சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் என்ன? கால்கள் எப்படி பாதிக்கப்படுகிறது

இந்தியாவில் தற்காலத்தில் சர்க்கரை நோயால் பாதிப்படைவோரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருகிறது.பாரம்பரிய நோய் என்று சொல்லப்பட்ட இது, தற்காலத்தில் இளையோர்களையும் விட்டுவைக்கவில்லை.

Update: 2022-07-28 12:09 GMT

உலகம் முழுக்க நீரிழிவு நோயால் பாதிப்போரின் எண்ணிக்கையானது  கணிசமாக நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இது ஏன் வருகிறது. பாரம்பரிய நோய் என்று சொல்லப்பட்டாலும் இந்த நோயே  இல்லாத குடும்பத்திலும் வருகிறதே எப்படி? இதற்கு என்ன காரணம்   என்பதைப்பற்றி பார்ப்போம். 

கணையத்தில் சுரக்கும்  இன்சுலின் ஹார்மோன்  நாம் உண்ணும் உணவு  மூலம் கிடைக்கும் குளுக்கோஸீடன்  கலந்து ஆற்றலாக மாறுகிறது.  இந்த  வேதியியல் நிகழ்வு சம சீராக நடைபெற்றுக் கொண்டேயிருந்தால் சர்க்கரை நோய் பிரச்னை வராது.  ஆனால் இன்சுலின்  ஹார்மோன்  அறவே சுரக்காமல்  போனாலும்  ரத்தத்தில் குளுக்கோஸ்  அளவு அதிகரித்து  சர்க்கரை நோய் டாக்டரிடம்   செல்லும் நிலை ஏற்படுகிறது.

சர்க்கரை நோயில்  டைப்1,டைப்2 என இரு வகைகள் உள்ளன. ஒரு வயது குழந்தை முதல்  3௦ வயது வரை யாருக்கு வேண்டுமானாலும் டைப் 1 வகை நீரிழிவு நோய் ஏற்படலாம். டைப் 1 வகை  நோயாளிக்கு கணையத்தில்  இன்சுலின் ஹார்மோன்  அறவே சுரக்காது. காரணம் இன்சுலின்  ஹார்மோனை  உற்பத்தி செய்யும்  . பீட்டா செல்கள்  தன்னிச்சையான  நிகழ்வும் அழிக்கப்பட்டுவிடும்.

இதன் மூலம் டைப் 1 நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு மிகவும் அதிகமாகும்.  இதனால் உடனடி தொடர் மருத்துவ சிகிச்சை அவசியம்.  டைப் 2  நீரிழிவு நோய் பொதுவாகவே  பெரியவர்களுக்கு ஏற்படும்.  டைப் 2 நீரிழிவு  நோய் கணையத்தில்  இன்சுலின்போதுமான   அளவு சுரக்காது.  இதன்விளைவாக  உணவுகள் மூலம் கிடைக்கும். குளுக்கோஸ்  ஆற்றலாக மாறுவதில்  பிரச்னை ஏற்படும்.  மேலும் டைப் 2 சர்க்கரை நோயில்  உற்பத்தியாகும் இன்சுலின்  முழுவதும் சரியாக  வேலை செய்யாத தன்மை ஏற்பட்டு  ரத்தத்தில்  சர்க்கரை அளவு  அதிகரிக்கும்.  ஒருவரின் உயரத்துக்கு  ஏற்ற எடை  இன்றி உடல் எடை  அதிகமாக  உள்ளோர், அல்லது உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டோர்   குடும்பத்தில், யாராவது ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால்   டைப் 2 நோய்  ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நோய் அதிகரிக்க காரணம் என்ன? 

வளரும்  நாடுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு  வசதிகள் அதிகரித்தல், தொழில் வளம் பெருகுதல், உலக சந்தையுடன் போட்டியிடும்   தன்மை முதலியன காரணங்களாக விளங்குகின்றன.  இன்னும் கடந்த 

40,50, ஆண்டுகளாக  ஏற்பட்டுள்ள  சமூக  பொருளாதார மாற்றமும் காரணமாகின்றன.  இந்த  மாற்றத்தின்  விளைவாக அதிக உடலுழைப்பு,  தேவைப்படாத அளவுக்கு  தொழில்நுட்ப  வசதிகள்  சர்க்கரை சத்து,கொழுப்பு சத்து  கலோரிச்சத்து  அதிகம் கொண்ட  உணவு வகைகள்,  மன  அழுத்தம்  ஆகியவைகளின்  காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

நோய்க்கான அறிகுறிகள் 

அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், அடிக்கடி பசி ஏற்படுதல், காயம் ஆறாமல் இருத்தல்,  உடலின் எடை திடீரென்று  அதிகமாக குறைதல், அதிக சோர்வு, எரிச்சல், பார்வை மங்குதல். 

சர்க்கரை நோயாளியின் கால்கள் 

சர்க்கரை நோயால்  கண், இருதயம், சிறுநீரகம், பாதங்கள்,  உள்ளிட்ட உடலில்   வெவ்வேறு  பாகங்கள் பிரச்னைக்கு  உள்ளாகின்றன.  உலகில் வாழும் 25 சதவீத  சர்க்கரை  நோயாளிகளின் பாதங்களில் பிரச்னைகள் உள்ளன. ஆகவே சர்க்கரை நோயாளிகள்   தங்கள் பாதங்களுக்கு  முன்னுரிமை கொடுக்க வேண்டும்.  5 முதல் 15 சதவீத சர்க்கரைநோயாளிகள்  தங்கள் வாழ்நாளில்  ஏதாவது ஒரு  கால கட்டத்தில், கால்களில்  ஏதாவது ஒரு பாகத்தை  இழக்க வேண்டிய அபாயத்தில் உள்ளனர்.  ஒவ்வொரு முப்பது வினாடிக்கும் ஒருவரது காலை  சர்க்கரை நோய்  பறித்துக்கொள்கிறது என்றும் புள்ளி விபரங்கள்  பயமுறுத்துகின்றன.

சர்க்கரை நோயாளிகளின் கால்களில் வரும் சாதாரண புண்கள்  கவனிக்கப்படாமல்  விடுவதால்தான்   அவை கால்களை நீக்கும் அளவுக்கு முற்றி விடுகின்றன.  உலகில் கால்களை   இழப்போரில்  70 சதவீதத்தினர் சர்க்கரை நோயாளிகள்  என்பது வருத்தத்துக்கு  உரிய விஷயம் . வளர்ந்த நாடுகளில்  உள்ள நோயாளிகளில் 5 சதவீதம்  பேருக்கு கால்களை இழப்போர் எண்ணிக்கை  இன்னும் அதிகமாக இருக்கிறது.

வளரும் நாடுகளில்  உள்ள சர்க்கரை  நோயாளிகளில்  40 சதவீதம் பேர் கால்கள் தொடர்பான  பிரச்னையால் ஆஸ்பத்திரிக்கு  சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களில் கவனக்குறைவுடன்  நடந்து கொள்வோர்க்கு  கால்களை இழக்கும் அபாயம்  ஏற்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு  கால்கள் இழப்பு என்பது  ஒரே நாளில் நடந்து விடுவது அல்ல.முதலில் சாதாரண  புண்களாக இருக்கும்போதே  அவர்கள் உரிய கவனம்  செலுத்தினாலே , வரவிருக்கும்  ஆபத்திலிருந்து  அவர்கள் தப்பி விடமுடியும்.  ஆறு சர்க்கரை நோயாளிகளில் ஒருவருக்கு வாழ்வில் ஏதாவது   ஒரு கட்டத்தில்  கால்களில் புண்கள் ஏற்படுகின்றன. இது சரியான நேரத்தில்  கவனிக்கப்படும்  பட்சத்தில்  49 முதல் 85 சதவீத  கால்கள் நீக்கப்படுவதை  தவிர்த்துவிடலாம்.  சரியான நேரத்தில்  மருத்துவம் பார்த்த பல நோயாளிகள்  தங்கள் கால்களை  பாதுகாத்திருக்கின்றனர். சர்க்கரை நோயாளிகளில் பலர்  தங்களுக்கு சர்க்கரை இருப்பது தெரியாமலேயே  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எளிய பரிசோதனை  மூலம் தங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா இல்லையா என்பதை அவர்களால் தெரிந்து கொள்ளலாம். 

செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் 

*கால் மரத்துப் போன  உணர்வு தென்பட்டால் உடனே டாக்டரை  அணுக வேண்டும். உணர்ச்சியற்ற  நிலையில் சிறிய புண்கள்  ஏற்பட்டால்  அதன் வலி தெரியாது.

*கால்களை  சோப்பு போட்டு  சுத்தம் செய்ய வேண்டும்.  உலர்ந்த நிலையில் பார்த்து கொள்ளவேண்டும்..

*நகங்களை வெட்டி சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்

*உங்கள் பாதங்களை  டாக்டரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.  அவரது ஆலோசனையின்படி  கால்களுக்கான  பயிற்சிகளை   ேமற்கொள்ள வேண்டும்.

*சரியான அளவுள்ள  செருப்பு.,ஷீ அணிய வேண்டும். இறுக்கமான  சாக்ஸ் அணியக்கூடாது

*உங்கள் கால்களை   சூடான தண்ணீர்  உள்ள பாட்டில் மூலம்   வெது வெதுப்பாக முயற்சிக்க வேண்டாம்.

*வெறும் கால்களுடன் நடப்பதை   தவிர்த்து விடுங்கள். சூடான தரை மீது  வெறுங்கால்களுடன்  நடப்பதை  அறவே தவிர்த்துவிடுங்கள். 

*உங்கள் கால்களில்  உள்ள புண்களை  குணப்படுத்த  நீங்களாகவே ஏதும் முயற்சி செய்ய வேண்டாம். 

*உடல் பருமனை  தவிர்த்துவிடுங்கள். கால்களுக்கு ரத்தம் செல்வது இது தடுக்கும்.

*சர்க்கரை நோய் உள்ள பெண்கள், கால் ஆபரணங்களை முடிந்த அளவில்  தவிர்த்துவிடுவது நல்லது. 

நன்றி: சரண்யா


 

Tags:    

Similar News