இரைப்பை, குடல் புண்களை சீராக்கும் ராணிடைடின் மாத்திரை பற்றி தெரியுமா?

Vayiru Pun Symptoms in Tamil-மனிதர்களாக பிறந்த நமக்கு நோய்கள் எங்கிருந்து வருகிறது என்பது தெரிவதே இல்லை. காலையில் நன்றாக இருப்பவர் மாலையில் உடல் நலம்கெடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்? எப்படி? நோய்கள் பலவிதம். அதில் ஒவ்வொன்றும் ஒருவிதம். குடல் புண் நோயைக்குணப்படுத்தும் மருந்து பற்றி பார்ப்போம்.;

Update: 2022-08-22 06:59 GMT

Vayiru Pun Symptoms in Tamil

Vayiru Pun Symptoms in Tamil

நமக்கு உடல் நல பாதிப்பு என்றாலே உடனே நாம் டாக்டரிடம் செல்ல ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுக்கிறோம். அவரும்நம்மை பல கட்ட பரிசோதனைகள் செய்தபின் நம் பாதிப்புக்கான மருந்து, மாத்திரைகளை எழுதி தருகிறார். இதில் ஒரு சிலர் அவர் எழுதிக்கொடுத்த மாத்திரை மருந்துகளை முழுவதும் வாங்கி விடுவர். ஒரு சிலரோ முதலில் 3 நாட்களுக்கு மட்டும் சாப்பிடுவோம். அப்புறம் குணமாகிவிட்டால் தேவையில்லை என்ற கணிப்பில் இவராகவே ஒரு முடிவுக்கு வந்து வாங்குகிறார்? இதுபோல் செய்வதால் நம் நோயானது முற்றிலும் குணமாகுமா? என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது.

ஆனால் அக்காலத்தில் இருந்த டாக்டர்கள் அனைவருமே முதலில் ஒரு மூன்று நாளைக்கு மூன்று வேளைக்கு மட்டுமே மாத்திரை மருந்துகளை பரிந்துரைப்பார்கள். அதுவும் மருந்து என்பது அவர் கிளினிக்கில் தயார் செய்த அளித்த ஆஸ்பத்திரிகளும் உண்டு. ரோஸ், சிவப்பு என இரண்டு கலரில் மருந்து இருக்கும். டாக்டரை பார்த்தவுடன் நமக்கு ஒரு டோஸ் மருந்து அங்கேயே தருவார்கள் மீதியை பாட்டிலில் ஊற்றி அளவுக்காக பேப்பரை வெட்டி அதன் மேல் ஒட்டி தந்த காலங்களும் உண்டு. ஆனால் காலமும் மாறியது. மாத்திரை, மருந்தினை சாப்பாடு போல சாப்பிடும் நிலையாகிவிட்டது. இரைப்பை, குடல் புண்களை ஆற்றும் குணம் கொண்ட ராணிடைன் மாத்திரையின் பயன்கள் பற்றி பார்ப்போமா?

நாம் மருந்தினை உட்கொள்ளும் முன்னர் அதனைப்பற்றிய பொதுவான தகவல்களை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது. இரைப்பை , குடல்புண்களை ஆற்றும் குணம் கொண்ட மருந்தான ராணிடைன் மாத்திரையைப் பற்றி் பார்ப்போம்.

நம் குடலில் ஏற்படும் அல்சர் அதாவது சிறு குடல் புண்களை சரி செய்யவும், மேலும் அல்சர் புண் ஏற்படாமல் இருக்கவும் இந்த மாத்திரையானது பயன்படுத்தப்படுகிறது. இரைப்பை புண், வயிற்றுப் புண்ணை, சரிசெய்ய உதவுகிறது.

நம்முடைய உணவுக்குழாயில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும்  வயிற்று எரிச்சலை சரிசெய்யவும் உதவுகிறது.உணவு குழாய் வீக்கம், முன் சிறுகுடல் புண், போன்றவை சரி செய்ய உதவுகிறது.இரைப்பையில் சுரக்கப்படும் அமில அளவு அதிகரிக்கும்போது அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.வயிற்றுக்குள் சுரக்கப்படும் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

பக்க விளைவுகள்

இந்த மாத்திரை பயன்படுத்துவதன் மூலம் தலைவலி, நெஞ்சு வலி, தசை வலி, வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.மூச்சு விடுவதில் சிரமமாக இருக்கும், தோல் வெடிப்பு, தலைசுற்றல், வாந்தி, குமட்டல், மயக்கம், ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.மனக்குழப்பம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, ஹைபர்சென்சிடிவிடி, போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.கடுமையான கணைய அழற்சி, மூட்டுவலி, மார்பகபெருக்கம், கல்லீரல் சுரக்கப்படும் நொதிகளில் மாறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.முகம், உதடுகள், நாக்கில் வீக்கம், தூக்கமின்மை, மயக்க உணர்வு, போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.மேற்சொன்ன பக்க விளைவுகளுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை கலந்து ஆலோசனை பெறுவது நல்லது.

யாருக்கு கூடாது-?

கல்லீரல், சிறுநீரக நோய் மற்றும் சில உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் டாக்டர் பரிந்துரைத்த பின்னரே இம்மாத்திரையினை உட்கொள்ள வேண்டும். மேலும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தை பெற திட்டமிட்டுள்ளோர், பாலுாட்டும் தாய்மார்கள் இந்த மாத்திரையை உட்கொள்ள கூடாது. மேலும் டாக்டர் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு எவ்வளவு மாத்திரை எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும் என பரிந்துரைப்பார். அதனை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருந்தின் தன்மைகள்

ராணிடைடின் என்பது வயிற்றுக்குள் சுரக்கப்படும் அமிலத்தின் அளவைக் குறைக்கும் ஒரு மருந்து ஆகும். இது வயிறு எரிச்சல் மற்றும் வயிற்றுப்புண்களுக்குச் சிகிச்சை செய்வதற்கு மற்றும் தடுப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சில குறிப்பிட்ட மருந்துகள் மற்றும் நோய்களினால் வயிறு சேதமடைவதைத் தடுப்பதற்கும் இது உபயோகிக்கப்படுகிறது.இம்மருந்தானது மாத்திரை,திரவம், மற்றும் ஊசிமருந்து போன்றவைகளில் கிடைக்கிறது.உங்களுக்கு அலர்ஜி பிரச்னை ஏதாவது இருப்பின் முன்னதாகவே டாக்டரிடம்அதுகுறித்த தகவல் தெரிவித்துவிடவும்.

உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகளில் ஏதாவது இருந்தால், உங்கள் பிள்ளையின் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசவும். உங்கள் பிள்ளைக்குப் பின்வரும் நிலைமைகள் இருந்தால் முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்:சிறுநீரக நோய் பிரச்னைகள் இருப்பின் அதுகுறித்தும் தகவல் அளித்துவிடவும்.

இம்மருந்தினை உணவுடன் அல்லது உணவுடனில்லாமலும் கொடுக்கலாம். உங்கள் பிள்ளைக்கு வயிற்றுக்குழப்பத்தை ஏற்படுத்தினால் அதை உணவுடன் சேர்த்து கொடுப்பது அதைத் தடுப்பதற்கு உதவி செய்யக்கூடும்.உட்கொள்ளத் தொடங்கியவுடனேயே நிவாரணமடையத் தொடங்குவான்(ள்). முழுப்பலனை அடைவதற்கு பல நாட்கள் செல்லலாம்.

நீங்கள் அறிந்திருக்கவேண்டிய வேறு முக்கியமான தகவல்கள் எவை?

உங்கள் பிள்ளை உட்கொள்ளும் எல்லா மருந்துகளின் பட்டியலையும் வைத்துக்கொள்ளவும் மற்றும் அதை மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் காண்பிக்கவும்.உங்கள் பிள்ளையின் மருந்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டாம். வேறொருவரின் மருந்தை உங்கள் பிள்ளைக்குக் கொடுக்கவேண்டாம்.வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், மற்றும் விடுமுறைச் சுற்றுலா நாட்கள் வரை நீடிக்கக்கூடிய, போதியளவு ராணிடைடின் மருந்தை எப்போதும் கைவசம் வைத்திருக்க நிச்சயமாயிருங்கள். உங்கள் பிள்ளையின் மருந்து தீர்ந்துபோவதற்கு 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, உங்கள் மருந்துக்கடையை அழைக்கவும்ராணிடைடின் மருந்தை அறை வெப்பநிலையில், குளிரான, உலர்ந்த இடத்தில் சூரியவெளிச்சம் படாமல் வைக்கவும். குளியலறை அல்லது சமயலறையில் வைக்க வேண்டாம்.காலாவதியான எந்த மருந்துகளையும் வைத்திருக்கவேண்டாம். காலாவதியான அல்லது மீந்துபோன மருந்துகளை எறிந்து விடுவதற்கான மிகச் சிறந்த வழி என்ன என்பதை உங்கள் மருந்தாளரிடம் கேட்கவும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News