ஏங்க...உங்க வயிற்றின் எடையை குறைக்க என்னா செய்வீங்க? முதல்ல படிச்சு பாருங்க....
Stomach Weight Loss Tips in Tamil-மனிதர்களில் பலர் தன்னுடைய வயிற்றின் எடையை குறைக்க பல வகைகளில் முயற்சி செய்கின்றனர். எடையை குறைப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.;
Stomach Weight Loss Tips in Tamil
மனிதர்களில் பல வகைஉண்டு. தோற்றம் என்பது அவரவர்களின் உடல்நிலையைச் சார்ந்தது. ஒரு சிலர் குண்டாக இருப்பார்கள், ஒரு சிலரோ காற்றடித்தால் பறந்து போய்விடும் அளவுக்கு ஒல்லியாக இருப்பார்கள். ஒல்லியாக இருப்பவர்களுக்கு நாம் எப்போது குண்டாவோம்? என்பது கவலை.
அதேபோல்குண்டாக இருப்பவர்களுக்கு நாம் எந்த ஜென்மத்தில் ஒல்லியாக ஆவோம் என கவலை. ஒல்லியாக இருப்பவர் குண்டாக ஆவதில் எந்த பிரச்னைகளும் இல்லை.ஆனால் ஒரு குறிப்பிட்ட எடைக்கு மேல் வெயிட் போடக்கூடாது. அப்படி போட்டால் ஆபத்துதான். உடல் எடை கூட கூட நோய்களுக்கு வழி வகுக்கும்.
ஆனால் குண்டாக இருப்பவர் ஒல்லியாக ஆகத்தான் பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டும். அவரும் சைக்கிள் ஓட்டுவார். நடைபயிற்சி, யோகா, என அத்தனை வித்தை செஞ்சாலும் ஒல்லியாக மாட்டார். காரணம் என்ன? எல்லாம் கரெக்ட்தானுங்க... ஆனா சாப்பிடுவதில் பத்தியம் இருக்கணுமுங்கோ... அதுதாங்க முக்கியம். எல்லாம் செஞ்சிட்டுபசி அதிகமாகி ஒரு கட்டு கட்டினால் எப்படிங்க வயிறு எடை குறையும். தொப்பையோ தொப்பை போட்டுடுமுங்க...
பெரும்பாலானவர்களுக்கு தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைப்பது என்பது பெரும்பாலான மக்களுக்கு பெரும் பிரச்னையாகவே உள்ளது. அதுவும் பெண்களுக்கு இதைப்பற்றி சொல்ல தேவையில்லை.நம் வயிறானது கொழுப்புகளின் மையமாக மாறிவிட்டது என்பதனை நாம் மறுக்க முடியாது. இதனால் நமக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது.
நமக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு கொழுப்பே மிக முக்கிய காரணியாகிறது. ஆனால் நீங்கள் உங்கள் வயிற்றின் எடையினை மெல்ல மெல்லகுறைத்தாலே போதும் உங்கள் வாழ்க்கை சுகமாகும்.
அதிகமாக தண்ணீர்குடிங்க
உங்களுடைய உடல் எடையினை குறைக்க முதலில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அதிக தண்ணீர் குடிப்பதுதான். அதிக தண்ணீர்குடிப்பதால் உங்கள் ஆரோக்யம் பராமரிக்கப்படுகிறது. மேலும் க்ரீன்டீ, பிளாக்டீ, ப்ளாக்காபி, பழச்சாறுகள் போன்ற திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும்மிக மிக நல்லது. இதனால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பிற்கும் சிறந்தது. இவை அனைத்தும் உங்களின் எடையை குறைக்க உதவுகிறது.
நீண்ட நாட்களாக உங்களை ஆரோக்யமற்ற பொருளை சாப்பிடுவதிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் சர்க்கரை அல்லது சுத்திகரிக்கப்பட்டஎண்ணெய்கள் நிறைந்த தீனிகளை சாப்பிட இது முற்றிலும் தடுக்கிறது.
சர்க்கரை -ஸ்லோ பாய்சன்
மேலும் சர்க்கரை நிறைந்த உணவுப்பொருட்களை நீங்கள் அதிகம் உண்ணவேண்டாம்.காரணம் இவையனைத்தும் ஆக்சிடாசின் நிறைந்தவை. சர்க்கரை என்றாலோ வாயில் எச்சில் ஊறும் என்பது உண்மைதான் . என்ன செய்வது ? நமது ஆரோக்யத்தினை பாதுகாக்கனும்ங்க.இதனை ஸ்லோ பாய்சன் என்று கூட அழைக்கலாம். அவ்வளவு தீமைமிகுந்தது.
கேக்குகள், சாக்லேட்கள், குக்கீஸ் போன்ற உணவு பொருட்களில் எடைக்கு தீங்கு விளைவிக்கும் நிறைவுறா கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. இவையனைத்தும் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால்களை அதிகரி்க்குமாம்.
முழு தானியங்கள் பன்முகத்தன்மை கொண்டவை மற்றும் அவை சுத்திகரிக்கப்பட்ட தானியங்களுடன் ஒப்பிடும் போது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரொட்டி, ஆட்டா, பிஸ்கட் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைக் கொண்ட பிற பொருட்கள் குறைவாக பயனுள்ளதாக இருக்கும். ஆனால் முழு தானியங்களை உட்கொள்வது எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்கள் உணவில் ஏதாவது ஒரு வகையில் முழு தானியங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் புரதங்கள் நிறைந்த உணவுகளை நாம் அதிகம் எடுத்துக்கொள்வது நமக்கு உடலுக்கு பாதுகாப்பே. நீண்ட காலத்திற்கு உங்களை உணரவைப்பது புரதம் கலந்த உணவுகள்தான். பசியைக்குறைப்பது மற்றும் முழு ஆற்றலுடன் செல்ல உங்களுக்கு உதவுவது புரதங்கள்தான். பருப்பு, ஓட்ஸ்,பச்சைக்காய்கறிகள், முட்டை மற்றும் பாதாம் ஆகியவை சிறந்த புரத உணவுகள்.
உடல் எடையை குறைக்க உப்பு மிகவும் துணைபுரிகிறது. அதாவது உப்பில் சோடியம் உள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தின் அளவை குறைக்கிறது. வளர்சிதைமாற்றத்தினை குறைப்பதுடன் மெதுவான வளர்சிதை மாற்ற விகிதமானது ஒருவருக்கு உடல் எடையை குறைப்பதை கடினமாக்குகிறது.
. இரவு 8 மணிக்கு முன்பே இரவு உணவை சாப்பிடுமாறு உணவு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனென்றால், நாள் செல்லச் செல்ல வளர்சிதை மாற்றம் குறைகிறது, இது போன்ற உணவுகளை ஜீரணிக்க உடலை கடினமாக்குகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2