vasograin tablet uses in tamil ஒற்றைத் தலைவலிக்கான அருமருந்து வாசோக்ரைன் டேப்ளட்.... முதல்ல படியுங்க...

vasograin tablet uses in tamil மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் வித்தியாசமானது ஒற்றைத்தலைவலி. இது எப்படி வரும்... எப்போது வரும் என சொல்ல முடியாது. வரும்போது வரும். அதற்கான மாத்திரைதான் வாசோக்ரைன் பற்றி பார்ப்போம்.

Update: 2022-08-17 10:17 GMT

vasograin tablet uses in tamil

நோய் வராத மனிதர்கள் இவ்வுலகில் உண்டா? என பலர் கேட்கலாம். பிறந்ததிலிருந்து நோய் வராமல்இருப்பவர்கள்இருக்கிறார்களா? என ஆச்சர்யமாக கேட்கலாம். கண்டிப்பாக யாரும் இருக்க முடியாது.அப்படி இருந்துவிடவும் முடியாது.

அலோபதி மருந்து எடுத்துக்கொள்ளாதவர்கள் இருக்கலாம்.ஆனால் அவர்கள் வேறு மருந்துகளை உட்கொள்வதன் மூலம் தன் நோய்களைக் குணப்படுத்திக்கொள்வர். அந்த வகையில் நோயற்ற மனிதனை காண்பது அரிது இவ்வுலகில். இப்போதுதான் நோய்கள் வரிந்து கட்டிக்கொண்டு வாசலில் காத்து கிடப்பதால் ஆஸ்பத்திரிகளும், மெடிக்கல் ஸ்டோர்களும் நிரம்பி வழிகின்றன. ஒரு சிலரைப் பார்த்தீர்களானால் தட்டில் சாப்பாடு போட்டு சாப்பிடுவது போல் மாத்திரைகளை போட்டு சாப்பிடுறாங்க. அந்த அளவிற்கு நோய்கள் மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. இக்காலத்தில் எந்த நோய்க்கு சென்றாலும் குறைந்தபட்சமே ஒரு வார கால மருந்தாகி விட்டதால் மெடிக்கல் ஸ்டோர்கள் தினம் தினம் புதியதாக திறப்பதை பார்க்க முடிகிறது.

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் வகைகளில் கொடியது ஒற்றைத்தலைவலி .இது பிடித்தால் விடாது. மரண வலி வலிக்கும். இருந்தாலும் அவ்வப்போது டாக்டர்கள் கொடுக்கும் மருந்து , மாத்திரைகளினால் தற்காலிக தீர்வு கிடைக்கிறது நோயாளிகளுக்கு. அந்த வகையில் ஒற்றைத்தலைவலிக்கான அருமருந்துதான் வாசோக்ரைன் டேப்ளட் ஆகும். டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்து.

vasograin tablet uses in tamilவாசோக்ரைன் மாத்திரையானது எர்கோடமைன் ,காஃபைன்,பாரசிட்டமால் , புரோகுளோர் பெரசீன் உள்ளிட்ட கூட்டு மருந்து கலவை. ஒற்றைத்தலைவலிக்கான சிறந்த மருந்து தான் வாசோக்ரைன். ஒற்றைத்தலைவலி என்பது நெற்றியின் ஒரு பக்கத்தில் மட்டும் வலி இருக்கும். மேலும் இந்த மாத்திரையானது வயிற்று குமட்டல், வாந்தி, அல்லது ஒற்றைத்தலைவலியை குணப்படுத்தக்கூடியது.

வாசோக்ரைன் பின்வரும்நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்துதல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது:

மைக்ரேன்,தலைவலி,இரத்த நாள தலைவலி.கிளஸ்டர் தலைவலி.பெருமூளை வாதம்.மைக்ரேன் தாக்குதல்.பல்வலி,காது வலி,கடுமையான கவலை சீர்குலைவு,குமட்டல் மற்றும் வாந்தி,ஃபீவர், குளிர்,உடல் அழுத்தக்குறை ,ஒற்றைத் தலைவலி,களைப்பு,மூட்டு வலி,வெர்டிகோ,மனநோய்,பல் வலி, தசைநார் வலி மற்றும் வலிகள், முதிராநிலை இன் மூச்சுத்திணறல்,அகால குழந்தைகளில் பிறழ்வு,சோர்வு,நீர்க்கோப்பு,அயர்வு,மயக்கம் தலை,வாஸ்குலர் தலைவலி,சுளுக்கு மற்றும் திரிபு நிவாரணபீரியட்ஸ் வலி. காய்ச்சல்.

பக்கவிளைவுகள்

vasograin tablet uses in tamilவாசோக்ரைன் மாத்திரையானது உலர்ந்த வாய், மலச்சிக்கல், சிறுநீர் கழித்தலில் மாற்றங்கள், ரத்தஅழுத்தம் திடீரென குறைதல், உள்ளிட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும். இதுபோன்ற அறிகுறிகள் நீண்ட நாட்கள் இருக்கும்பட்சத்தில் நீங்கள் உங்கள் டாக்டரை கலந்து ஆலோசிப்பது நல்லது. மேலும் துாக்கத்தினை வரவழைக்க கூடியது வாசோக்ரைன். எனவே வாகனங்களை இயக்கும்போதோ, மெஷின்களை இயக்கும்போதோ இந்த மருந்தினை உட்கொள்ள கூடாது. மேலும் உங்களுக்கு அலர்ஜி இருந்தால் இதனை தவிர்ப்பது நல்லது.

முன்னெச்செரிக்கை

vasograin tablet uses in tamilவாசோக்ரைன் மாத்திரையினை டாக்டர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே நோயாளிகள் உட்கொள்ள வேண்டும். தானாக மருந்து வாங்கி சாப்பிடுவது கூடாது. மேலும் சாப்பிட்டவுடன் இந்த மாத்திரையினை உட்கொண்டால் வாயு தொந்தரவுகளிலிருந்து தவிர்க்கலாம். நீங்கள் இந்த மாத்திரையினை உட்கொள்ளும் கால அளவு, மற்றும் எவ்வளவு சாப்பிடுவது என்பதை டாக்டர்கள் நிர்ணயம் செய்யவேண்டும். அதன் படிதான் உட்கொள்ள வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்கள் டாக்டர் பரிந்துரைக்காமல் இந்த மாத்திரையினை உட்கொள்ள கூடாது. அதேபோன்று டாக்டர் சொல்லும் வரை சாப்பிடவேண்டும் தானாக நிறுத்திவிடக்கூடாது.

இந்த மாத்திரையினை 16 வயதுக்குட்பட்டோருக்கு டாக்டர்கள் பரிந்துரைப்பதில்லை. உங்களுக்கு கல்லீரல் மற்றும் கிட்னி சம்பந்தமான பிரச்னைகள் இருப்பின் அதனை முன்னதாகவே டாக்டரிடம் தெரிவித்து விடுதல் நல்லது. மேலும் உருவாகும் கருவில் பக்கவிளைவுகள் ஏற்படுத்தக்கூடிய மருந்து ஆகையால் கர்ப்பிணிப்பெண்கள், மற்றும் குழந்தைபிறப்புக்கான திட்டம் போட்டிருந்தாலும், அதனை டாக்டரிடம் முன்னதாகவே சொல்லிவிடவேண்டும்.

Tags:    

Similar News