ஆண்மை குறைவும் மலட்டுத்தன்மையும் ஏற்பட என்ன காரணம்?
testosterone meaning in tamil - ஆண்மை குறைவும் மலட்டுத்தன்மையும் ஏற்பட என்ன காரணம்? என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க.
testosterone meaning in tamil - ஆண்மை குறைவும் மலட்டுத்தன்மையும் ஏற்பட என்ன காரணம்? என்பதை தெளிவாக நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆண்மைக்கும் வாரிசுக்கும் அவசியமான ஒரு வேதிப்பொருள் டெஸ்டோஸ்டிரோன். இது குறைவாக இருக்கும் பட்சத்தில் ஆண்மை குறைவும் மலட்டுத்தன்மையும் ஏற்படலாம்.
இரத்தத்தில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருக்க (Low testosterone in blood) இரு காரணங்கள்:
1. குறைவான உற்பத்தி (decreased synthesis)
2. அதிகரித்த படிச்சிதைவு (increased degradation)
1. உற்பத்தியை அதிகரிக்கலாம்
2. படிச்சிதைவை குறைக்கலாம்
3. வெளியில் இருந்து ஊசி மூலம் டெஸ்டோஸ்டிரோனை செலுத்தலாம்
உடம்பில் உள்ள கொழுப்பு செல்களில் (adipose tissue) அரோமடைஸ் (aromatase) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோனை ஈஸ்ட்ரஜனாக மாற்றுகிறது.
ஆக ஒருவரின் உடம்பில் கொழுப்பு செல்கள் நிறைய இருந்தால் அவரது இரத்ததில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அதிக அளவில் ஈஸ்டரஜனாக மாற்றப்படும்.
ஈஸ்ட்ரஜனின் பணி என்ன ?
கொழுப்பை அதிகரிப்பது (இன்சுலினும், ஈஸ்ட்ரஜனும் உடம்பில் கொழுப்பு செல்களை அதிகரிக்கும் இயக்குநீர்கள்) அதாவது ஈஸ்ட்ரஜன் உடலில் அதிகம் கொழுப்பை சேகரிக்கிறது.
இந்த அதிகப்படியான கொழுப்பு, இரத்தத்தில் இருக்கும் டெஸ்டோஸ்டிரோனை அதிக அளவில் ஈஸ்டரஜனாக மாற்றுக்கிறது. அப்படி மாற்றப்பட்ட ஈஸ்ட்ரஜன் உடலில் மேலும் அதிகம் கொழுப்பை சேகரிக்கிறது.
ஆக அதிகம் ஈஸ்ட்ரஜன் --> அதிகம் கொழுப்பு --> மேலும் அதிகம் ஈஸ்ட்ரஜன் (குறைவான டெஸ்டோஸ்டிரோன் ) --> மேலும் அதிகம் கொழுப்பு --> அதைவிட அதிகம் ஈஸ்ட்ரஜன் (இரத்தத்தில் டெஸ்டோஸ்டிரோன் மேலும் குறைவு) --> என்று ஒரு நேர்மறை பின்னூட்டம் (positive feedback) நடந்து கொண்டே செல்கிறது.
ஆக
1. கொழுப்பு அதிகரிக்கிறது
2. டெஸ்டோஸ்டிரோன் குறைகிறது
3. ஈஸ்ட்ரஜன் அதிகரிக்கிறது
டெஸ்டோஸ்டிரோன் குறைவாதால் ஏற்படும் விளைவுகளை பார்த்து நோயாளி பயந்து மருத்துவரை பார்த்து டெஸ்டோஸ்டிரோன் ஊசியை போட்டுக்கொள்வார். அதை தொடர்ந்தும் போட்டுக்கொண்டே இருப்பார்.
ஆனால் உள்ளே செல்லும் டெஸ்டோஸ்டிரோன் எல்லாம் சிறிது நேரத்தில் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பினால் ஈஸ்ட்ரஜனாக மாறிவிடும். எனவே ஊசியின் அளவு அதிகரிக்க வேண்டி வரும்.
இதை வேறு விதமாக எப்படி எதிர்கொள்ளலாம்?
நாம் முதலில் பார்த்தது போல் 1. உற்பத்தியை அதிகரிக்கலாம் , 2. படிச்சிதைவை குறைக்கலாம். 3. வெளியில் இருந்து ஊசி மூலம் டெஸ்டோஸ்டிரோனை செலுத்தலாம். படிச்சிதைவை குறைக்கலாம்.
படிச்சிதைவை எப்படி குறைக்க முடியும் ?
உடம்பில் உள்ள கொழுப்பை குறைத்தால் படிச்சிதைவு குறையும்.
உடம்பில் உள்ள கொழுப்பை எப்படி குறைப்பது ?
உடலின் இன்சுலின் சுரப்பு குறைந்தால் உடலின் கொழுப்பு குறையும்.
உடலின் இன்சுலின் சுரப்பை எப்படி குறைப்பது?
சாப்பிடும் உணவில் மாவுச்சத்து (carbohydrate) குறைவு என்றால் உடலின் இன்சுலின் சுரப்பு குறையும்
மாவுச்சத்தினை எப்படி குறைத்து சாப்பிடுவது ?
பேலியோ உணவிற்கு மாறுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.