ஒமைக்ரான் வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் என்ன? :உங்களுக்கு தெரியுமா?

omicron symptoms in tamil கொரோனா என்ற கொடியநோயானது உலகமக்களைத் தாக்கி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் உருமாற்றமடைந்த ஒமைக்ரானும் மக்களைத் தாக்க துவங்கி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. படிங்க...

Update: 2022-12-11 07:25 GMT

உலகையே உலுக்கிய  கொரோனா வைரஸின் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் (கோப்பு படம்)


omicron symptoms in tamil

2020 ம் ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் இந்தியாவுக்கு வந்த கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலோச்சி பல உயிர்களைக் காவு வாங்கியது. இது மட்டும் அல்லாமல்  கடும் பொருளாதார சரிவு, வாழ்வாதார சிக்கல் என பல வகைகளிலும் உலக நாடுகளை உருக்குலையச் செய்தது.

omicron symptoms in tamil


கொரோனா வைரஸ் தொற்றின் மாதிரிப் படம் (கோப்பு படம்)

omicron symptoms in tamil

நன்றாக ஆரோக்யமாக இருந்தவர்கள் திடீர் திடீரென மரணமடைந்தனர். இது தொற்று வைரஸ் நோய் என்பதால் உறவுகள் கூட ஏன்? அந்த குடும்பத்தார் கூட இறுதிக்காலச் சடங்குகளை செய்ய முடியாமல் போனவர்கள் ஏராளம். இதுபோன்ற தொற்று நோயை இதுவரை இந்திய மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். வீட்டை விட்டு வெளியில் வர கட்டுப்பாடுகள். அந்த அளவிற்கு தேசிய கட்டுப்பாடுகள் இரண்டு மாதங்களுக்கு அமல்படுத்தப்பட்டது. நாடுமுழுவதும் நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பல நிறுவனங்கள் கடும் பொருளாதார சரிவினைச்சந்தித்தன. அதுவும் கடன் வாங்கியவர்களின் நிலையோ திண்டாட்டமாகி போய்விட்டது. காரணம் வேலை இல்லை. சம்பளம் இல்லை. என்ன செய்வது?

இதுபோல் பலவிதத்தில் அதிர்ச்சியளித்த கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர இந்திய சுகாதாரத்துறையும் மாநில சுகாதாரத்துறைகளும் கடும் முயற்சிகள் மேற்கொண்டதன் விளைவாக படிப்படியாக இந்நோய் பரவாமல் இருக்கும்படி கட்டுக்குள் கொண்டு வந்தனர். முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500அபராதம் என கடும் எச்சரிக்கை விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டதால் பலரும் தெருவில் செல்லும்போது முகக்கவசம் அணிந்தே சென்றனர். தற்போதும் பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

omicron symptoms in tamil


ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் மாதிரி படம் (கோப்பு படம்)

omicron symptoms in tamil

கொரோனா அலை இந்தியாவில் ஓய்ந்த போது ஒமைக்ரான் என்ற வைரஸ் பரவல் அடுத்தபடியாக வரத் துவங்கியது. இது வீரியம் மிக்க வைரஸ் என்று ஆரம்ப கால கட்டத்தில் விஞ்ஞானிகள் சொன்னாலும் படிப்படியாக இதுவும் தன் வேலையைக் காட்டத் துவங்கியது.

கொரோனவிற்கு பிறகு டெல்டா வைரஸ் என்றொரு வைரஸ் பரவத்துவங்கியது. அதற்கு பிறகு வந்த ஒமைக்ரான் ஆரம்பத்தில் இதனால் பாதிப்பில்லை என சொல்லப்பட்டாலும் படிப்படியாக இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என அறிவியல் நிபுணர்களே சொல்லத்துவங்கினர்.உடல்சோர்வு மட்டுந்தான் ஒமைக்ரானுக்கு அறிகுறி என்று துவக்க காலத்தில் சொன்னாலும் வேறு சில அறிகுறிகளும் இதனால் பாதித்தநோயாளிகளுக்கு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண காய்ச்சல் என்று அலட்சியமாக இருந்துவிடுகின்றனர். பின்னர் இது குணமாகாத நிலையில் தீவிரமடைந்தபின் டாக்டரை நோக்கி படையெடுக்கின்றனர். இது முற்றிலும் தவறான செயலாகும். காய்ச்சல் என்று வந்துவிட்டாலே டாக்டரைச் சந்தித்துவிடுவது நல்லது. காரணம் இது என்ன வகை காய்ச்சல் என்று நம்மால் உடனடியாக அறிவது கடினம்.

omicron symptoms in tamil


கோவிட் 19 உருமாறிய நிலையில் ஒமைக்ரான் வைரஸ் (கோப்பு படம்)

omicron symptoms in tamil

எனவே காய்ச்சல் என்று வந்துவிட்டால் 3நாட்களுக்கு மேலும் காய்ச்சல் குணமாகாத பட்சத்தில் உடனடியாக தக்க டாக்டரைக் கலந்து ஆலோசிப்பதே நமக்கு பாதுகாப்பு என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒமைக்ரான் அறிகுறிகள்

ஒமைக்ரான் பாதித்த நபருக்கு தலைவலி,மூக்கு ஒழுகுதல், தும்மல், தொண்டைப்புண், தொடர்இருமல், கரகரப்பான குரல், குளிர் அல்லது நடுக்கம், காய்ச்சல், தலைச்சுற்றல், மூளையோசிப்பு மந்தநிலை, வாசனை மாற்றம், கண்வலி, கடுமையான தசை வலி, பசியின்மை, வாசனை இல்லாமை, நெஞ்சுவலி, சுரப்பிகளின் வீக்கம், பலவீனம், தோல் பகுதியில் தடிப்புகள் இவையெல்லாம் ஏற்படலாம்.

எவ்வளவு நாள் நீடிக்கும்?

முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவியது. பின் அதனைக்கட்டுக்குள் கொண்டுவந்தபின் இரண்டாவது கட்டமாக டெல்டா வைரஸ் பரவியது. இது சற்று தாமதமாக ஒரு வார கால அவகாசம் எடுத்தது. ஆனால் டெல்டாவை விட ஒமைக்ரான் அதிதீவிரமாக உள்ளது. அதாவது ஒமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் 2 முதல் 5 நாட்களுக்குள் அறிகுறிகளால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

omicron symptoms in tamil


பி4 மற்றும் பி5 காரணிகள் கொண்ட ஒமைக்ரான் வைரஸ் படம் (கோப்பு படம்)

omicron symptoms in tamil

இங்கிலாந்து தொற்றுநோயியல் நிபுணர்களின் கருத்துப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஜலதோஷம், போன்ற அறிகுறிகளால் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு நீடிக்கும். மேலும் சமூக விலகல், மாஸ்க் அணிதல், மற்றும் கட்டுப்பாடுகளின் காரணமாக பெரும் தாக்கம் ஏற்பட்டு காய்ச்சலும் , பாதிப்புகளும் குறைந்துள்ளன.

மற்றொரு நிபுணர் தெரிவிக்கும்போது, ஒமைக்ரான் பாதிப்பானது டெல்டாவை விடகுறைந்த நாட்களுக்குத்தான் நீடிக்கும். அதாவது 5 நாட்களுக்கு பிறகு எடுக்கப்படும் பரிசோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்தால் 5 நாட்களில் அறிகுறியும் நின்றுவிடும்.

ஒமைக்ரான் அறிகுறிகளைப் பொறுத்தவரை அது எவ்வளவு வேகமாகத் தோன்றுகிறதோ அந்த வேகத்திலேயே அவை நம்மை விட்டு விலகிச் சென்று விடுகின்றன. பெரும்பாலானவர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் முதல் மூன்று அல்லது 5 நாட்கள் வரைதான் நீடிக்கும். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் இதன் அறிகுறிகள் சற்று லேசாக காணப்படுகிறது. ஆனால் தடுப்பூசியே போட்டுக்கொள்ளாதவர்களைப் பரிசோதித்து பார்க்கும்போது ஒமைக்ரான் பாதிப்பானது கடுமையாகவே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு திறன்

ஒமைக்ரான் வைரஸ் தொற்று நோயால் பாதிப்படைந்தவர்களின் நோய் எதிர்ப்புதிறனானது நன்றாகவே இருக்கும் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. தொற்று நோய் நிபுணர்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது, ஒமைக்ரான் ஏற்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தியானது அந்த வேரியன்டுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும் என்று தெரிவிக்கிறார்.

ஆனால் லண்டனைச் சேர்ந்த தொற்று நோய் நிபுணர்கள் கூறுகையில், அதிக அளவு டி செல்கள் கோவிட் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கும் என்பதை நாங்கள் கண்டறிந்தோம். இது ஒரு வகையில் மக்களுக்கான பாதுகாப்பு மட்டுமே. முக்கியமான கண்டுபிடிப்பு என்றாலும்இதனை வைத்து நாம் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.

omicron symptoms in tamil


ஒமைக்ரான் மாதிரிப் படம் (கோப்பு படம்)

 omicron symptoms in tamil

கொரோனாவிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் தடுப்பூசி , பூஸ்டர் டோஸ் ஆகியவைகளைச் செலுத்திக்கொள்வதுதான் ஆரோக்யத்துக்கு பாதுகாப்பு என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீண்ட கால அறிகுறிகள்

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர் நன்கு குணமான பின்னரும் ஒமைக்ரான் ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. 12 வாரங்கள் வரை ஒரு சிலருக்குஇந்த அறிகுறிகள் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் தலைவலி, சோர்வு, துாக்கக்கலக்கம், செரிமான சிரமங்கள், வயிற்றுவலி இவைகள் அனைத்தும் அந்த நோயாளிகள் குறிப்பிடும் அறிகுறிகளாகும். எனவே நோய் வரும் முன்பே பொதுமக்கள் கவனமுடன் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதே நல்லது.

Tags:    

Similar News