்கள் டாக்டரிடம்நீங்கள் இதற்கு முன்பாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை உட்கொண்டால் அதனை தெரிவித்துவிடவேண்டும். அதேபோல் நீங்கள் கர்ப்பிணியாகவோ அல்லது குழந்தை பிறப்பிற்காக திட்டமிடுபவராக இருந்தாலும் அதனை முன்பாக டாக்டரிடம் தெரிவித்தல் நலம்பயக்கும்.
சிறு குழந்தைகளுக்கு பாலுாட்டும் தாய்மார்களாக இருப்பின் அதனை டாக்டர்களிடம் தெரிவித்துவிடவும். மேலும் நீங்கள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் டாக்டரிடம் முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.மேலும் விட்டமின், மினரல், மாத்திரைகளான இரும்பு, காப்பர், அல்லது விட்டமின் ஏ விற்கான மருந்துகளை உட்கொள்பவராகஇருந்தாலும் சொல்லி விட வேண்டும்.
மேலும் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க நீங்கள் கீமோதெரபி மேற்கொள்பவராகஇருந்தால், ரத்த மாற்றம் செய்பவராகஇருந்தாலும் முன்னதாகவே சொல்லிவிடுதல் உங்களை தொற்றுகளிலிருந்து முழுவதுமாக பாதுகாத்துக்கொள்ளலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2