எலும்புக்கு வலுசேர்க்கும் உலர் பிளம்ஸ் பழம் பற்றி தெரியுமா?....படிச்சு பாருங்க...
Pitted Prunes in Tamil-நாம் அன்றாடம் சாப்பிடும் பழவகைகளில் சத்துகள் அதிகம் உள்ளது. இருந்த போதிலும் பல பிரச்னைகளுக்கு இப்பழமானது தீர்வு அளிக்கிறது. உலர் பிளம்ஸ் வகைப் பழம்.....;
Pitted Prunes in Tamil
மாறிவரும் பரபரப்பான வாழ்க்கை முறையில் தினந்தோறும் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்லும் வரை டென்ஷனாகவே உள்ளது போல் நம் மனது சொல்கிறது. காரணம் என்ன?தொழில்நுட்ப வளர்ச்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் எந்த வித மெஷின்களின்ஆதிக்கமும் இன்றி நாம் நாமாகவே வேலை பார்த்தோம். ஓய்வெடுத்தோம். பொழுது போக்கிற்காக டென்ட்கொட்டகைக்கு சினிமாக்கு சென்றோம்.வெள்ளி தோறும் சித்ரகார் பார்த்தோம், ஒலியும், ஒளியும் பார்த்தோம். இதனால் நம் மனசு அமைதியாக எந்தவித ஆர்ப்பாட்டமின்றி இருந்தது.
ஆனால் இன்றோ.... மெஷின்களுக்கு மத்தியில் நரக வாழ்க்கை... ஆமாங்க கம்ப்யூட்டரும் ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் மெஷின்தானே. ஆக காலை வந்து உட்கார்ந்தால் கம்ப்யூட்டர் நமக்கு ஒத்துழைப்பு கொடுத்தால்தான் வேலை. இல்லாவிட்டால் டென்ஷன்தான் போங்க... இது இனி நாம் இறக்கும் வரை இந்த போராட்டம் தொடரும். மேலும் பத்தாக்குறைக்கு ஸ்மார்ட் போன் இதில் நல்ல செய்திகளும் வரும். ஒரு சிலநேரத்தில் கெட்ட செய்திகளும் வரும். ஆக பிரச்னைகளை நாம் செல்போன் வடிவில் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தீர்வு காணாமல் இருந்தால் பிரச்னைகள் பிரச்னைகள்தான் நிரந்தரமாகவே? எப்படிங்க ...
சத்துகள் மிகுந்த உலர்ந்த ப்ளம்ஸ் பழங்கள் (கோப்பு படம்)
இன்றைய இளைய தலைமுறையும் சரி,குட்டீஸ்களும் சரி பொறித்த தின்பண்டங்களில்தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ளது.இயற்கை விளைபொருட்கள், உடலுக்கு சத்தான உணவுகளின் மேல் இவர்களுக்கு நாட்டமே இல்லை என்று கூட சொல்லலாம். ஆனால் நமக்கு உடல் நலம் சரியில்லை என்று டாக்டரிடம் சென்றால் அவர் சொல்லும் முதல் வார்த்தை சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் என்று தான் சொல்வார்.நாம் சாப்பிடுவது அனைத்துமே விஷம்.. எப்படி சத்து வரும்? விரைவில் விலை போகணும் என்று கண்ட கண்ட உரத்தினை போட்டு வளர்க்கின்றனர்.
சரி விஷயத்துக்கு வருவோமா? வாங்க... நாம் சாப்பிடும் பழங்கள் ஒவ்வொன்றிலும் சத்துகள் மாறுபடும்.ஒவ்வொரு பழத்துக்கும் ஒவ்வொரு சத்து இருக்கும். அந்த வகையில் உலர் பிளம்ஸ் என்று சொல்லக்கூடிய இப்பழத்திலும் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன.
உலர்ந்த என்றாலே வேகவைத்து உலர்த்துவதா? என கேட்காதீர்கள். இப்பழமானது இயற்கையாகவே உலர்த்தப்படுகிறது. நம்முடைய உடல் ஆரோக்யத்துக்கும், தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும், முடிப்பாதுகாப்பிற்கும் பெரிதும் துணைபோகிறது உலர் பிளம்ஸ் பழங்கள்.
முன்பெல்லாம் வயது மூப்பினால் மூட்டுவலிகளைச் சந்தித்து வந்தனர். ஆனால் நாகரிக காலத்தில் குறைந்த வயதிலேயே மூட்டுவலியினைச் சந்திக்கின்றனர். இதற்கு காரணம் எலும்புகள் வலுவில்லாமல் போனதோடு எலும்பு தேய்மானம் எளிதில் நடந்தேறுவதும் ஒரு காரணமாகும்.
எனவே எலும்பு அடர்த்தியில் பெரும் தாக்கத்தினை உண்டு செய்ய உலர் திராட்சை, பேரீச்சை, அத்திப்பழங்களுக்கு பதிலாக தற்போது அந்த வரிசையில் சேர்ந்துள்ளது உலர் பிளம்ஸ் பழங்களும். இதுவும் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. புளோரிடா ஆராய்ச்சி வல்லுனர் இதுகுறித்து தெரிவிக்கையில் உலர்ந்த பிளம்ஸ் மற்ற பழங்களைப் போலவே சத்தானவை என்றாலும் இதன் கூடுதல் சிறப்பு எலும்புகளின் ஆரோக்யத்தில் முக்கிய இடம்பெறுவதாக உலர்ந்த பிளம்ஸ் பழங்கள் உள்ளன.
இப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.மேலும் இப்பழத்தில் இரும்பு , பொட்டாசியம், மற்றும் ரெட்டினோல் உள்ளிட்ட வைட்டமின்கள் உள்ளிட்டதாதுக்களின் சக்தியாக நிரம்பியுள்ளது. இந்த பழத்தில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. மேலும் பீட்டா கரோட்டீனும் உள்ளது .கப் உலர் பிளம்ஸில் தோராயமாக 23 கிலோகலோரி மற்றும் 0.7 கிராம் நார்ச்சத்து உள்ளது
ஒரு கப் உலர் பிளம்ஸ் எடுத்துகொள்வது தினசரி அளவில் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் கே உட்கொள்ளலை 87% வைட்டமின்களில் பி வைட்டமின் ஆனது 20% அதிகமானவை. மேலும் இதில் 8% கால்சியம் மற்றும் 27% பொட்டாசியம் ஆகியவற்றை வழங்குகிறது.
நன்மைகள்:
யுனைடெட் ஸ்டேட்ஸ் வேளாண்மைத்துறையின் அறிக்கை படி, 100 கிராம் கொடி முந்திரியில் 240 கிலோகலோரி, 2.18 கிராம் புரதம், 7. 1கிராம், ஃபைபர் மற்றும் சுமார் 63.88 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
கண்பார்வை மேம்படும்
நல்ல பார்வைக்கு வைட்டமின் ஏ பெரிதும் துணைபுரிகிறது. வைட்டமின் ஏ பெறுவதற்கான உணவு உட்கொள்ளலில் இப்பழமானது 3 சதவீதத்தினை தன் பங்காக அளிக்கிறது. வைட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளான மாலைக்கண்நோய், மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை ஆகியவை வைட்டமின் ஏ குறைந்தால் ஏற்படும். இப்பிரச்னைகள் தீர உலர்ந்த பிளம்ஸ் துணைபுரிகிறது.
ஆக்ஸிஜனேற்ற அளவில் அதிகமாக இருக்கலாம். ஆனால் ஆச்சரியமான வகையில் உலர் பிளம்ஸிலும் அதிகமாக உள்ளது. பாஸ்டனில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் ஆக்ஸிஜனேற்ற திறன் அடிப்படையில் உலர் ப்ளம்ஸ் இடம்பிடித்துள்ளது.
உலர் பிளம்ஸில் இரும்பு,மாங்கனீசு தாவர பினோலிக்ஸ் ஆகியவை உள்ளன. இவையனைத்தும் ஆக்சிஜனேற்றிகளாக செயல்படுகின்றன. உயிரணு சவ்வுகளை ஃப்ரீ ரேடிக்கல்ஸிலிருந்து சேதத்தினைப் பாதுகாக்க செய்கின்றன.
இதயத்தினைக் காக்கிறது
உலர்ந்த ப்ளம்ஸ் பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. நம் உடலுக்கு பொட்டாசியம் அவசியம் தேவை.இருதய செயல்பாட்டினைச் சீராக்குகிறது.உடல் முழுவதும் நரம்புகள் செயல்பாட்டினைச் சீராக வைத்திருக்க உதவுகிறது என இதய சிறப்பு மருத்துவ நிபுணரே கருத்து தெரிவித்துள்ளார்.
பொட்டாசியம் தினமும் உடலுக்கு செல்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் தலைச்சுற்றல், இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்னைகளினால் ஏற்படும்அபாயத்தினைக் குறைத்து பாதுகாக்கிறது.
மலமிளக்கியாக
ஒரு சிலருக்கு மலச்சிக்கல் பிரச்னை தொடர்ந்து இருக்கும். இதனால் அவர்கள் மிகவும் சிரமப்படுவர். இதுபோன்ற நோயாளிகளுக்கு இந்த உலர்ந்த பிளம்ஸ் கண்கண்ட மருந்தாக திகழ்கிறது.
இந்த உணவினை சரியாக ஜீரணிக்க உதவுகிறது. மலச்சிக்கலை போக்கவும் வழக்கமான குடல் பிரச்னைகளின் இயக்கத்தினைச் சீராக கொண்டுள்ளது. நார்ச்சத்து மற்றும் சர்பிடாலை அதிகம் கொண்ட பழமாக உலர்ந்த பிளம்ஸ் உள்ளது.
பழங்களில் பொதுவாகவே நார்ச்சத்து அதிகம் காணப்படும். இந்த வகைப் பழங்களில்இருந்து தினசரி நார்ச்சத்து விகிதத்தில் 3 சதவீதத்தினை இது வழங்குகிறது.இப்பழத்தில் இயற்கையாகவே இருக்கும் சர்க்கரை சர்பிடால் மலமிளக்கியாக செயல்படுகிறது. குடல் இயக்கத்துக்கு உதவுகிறது.
முடிப்பிரச்னைகள்
நாகரிக உலகத்தில் சிறுவயதிலேயே இளைஞர்கள், மற்றும் இளைஞிகளுக்கு முடிஉதிர்தல் என்பது பெரும்பிரச்னையாவே உள்ளது. இதுபோன்று முடி வறட்சி மற்றும் உதிர்தல் பிரச்னைகளுக்கு இரும்புச்சத்து அதிகம் உள்ள இந்தப்பழம் உதவுகிறது. ஒட்டுமொத்த முடி ஆரோக்யத்துக்கு தகுந்த பாதுகாப்பினைக் கொடுக்கிறது.
வைட்டமின் சி , வைட்டமின் பி ஆகியவை தலைமுடியை வேர்களிலிருந்து வலுப்படுத்தி சேதத்திலிருந்து முடியைப் பாதுகாக்கிறது.
இப்பழத்திலுள்ள சத்துகள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை இணைந்து நம் சருமத்தினைப் பாதுகாக்க உதவுகிறது. சரும சுருக்கங்களின் வளர்ச்சியை தாமதப்படுகிறது. இது ஒரு சருமத்தினை ஒளிர செய்கிறது.
இது அதிகமான அளவு எடுத்துக்கொள்ளக்கூடாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எடை பராமரிக்கும் நிபுணர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். மேலும் இது நம் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. உயர்ந்த ஊட்டச்சத்து மதிப்புள் இருந்தாலும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
எதுவாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம். எனவே சத்து அதிகமாக உள்ளது என அதிகமாக சாப்பிட்டுவிடக்கூடாது. பிறகு பக்கவிளைவுகளை அனுபவிக்க நேரிடும். எனவே முடிந்த வரை தேவையான அளவுக்கு எடுத்து உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துங்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2