வெள்ளைப்பூண்டிலுள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு ?

medicinial characters of garlicநாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் உள்ள தாதுச்சத்துக்கள் மறைமுகமாக நமக்கு ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. அந்த வகையில் வெள்ளைபூண்டிலுள்ள மருத்துவ குணங்களை பார்ப்போமா?;

Update: 2022-08-02 08:53 GMT

medicinial characters of கார்லிக் மருத்துவ குணம் மிகுந்த பூண்டு ரசம் 


 



medicinial characters of garlicஇயற்கை அளித்த வரப்பிரசாதம்  வெள்ளைப் பூண்டு.இதனை உணவில் சேர்த்துக்கொள்வதினால்   நோய்கள் அண்டாது.  இது ஒரு கிருமி நாசினியாகும். 

பொதுவாக வீட்டில் பிரசவ காலத்தில்  தாய்க்கு பூண்டு லேகியம் ,பூண்டு காரம், பூண்டு ரசம் கொடுப்பார்கள்.அதற்கு காரணம்  பூரண ரண ஜன்னி  தொற்று வியாதி,இசிவு,  சளி, கப, சுரம்- இவைகள் ஏற்படாமல்  தடுக்கும் தன்மையுடையது. 

தவிர தாய்ப்பால்  சுரப்பை அதிகரிக்க செய்யும் . பால்குடிக்கும் குழந்தைக்கு  நோய் எதிர்ப்பு சக்தியை  அளித்து வாயுக்கோளாறு ,வயிற்றுக்கோளாறு  சளி இவைகள் உண்டாகாமல் தடுக்கும் ஆற்றல் உண்டு.சித்த வைத்தியத்திலும், இயற்கை வைத்தியத்திலும் வெள்ளைப்பூண்டு,  நிறைய நோய்களுக்கு   மருந்தாக பயன்படுகிறது-

யுனானி மருத்துவத்தில்   ஞாபகமறதி,  குளிர் நடுக்கம், பக்கவாதம், போன்ற நோய்களை   நீக்க வெள்ளைப்பூண்டு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளைப் பூண்டில்  ஏ, சி, வைட்டமின்கள்  ஏராளமாக இருக்கின்றன.  அத்துடன்  முக்கியமான உப்பு சத்துகளும்,  கந்தக சத்தும் இருப்பதினால்  தீராத  நோய்களையும் தீர்க்கும் ஆற்றல் பெற்றவையாக  விளங்குகின்றன.

விரை வாய்வு

விரை வாய்வு உண்டானால்  கஷ்டத்தைக் கொடுக்கும். இந்த கஷ்டத்தை  போக்கிக்கொள்ள  வைத்தியமுறை. உரித்தபூண்டு இருபத்தைந்து கிராம், மிளகு பதினைந்து கிராம்,  களர்ச்சி வேர்  அறுபது கிராம் இம்மூன்றையும்  சேர்த்து அரைத்து  எடுத்துக்கொள்ளவும்.அதில் விளக்கெண்ணெய் ஏற்றி  வேகவைத்து கிளறி மூன்று பாகமாக பங்கிட்டுக்கொள்ளவும். அதில் ஒரு பாகத்தை  எடுத்து காலை வேளை  மட்டும் சாப்பிடவும்.  இதுபோன்று மூன்று நாட்கள் மூன்று பாகத்தை  காலை வேளையில்  சாப்பிடலாம்.  இது போன்று  சாப்பிட்டால்  விரைவில் விரைவாய்வு  அகன்றுவிடும். 

வெள்ளைப்படுதல்

பல வித காரணங்களால்  சிலபெண்களுக்கு வெள்ளைபடுவதுண்டு. இதற்கு வைத்தியம் செய்து கொளள்வில்லையென்றால் பின்னாளில் பெருந்தொல்லைக்கு  ஆளாக கூடும். இதனை வெள்ளைப்பூண்டு மிக எளிதாக போக்கிவிடும். 

தோல் நீக்கிய  வெள்ளைப்பூண்டு நுாறு கிராம் எடுத்து நன்றாக  இடித்து சாறு   பிழிந்து தினசரி   காலையில் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால்  பூரணமாக குணமடைந்துவிடும். 

ஜன்னி

medicinial characters of garlicஜன்னி கண்டவர்கள்  தன்னிலை மறந்து  வாய் பிதற்றுவார்கள். இதனால் மற்றவர்களுக்கு   மனக்கவலையை   அளிக்கும். மனக்கவலையை  அகற்றிட  உடனடியாக கீழ்காணும்  மருத்துவம் செய்யவும்.  வெள்ளைப்பூண்டு,  முருங்கைப்பட்டை,  குப்பை மேனி வேர், சிறுகீரை,  எருக்கம் வேர்,  இந்த ஐந்தையும் சம அளவு  எடுத்து  தாய்ப்பால்  விட்டுநன்றாக  அரைத்து குழைத்து அதில் மெல்லிய  துணியை நனைத்து கொள்ளவும்.  நனைத்ததைப் பிரித்து சொட்டு சொட்டாக வாயில் விட வேண்டும். அத்துடன் நாசியில் இரண்டு சொட்டு விட வேண்டும்.  இதனால் ஜன்னி கண்டவர் உடனே சுய உணர்வு பெற்று குணமடைவர். 

தொற்றுநோய் 

தொற்று நோயான கக்கூஸ் படை  என்ற நோய் கஷ்டத்தைக் கொடுக்கும் . இது பின் புட்ட கீழ் இடுக்கில்  வரும்.நாள் ஆக ஆக சற்று கனத்துப்படர ஆரம்பிக்கும். இதனை சொறியும்போது   நீர் கசிவு ஏற்பட்டு   எரிச்சல் உண்டாகும்.  இதனை அகற்றிக்கொள்ள ஒரு வழி.

வெள்ளைப்பூண்டை  நன்றாக நசுக்கி   ஒரு ஸ்பூன் சாறு எடுத்து  அந்த  சாற்றுடன்  ஒரு ஸ்பூன்  எலுமிச்சம்பழத்தின் சாறு விட்டு  கலக்கிக் கொள்ளவும். படை உள்ள  இடத்தை நன்றாக  சுத்தம் செய்து கொண்டு  இந்த கலவையை பற்று போடவும்.

ஆழ்ந்த உறக்கத்திற்கு 

இரவில் படுத்தால் துாக்கம் வராமல்  கஷ்டப்படுபவர்கள்  தோல் உரித்த மூன்று   வெள்ளைப்பூண்டை  பசும்பாலில் போட்டு காய்ச்சிக் குடித்தால் இதமாக துாக்கம் வரும்.  இதனை பகல்துாக்கத்திற்காக அருந்த கூடாது.  இரவில் தான் அருந்த வேண்டும்.

முகவாதம் நீங்க 

முகவாதம் என்பது  மிக மோசமான  நோயாகும். இந்த நோய் கண்டால்  உடனடியாக  மருத்துவம்  செய்து கொள்ளவேண்டும்.

வெள்ளைப்பூண்டு, மஞ்சள், சுக்கு, மிளகு, சீரகம், புண்ணாக்கு, மர மஞ்சள்,  சந்தனம், இந்த எட்டு சாமான்கள் ஒவ்வொன்றையும் சம எடையாக  எடுத்துஒன்றாக்கி  துாளாக செய்துகொள்ளவும். இந்த துாளை சுத்தமான வெள்ளைத்துணியில்   வைத்து திரியாக திரித்து  கொள்ள  வேண்டும். இந்த திரியின்   ஒரு நுனியைத்  தீயில் காட்டி  அதில் வரும் புகையை  மூக்கில் நுகர வைக்க வேண்டும்.  இதுபோன்றுவிட்டு விட்டு நுகர்ந்து வந்தால்  முகவாதம் ஜன்னி குணமாகும். 

நாய்க்கடி 

எதிர்பாராமல் நாய் கடித்துவிட்டால் உடனடியாக   கடித்த இடத்தைக் கழுவி  காயத்தின் மீது பூண்டைத்  தடவி நன்றாக  தேய்க்கவும்.  அதன் பின்னர்  வெள்ளைப்பூண்டை   அரைத்து காயத்தின்  மேல் பற்று  போல் வைத்த  சுத்தமான துணியினால் கட்டவும். உள்ளுக்கு பூண்டு  கஷாயம் வைத்து கொடுக்கவும்.இது உடனடி நிவாரணமாகும்.  பின்னர் பல வருடங்கள் கழித்து  தொல்லை கொடுக்கலாம்.எனவே டாக்டரிடம் செல்ல வேண்டியது கட்டாயம்.

பல்லில் பூச்சி 

medicinial characters of garlicmedicinial characters of garlicபல்லில் பூச்சி இருந்தால்  பல்லரணை ஏற்பட்டு  பல் வலி  உண்டாகும். இதனைப்போக்க பல்லிலுள்ள  பூச்சி வெளியேற வேண்டும்.  பல்லினுள் பூச்சி  வெளியே பூண்டு வைத்தியம். வெள்ளைப்பூண்டு, வசம்பு, நாயுருவி இலை,  நாயுருவி வேர், இந்த நான்கையும் சம அளவாக எடுத்து நசுக்கி வாயில் போட்டு பல் வலியிருக்கும்  பக்கம் அடக்கி கொள்ளவும்.இதனால்  ஈறிலுள்ள  கெட்ட நீர் வாயிலிருந்து   சொட்டு சொட்டாக   கீழே விழும். அந்த சமயம்  முழங்காலில் விளக்கெண்ணெயைத்  தடவிக் கொண்டு கொஞ்ச நேரம் வெயிலில் நின்றால்   பற்களிலுள்ள  பூச்சி கீழே விழுந்துவிடும்.  இதனால் வலி வீக்கம், எல்லாம் மறைந்து  பல் பழைய நிலையில் இருக்கும். 

வயிற்றுக்கடுப்பு 

வயிற்றுக்கடுப்பு உண்டானால் , வெள்ளைப்பூண்டுடன் பெருங்காயம், வெந்தயம் சம அளவு எடுத்துக்கொண்டு  இத்துடன்முருங்கை  ஈர்க்கு  ஐந்து சேர்த்து  சிவக்க வறுத்துகொள்ளவும். சிவக்க வறுப்பட்டதும்,  நீர்விட்டு நன்றாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி  உள்ளுக்கு சாப்பிட்டால்  வயிற்றுக்கடுப்புநீங்கிவிடும். 

காதில்இறைச்சல் 

ஒரு சிலருக்கு   காதில் இறைச்சல்  ஏற்படுவதுண்டு,. இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால்  பின்னாளில் காது செவிடாகிவிடும். இதற்கு உடனடியாக  ஒரு மருத்துவம். வெள்ளைப்பூண்டு, முசுமுசுக்கை இலை, இவை  இரண்டையும் நசுக்கி,  சாறு பிழிந்து  காதில் பிழிந்துவிட்டால் காதில் ஏற்பட்ட  இரைச்சல் உடனடியாக  நின்றுவிடும். 

உள்நாக்கு அழற்சிக்கு

உள்நாக்குஅழற்சி ஏற்பட்டால் சுத்தமான தேனில்  பூண்டை உரித்து   ஊறப்போட்டு   தினசரி சாப்பிட்டால்   குணமாகும்.  பூண்டைபாலில்  வேக வைத்து  சாப்பிட்டாலும்  உள்நாக்கு அழற்சி குணமாகும். 


Tags:    

Similar News