வயிற்று வலியா? அசால்ட்டா இருக்காதீங்க..

Abdomen Pain Reasons in Tamil-ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்னும் அமில எதுக்களித்தல் மற்றும் பித்தப்பை கல் போன்ற காரணங்களால் வயிறு வலி ஏற்படலாம்.;

Update: 2022-12-27 14:24 GMT

Abdomen Pain Reasons in Tamil

Abdomen Pain Reasons in Tamil-வயிற்று வலி சாதாரண வலி கிடையாது. தீவிரத்தன்மை கொண்ட உடல்நலப் பிரச்சினைகளால் இந்த வலி ஏற்படலாம். குறிப்பாக, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்னும் அமில எதுக்களித்தல் மற்றும் பித்தப்பை கல் போன்ற காரணங்களால் வயிறு வலி ஏற்படலாம்.

மேல் வயிற்றுப் பகுதியில் வலி எடுப்பது அஜீரனம், வாயுத்தொல்லை போன்ற சாதாரண வலி கிடையாது. தீவிரத்தன்மை கொண்ட உடல்நலப் பிரச்சினைகளால் இந்த வலி ஏற்படலாம். குறிப்பாக, ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்னும் அமில எதுக்களித்தல் மற்றும் பித்தப்பை கல் போன்ற காரணங்களால் வயிறு வலி ஏற்படலாம்.

இந்த இரண்டு பிரச்சினைகளுக்குமான அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதால் பெரும்பாலும் மக்கள் குழப்பம் அடைந்து விடுவார்கள். ஆகவே, இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை புரிந்து கொண்டால், அதற்கேற்ப நாம் சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். மேலும், வாழ்வியல் பழக்க, வழக்கங்களை மாற்றி கொள்ள முடியும்.

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்றால் என்ன?

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகுவதற்காக குடலில் அமிலம் சுரக்கும். இந்த அமிலமானது நமது உணவுக் குழாயை நோக்கி வராமல் இருக்க ஸ்பின்ஸ்டர் என்னும் வால்வு இருக்கும். இது தளர்வடையும் பட்சத்தில் அமிலமானது உணவுக் குழாயை நோக்கி மேலெழும்பி வரும். அதைத்தான் ஆசிட் ரிஃப்ளெக்ஸ் என்று சொல்கிறோம். இதுவே அடிக்கடி ஏற்படுமாயின், அதை ஜெர்டு என்று குறிப்பிடுகின்றனர்.

பித்தப்பை கல் என்றால் என்ன?

நமது வயிற்றின் வலது புறத்தில் இருக்கக் கூடிய சிறிய உறுப்புதான் பித்தப்பை. கல்லீரலுக்கும் கீழே இருக்கிறது. செரிமானத்திற்கு தேவையான பைல் என்னும் திரவம் இதில் சுரந்து அங்கிருந்து சிறுகுடலுக்கு வரும். அந்த செரிமான திரவமானது படிந்து நாள்பட ஒரு கல் போல உருவாகிவிடும். பெரும்பாலும் ஆரம்ப காலத்தில் இது எந்தவித அறிகுறிகளையும் காட்டாது. பெரிய அளவுக்கு தொந்தரவு ஏற்படாது. ஆனால், பிரச்சினை தீவிரமாகும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற வேண்டியிருக்கும்.

ஆசிட் ரிஃப்ளெக்ஸ் மற்றும் பித்தப்பை கல் இடையே உள்ள ஒற்றுமை

இந்த இரண்டும் வெவ்வேறான நோய்கள் என்றாலும் அறிகுறிகள் ஒன்றுபோல இருக்கின்றன. சாதாரணமாக இந்த அறிகுறிகளின் வேறுபாடு என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டால் தவறான சிகிச்சையை நீங்கள் எடுத்துக் கொள்ள நேரிடும். இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க தெரிந்து கொள்ள வேண்டும்.

பித்தப்பை கல் இருப்பவர்களுக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலமாக அது உறுதி செய்யப்பட்டாலும், அவர்களுடைய வயிற்று வலிக்கு ஆசிட் ரிஃப்ளெக்ஸ் காரணமாக இருக்கலாம். இதனால் தான் சிலருக்கு பித்தப்பை கல் அகற்றிய பிறகும் கூட வயிற்று வலி நீடிக்கிறது. அதேசமயம், ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடிப்பதன் மூலமாக இந்த இரண்டையுமே தவிர்க்க முடியும்.

இதைத்தவிர கீழ்க்கண்ட படத்தில் உள்ள பகுதியில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்

திடீர் வயிற்று வலி

1- உங்கள் தொப்புளை சுற்றி திடீர் என்று வலி , இதனுடன் சேர்த்து குமட்டல், காய்ச்சல் , வாந்தி, குடல் இயக்கத்தில் அழுத்தம் , அடிவயிற்று தசைகளில் இறுக்கம்

காரணங்கள் குடல் அழற்சி என்னும் அப்பெண்டிக்ஸ்

அடுத்தது என்ன? உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுங்கள். குடல் அழற்சியைப் போக்க உடனடியாக சிகிச்சை பெறுவது நல்லது, இல்லையேல், தொற்று பாதித்த திரவம் அடிவயிற்றின் மற்ற பாகங்களுக்கு பரவ நேரிடும் . அடிவயிற்றில் உண்டாகும் இறுக்கம், தொற்று மற்ற இடங்களுக்கு பரவுவதற்கான அறிகுறியாகும்.

2 தொப்புளுக்கு கீழே மற்றும் தொப்புளை சுற்றி வலி மற்றும் வாய்வு வெளிப்பாடு

காரணங்கள் - மலச்சிக்கல் அல்லது வாய்வு

அடுத்தது என்ன? - மலமிளக்கி அல்லது வாய்வு போக்கும் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இரண்டு வாரங்களுக்கு மேல் வலி நீடித்தால் மருத்துவரிடம் செல்லலாம்.

3 அடிவயிற்றின் வலது பக்கத்தில் உண்டான வலி, அதிகரித்து அடிவயிற்றின் பின்புறம் சென்று அடைதல்

காரணங்கள் - பித்தப்பை கற்கள் அல்லது பித்தப்பை அழற்சி

அடுத்தது என்ன? - எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளும்போது வலி அதிகரித்தால், மருத்துவரை அணுகவும்

4 தொப்புளின் இரண்டு பக்கத்திலும் மாறி மாறி வலி ஏற்படுவது

காரணங்கள் - பெருங்குடல் சீர்குலைவு, சிறுநீரக குழாய் தொற்று அல்லது இடுப்பு அழற்சி நோய்

அடுத்தது என்ன? - வலி மோசமாக இருந்தால், மருத்துவரை அழைக்கவும், பரிசோதனை செய்து, அவசர பிரிவிற்கு செல்வதை பரிந்துரைக்கவும்.

5 இடுப்பிற்கு கீழ் பகுதியிலிருந்து விலா எலும்பு வரை

காரணங்கள் - சிறுநீரக கற்கள், அல்லது இந்த அறிகுறியுடன் காய்ச்சல் இணைந்திருந்தால், சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை தொற்று

அடுத்தது என்ன? - தண்ணீர் அதிகம் பருகவும். மருத்துவரை அழைக்கவும். சிறுநீரக கற்கள், சிகிச்சையினால் வெளியேறும் வாய்ப்புகள் அதிகம், அரிதான வழக்கில், அறுவை சிகிச்சை அவசியப்படும். வலியுடன் கூடிய காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும்.

6 அதிகமான உணவு சாப்பிட்டவுடன் , மார்பு எலும்பிற்கு சற்று கீழே ஒரு வித எரிச்சல்

காரணங்கள் - நெஞ்செரிச்சல்

அடுத்தது என்ன? - எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். அன்டசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளவும். அடுத்த சில வாரங்களுக்கு வலி நீடித்தால் , மருத்துவரை அணுகவும்.

7 இடது பக்க அடிவயிற்றின் கீழ் பகுதியில் வலியுடன் கூடிய காய்ச்சல், குமட்டல் அல்லது வாந்தி

காரணங்கள் - பகுதி குடலிய அழற்சி அல்லது குரோன் நோய், பெருங்குடல் புண்,

அடுத்தது என்ன? - மருத்துவரை அணுகவும். கோலன்ஸ்கோபி செய்வதை மருத்துவர் பரிந்துரைக்கலாம். இந்த நோய்க்கு நீண்ட நாள் சிகிச்சை அவசியம்.

8 வயிற்று வலியுடன் இணைந்து இரத்த வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம் சேர்ந்து வருவது, இரத்த வாந்தி

காரணங்கள் - குடல் இயக்கத்தில் அடைப்பு, துளையிடப்பட்ட குடல் முளை, அல்லது குடலில் இரத்தப்போக்கு

அடுத்தது என்ன? - இவை அனைத்தும் உள்ளுறுப்பு இரத்தபோக்கு என்பதால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்லவும்.

9 வயிற்றில் மிதமான வலி இருப்பது, சில மாதங்கள் தொடர்ந்து வலி இருந்து கொண்டே இருப்பது, சில நேரம் வயஈற்றுப்போக்குடன் இணைந்து வலி இருப்பது, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், அல்லது வாய்வு போன்றவை உண்டாவது.

காரணங்கள் - லாக்டோஸ் சகிப்புத்தன்மை இன்மை , எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி, புண்கள், உணவு சகிப்புத்தன்மை இன்மை , கிரோன் நோய், பெருங்குடல் அழற்சி அல்லது உடற்குழி நோய் போன்ற ஒரு நாள்பட்ட வியாதி

அடுத்தது என்ன? - மருத்துவரை அணுகவும், அவர் உங்களுக்கு இரைப்பை குடை இயல் மருத்துவரை பரிந்துரைக்கலாம்.

அதிகம் புகை பிடிக்கும் அல்லது உயர் இரத்த அழுத்தம் கொண்ட வயது முதிர்தவர்களுக்கு அடிவயிற்றில் திடீர் வலி உண்டாவது, இதனுடன் சேர்ந்து லேசான மயக்கம்

சாத்தியமான காரணங்கள் - அடிவயிற்று குடல் அழற்சி

என்ன செய்ய வேண்டும் - பெருந்தமனியில் இரத்தப்போக்கு உண்டாகலாம், உடனடியாக மருத்துவமனையின் அவசர பிரிவிற்கு செல்லுங்கள்.

வயிற்றுவலிக்கான காரணங்கள்!

* நடு வயிற்றிலும், வலது பக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப் புண்ணாகவோ, பித்தப்பைக் கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம்.

* இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலியை உண்டாக்கலாம்.

* நடு வயிற்றில் எரிச்சலுடன்கூடிய வலி, வயிற்றுப் புண் சார்ந்த வலியாக இருக்கலாம்.

* விலா எலும்பில் பின் முதுகின் இரு பக்கங்களில் இருந்து முன் பக்கம் சிறுநீர்ப்பை நோக்கி வரும் வலி, சிறுநீரகக் கல்லின் வலியாக இருக்கலாம்.

* பெண்களுக்கு அடி வயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடி வயிற்றின் மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம்.

இவற்றைத் தாண்டி, அப்பெண்டிக்ஸ் வலி, அடினோமயோசிஸ் வலி... என வயிற்றுவலிக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. எல்லா வலிகளுக்குமே `ஒரு சோடா குடிச்சா, சரியாகிடும்', என்ற அலட்சியமும், 'ஓ பகவான் கூப்பிட்டுட்டார்' என்ற பேச்சும் ஆகாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது முக்கியம்.

முதலில் மலச்சிக்கலை நீக்கி, உடல் வாதத்தைக் குறைக்க வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களை அதிகம் சாப்பிட வேண்டாம். அதோடு, பட்டினி முதலிய பித்தம் சேர்க்கும் விஷயங்களையும் தவிர்க்கவும் என்பதே தமிழ் மருத்துவம் கூறும் முக்கிய பரிந்துரைகள்.

பித்தைப்பைக் கல் வராமல் தடுக்கவும், சிறிய கல்லாக இருந்தால் சிரமம் கொடுக்காமல் இருக்கவும், பின் வரும் வழிகள்...

வெள்ளைப் பூ பூக்கும் கரிசலாங்கண்ணிக் கீரையை விழுதாக அரைத்து, இரண்டு சுண்டைக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து, ஒரு மாத காலம் சாப்பிடலாம்.

ஒரு சாண் அளவு வளர்ந்திருக்கும் கீழாநெல்லிச் செடியை வேருடன் பிடுங்கி, நன்கு கழுவி, அரைத்து மோரில் இரண்டு சுண்டைக்காய் அளவு கலந்து சாப்பிடலாம்.

சீரகத்தை ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொன்றாக கரும்புச் சாறு, கீழாநெல்லிச் சாறு, எலுமிச்சைச் சாறு, முசுமுசுக்கைச் சாற்றில் ஊறவைத்து வெயிலில் நன்கு உலர வைத்து அதை மிக்ஸியில் நன்கு பொடித்து, காலையில் இரண்டு டீஸ்பூன், மாலையில் இரண்டு டீஸ்பூன் என உணவுக்கு முன்னதாகச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

வாரம் ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது, உடலில் பித்தத்தைத் தணிக்கும்; கல் வராமல் தடுக்க உதவும். பித்தப்பைக் கல் உள்ளவர்கள் தலைக்கு குளிர்தாமரைத் தைலம், கீழாநெல்லித் தைலம், காயத்திருமேனித் தைலம் என இவற்றில் ஒன்றைத் தேய்த்துக் குளிப்பது நல்லது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News