உங்கள் உடல் எடையைக்குறைக்க வேண்டுமா? .....டிப்ஸ்...இதோ..
Udal Edai Kuraiya Tips-பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைக்கிறேன் என முயற்சி மட்டும் செய்கிறார்கள். அதில் முனைப்பு காட்டுவதில்லை. எனவே திடமான முடிவெடுங்க... நிச்சயம் செலவில்லாமல் உடல் எடையைக்குறைக்கலாம். வழிகள் இதோ.,...
உடல் எடையை குறைக்க இன்று பலர் பலவிதமான வழிகளை மேற்கொண்டாலும் ஒருசில எளிய வழிமுறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.உடல் எடை என்பது உடல்ஆரோக்யத்தினை பாதிக்க கூடியது. எடை அதிகமாக இருப்பதால் சுவாச கோளாறு முதலில் ஏற்படும். அதாவது மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும். உடல் எடை அதிகமாக இருப்பதால் அவர்களால் அந்த உடலை வைத்துக்கொண்டு எந்த வேலைகளையும் சரியாக செய்ய முடியாத நிலை உருவாகிவிடும்.
மேலும் டயட் என்ற பெயரில் அதிகம் சாப்பிட மாட்டார்கள். இதனால் அவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.
இயற்கை முறையில் நாம் நம் உடலை எவ்வாறு குறைக்கலாம் .
முறையான உடற்பயிற்சி
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் தினமும் குறைந்த பட்சம் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.ஆனால் இவர்களால் எந்த உடற்பயிற்சியும் செய்ய முடியாது என்று மனதளவில் நினைத்தீர்களானால் நிச்சயம் முடியாது. நம்மால் முடியும் என நம்புங்கள். எத்தனை பேர் உடல் பருமனாக இருந்துகொண்டு சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் தெரியுமா? அவர்களைப் பார்த்து நீங்களும் கத்துக்கவேண்டியதுதான். உடலில் வியர்வை வரும் வரை உடற்பயிற்சிசெய்யுங்க..
நடைப்பயிற்சி
நீங்கள் தினமும் 45 நிமிடம் கட்டாயம் நடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள். எனவே மற்றவர்கள் நடக்கிறார்களோ இல்லையோ உடல் பருமனாக உள்ளவர்கள் தினந்தோறும் கட்டாயம் காலையோ, மாலையே உங்களுக்கு தகுந்த நேரத்தில் நடந்து விடுங்க. நடக்கும்போதும் ஏதாவது சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் அப்புறம் எப்படிங்க எடைகுறையும். இதனை ஒரு சிலர் செய்வார்கள். அப்படி செய்யக்கூடாது. நடக்கும்போது நல்ல வேகமான நடையில் உங்கள் கவனம் இருக்கட்டும். குறிப்பாக போன் பேசக்கூடாது.
சைக்கிளிங்
உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நம் உடம்பில் அத்தனை எலும்புகளும் நரம்புகளும்அசையும் பயிற்சிகளில் ஒன்றுதான் சைக்கிளிங். மற்றொன்று நீச்சல் . நீச்சல் பயிற்சியில் உங்கள் உடம்பே அசையும். எனவே நம்மால் நீச்சல் அடிக்க முடியாது என்பவர்கள் சைக்கிளிங்கை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு அரை மணிநேரமாவது சைக்கிளில் பெடல் செய்யுங்க. இதனால் உங்கள் உடம்பில் உள்ள அதிகப்படியான கலோரிகள்வெளியேற்றப்படுகிறது.இதனால் உங்கள் உடம்பு குறைய வாய்ப்புகள் அதிகம்.
உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் சோம்பு கலந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை சோம்பு தண்ணீர் நீக்கி உடம்பை ஸ்லிம் பாடியாக மாற்றிவிடும்.உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அவர்களுடைய வார உணவில் ஒரு நாள் கட்டாயம் சுரைக்காயை சேர்த்துக்கொள்ளவேண்டும். உடல் எடையைக் குறைக்கும் தன்மைசுரைக்காய்க்கு உண்டு. இது நம் உடம்பிலுள்ள வீண் கொழுப்புகளை கரைத்துவிடும்.
உணவுக்கட்டுப்பாடு
உணவுக்கட்டுப்பாடு இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். தினமும் 2 கப் சோறு சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க 1 கப் ஆக குறைத்து சாப்பிட வேண்டும். இடைப்பட்ட நேரத்திலும் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிடலாம்.
நெல்லிக்காய், மாதுளை, சுரைக்காய், புடலங்காய், சேர்ப்பது நல்லது. வறுத்த உணவுகளை விட வேகவைத்த மற்றும் சுட்ட காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். உணவை மொத்தமாக எடுக்காமல் அடிக்கடி சிறிய அளவில் உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். முழுப்பாலுக்கு பதிலாக கொழுப்பு நீக்கிய பால் குடிப்பது நல்லது.
உணவில் ஓட்ஸ், வால்நட்ஸ், சாலட்கள், பாகற்காய், முட்டைக்கோஸ், ப்ரக்கோலி, கேரட், வாழைத்தண்டு , முருங்கைக்காய், பார்லி, கோதுமை, போன்ற ஆரோக்யமான உணவுகள் அடிக்கடி சேர்க்க வேண்டும். இது நார்த்துள்ள உணவுகள் எடை குறைக்க ஏற்ற உணவுகளும், கூட. இவை செரிமானத்துக்கு அதிக நேரம் எடுக்கும்.
ஒவ்வொரு உணவு இடைவேளையின் போதும் வெந்நீர் அருந்துங்கள்.
தயிரை அப்படியே சேர்த்துக்கொள்ளாமல் மசாலா பொருட்கள் கலந்து மோர் ஆக குடிக்கலாம்.
காபி, டீ ஆகியவைகளை உடல் எடை குறையும் வரையில் தவிர்த்துவிட்டு க்ரீன்டீ, புதினாடீ சாப்பிடலாம்.
நொறுக்கு தீனிகள், வறுத்த உணவுகள், உறைந்த உணவுகள், மற்றும் பதிவுசெய்யப்பட்ட உணவுகள் உட்கொள்வதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். மேலும் உணவில் அதிக கட்டுப்பாடுகளை விதித்து கொள்ள வேண்டும். அதிக ஸ்வீட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எண்ணெய் உணவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். இவை உடல் எடையினை அதிகரிக்ககூடியவை .
கபத்தை அமைதிப்படுத்தவும் உணவை பராமரிக்கவும் அன்றாட வேலையில் சுறுசுறுப்பாக ஆரோக்யமாக இருக்க, தினமும் யோகா பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது. பருவ காலத்துக்கு ஏற்ப உணவு முறை இருக்க வேண்டும். உணவை மென்று சாப்பிடுவது நல்லது.பகல் துாக்கத்தை தவிர்த்துவிடவேண்டும்.
நாம் நம் உடல் பருமனை குறைக்க வேண்டுமாயின் பல தியாகங்களை செய்ய வேண்டும்.முதலில் உணவுக்கட்டுப்பாடு அதாவது வாயை அடக்க வேண்டும். எல்லா நேரத்திலும் அசைபோட்டுக்கொண்டேயிருக்க கூடாது. உடல் பருமனால் கால்வலி, முதல் அனைத்து வலிகளும் வர வாய்ப்புள்ளது. எனவே முடிந்த வரை உடல் எடையைக்குறைக்க முயற்சி மேற்கொள்பவர்கள் உணவில் போதுமான கட்டுப்பாடு இருந்தாலே போதும் பாதி எடை குறைந்துவிடும். அதேபோல் உடல் எடையை குறைக்கிறேன் என்று பட்டினி இருந்துவிடாதீர்கள். அது ஆபத்தில் முடியும். திரவ ஆகாரங்களை உட்கொண்டு உங்கள் பசியினை போக்கலாம். எனவே முயற்சி செய்யுங்கள்...நல்லமுன்னேற்றம் கிடைக்கும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2