இஞ்சியின் மருத்துவ குணம் பற்றி தெரியுமா? ஜீரணத்துக்கு அருமருந்து...படிங்க....
medicinal characters of ginger நாம் அன்றாடம் சாப்பிடும்உணவில் இஞ்சி சேர்க்கப்பட்டால் இனி புறக்கணிக்காதீர்கள். இஞ்சி ஒரு அருமருந்து உடலுக்கு நல்லது.
medicinal characters of ginger
நாம்அன்றாடம் சாப்பிடும் உணவில் இஞ்சி.பூண்டு,கறிவேப்பிலை , கொத்தமல்லி தழை ஆகியவற்றைச் சேர்த்தாலும் ஒருசிலர் அதனைச் சாப்பிடும்போது ஒதுக்கிவைத்துவிடுவார்கள். அவர்களுக்கெல்லாம்ஏதோ வாசனைக்காக அதனைச் சேர்க்கின்றனர் என தவறுதலாக புரிந்து வைத்துள்ளனர் .
நம் முன்னோர்கள் அக்காலந்தொட்டு இதனை உணவில் சேர்ப்பதன் அருமை தெரியாமல் ஒரு சிலர் இதனை புறக்கணிக்கின்றனர். ஒவ்வொன்றிலும் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. அந்த வகையில் இஞ்சியானது நம் உடலின் அஜீரணக்கோளாறைச் சரிசெய்யக்கூடிய அரு மருந்து. இதனால்தான் இதனை சேர்த்துள்ளனர். இதுபோல் ஒவ்வொன்றிற்கும் ஒரு மருத்துவகுணம் உண்டு.
அந்த வகையில் நாம் இன்று இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றிப் பார்ப்போம்.
இஞ்சியானது செம்மண் நிலத்தில் பயிராகிறது. இதற்கு விதை என்று கிடையாது. ஆனால் இஞ்சித் துண்டுகளில் கணுக்கள் நிறைந்திரு்கும். அவற்றையே திரும்பவும் மண்ணில் புதைத்துச் செடியாக்குகின்றனர்.
இஞ்சியின் மருத்துவ மகத்துவத்தை அறிந்து நமது முன்னோர்கள் மேகநோய், சூலை, பீனிசம், வயிற்றில் கட்டி, யானைக்கால், சொட்டு மூத்திரம், மல மூத்திரக்கட்டு, க்ஷயம், நுரையீரல், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவையனைத்திற்கும் இஞ்சியை மருத்துவத்தில் பயன்படுத்தி பயனடைந்துள்ளனர்.
medicinal characters of ginger
medicinal characters of ginger
இஞ்சி வீரியம் மிக்கது என்பதினால் இதனைப் பச்சையாக மென்று தின்னக்கூடாது. பதார்த்த வகைகளில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. பசுமையாக இருக்கும்போது இஞ்சியாகவும், காய்ந்த பின்னர் சுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பிடுங்கிய இஞ்சியை சுத்தம் செய்து சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து வெயிலில் உலர்த்தப்படுவதினால் இஞ்சி சுக்காகிறது.
சுக்கைப்பொடி செய்து பால் -சர்க்கரையை அதில் கலந்து அல்லது சர்க்கரைக்குப் பதிலாக பனை வெல்லம் போட்டு சுக்கு காபி அருந்துகின்றனர். பச்சையாக இருந்தால் இஞ்சியாகவும் காய்ந்த பின்னர் சுக்காகவும்இருந்தாலும் இது மருத்துவ குணத்தில் முதன்மையானது. ஆகையினால் மருத்துவத்தில் இரண்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மார்பு வலி
வாய்வு தொல்லையினால் சிலருக்கு மார்புவலி உண்டாவதுண்டு. இதற்கு ஒரு இஞ்சி வைத்தியம்.15 கிராம் இஞ்சியை எடுத்துதோல்நீக்கி அத்துடன் 20 கிராம் தோல் உரித்த வெள்ளைப்பூண்டை சேர்த்து சிறிது நீர் விட்டு மெழுக அரைத்தெடுத்து 200 மி.லி. வெந்நீரில் கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இதனை காலையிலும், மதியத்திலும் உள்ளுக்கு சாப்பிடவும். இரண்டு நாள் சாப்பிட்டால் மார்பு வலி வந்த சுவடு தெரியாமல் போய்விடும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு
கர்ப்பிணிப்பெண்களுக்கு சில சமயம் வயிற்றுவலி ,இடுப்புவலி ஏற்படுவதுண்டு. அச்சமயம் இஞ்சியை நசுக்கி சாறு எடுத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி நெய், வெல்லம்,, திப்பிலிப்பொடி, இவைகளைக் கலந்து குடிக்கக் கொடுத்தால் இதுபோன்ற வலிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படாது.
தேள் கடிக்கு
தேள்கடிக்கு-அரைத்த சுக்கு விழுதை தேள் கொட்டிய வாயில் தடவி நெருப்புச்சூடு காட்டினால் தேள் விஷம் நீங்கிவிடும்.
குளிர்சுரம் கண்டவர்க்கு
குளிர்சுரம் கண்டவர்க்கு கை கண்ட மருந்து. சுக்கு, மிளகு, லவங்கம், இவற்றுடன் பொரித்தவெங்காரம் ஆகியவைகளை சமமாக எடுத்து நன்கு பொடி செய்து தேன் கலந்து சிறு சிறுமாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ளவும். குளிர்சுரம் கண்டவர்க்கு இந்தமாத்திரையிலிருந்து வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் மூன்று வேளை சாப்பிடக்கொடுத்தால் குளிர்சுரம்குணமாகும்.
medicinal characters of ginger
medicinal characters of ginger
மலச்சிக்கல் அகல
மலச்சிக்கல் உள்ளவர்கள் இஞ்சியை பச்சடி செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகாது. தவிர கபம் அதிகமாகி கஷ்டப்படுகின்றவர்களுக்கு கபம் நீங்கி விடும்.
குழந்தைக்கு உப்புசம்
பால்குடிக்கும் கைக்குழந்தைகள் அடிக்கடி வயிறு உப்புசத்தால் கஷ்டப்படும். அச்சமயத்தில் தாய்ப்பாலில் சுக்கை இழைத்து குழந்தையின் வயிற்றின் மேல் பற்று போல் தடவினால் குழந்தையின் வயிறு உப்புசம் நீங்கிவிடும்.
குழந்தைபிறக்க தாமதமாகும் பெண்களுக்கு
சிலருக்கு திருமணம் நடந்து 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பிறக்கவில்லையே என்று கவலைப்படும் பெண்மணிகள் கீழ்க்காணும் முறையைக் கையாண்டு பயன் பெறலாம்.
இஞ்சி 50 கிராம், மிளகு 50 கிராம்,திப்பிலி 50கிராம், நாககேசரம் 50 கிராம், பசு நெய் 250 கிராம் சேகரித்துக்கொள்ளவும். முதலில் இஞ்சி, திப்பிலி, நாககேசரம், ஆகிய நான்கையும் அம்மியில் வைத்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.
ஒருசுத்தமான பாத்திரத்தில் பசு நெய்யை ஊற்றி காய்ச்சி அதில் பொடி செய்துள்ளதைக் கொட்டிநன்றாக கிளறி எடுத்து ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்திக்கொள்ளலாம். குழந்தை இல்லாத பெண்கள் மாதவிடாய் காலத்தில் மூன்று நாட்கள் மட்டும் இதனை உண்ண வேண்டும். இது போன்று மூன்று மாதங்கள் உண்டால் நல்ல பலனை அடையலாம்.
மந்தம்-வயிறு உப்புசம்
பசியின்மை மந்தமாக இருந்தாலோ வயிறு உப்புசமாக இருந்தாலோ அல்லது வயிறு கனம், காற்றிரைச்சல் போன்ற கோளாறுகள் இருந்தாலோ இதே ஒரு வழி.பச்சைக் கொத்தமல்லியுடன் இஞ்சியைச் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சேர்த்து உண்ண வேண்டும். இதனால் மேற்கண்ட கோளாறுகள் அகன்று விடும்.
medicinal characters of ginger
medicinal characters of ginger
நோஞ்சான் குழந்தைகளுக்கு
சில குழந்தைகள் ஆரோக்யத்துடன் இருக்கும். சில குழந்தைகள் ஆரோக்யம் இல்லாமல் நோஞ்சானாக இருக்கும். ஆகையினால் நோஞ்சான் குழந்தை ஆரோக்யத்துடன் இருக்க கீழ்க்காணும் முறையைக் கையாளவும்.
முதலில் 200 கிராம் ஓமத்தை பொன் வறுவலாக வறுத்து எடுத்து ஒரு மட்பாண்டத்தில் போட்டு அதில் 500 மி.லி. இஞ்சியின் சாற்றை ஊற்றி நன்றாக கிளறி வெள்ளைத்துணியினால் வேடுகட்டி வெயிலில் காய வைக்கவும்.
இதுபோன்று மூன்று நாட்கள் வெயிலில் காய வைத்தால் சாறு சுண்டிவிடும். சுண்டியதை கால்ஸ்பூன் எடுத்துசுத்தமான துணியில் முடித்து 100 மி.லி். சுத்தமான நீரில் ஒரு நிமிடம் இட்டு எடுத்துவிடவும்.
இந்த நீரை காலை-மாலை 50 மி.லி. அளவு குழந்தைக்குக் கொடுத்து வந்தால் எந்த தொந்தரவும் இல்லாது ஆரோக்யத்துடன் கொழு கொழு என்று வளரும். இதனைக் குழந்தைக்கு கொடுக்கும்போது வெறும் வயிற்றுடன் கொடுக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.
பேதி நிற்க
சில சமயம் பேதி நிற்காமல் கஷ்டத்தைக் கொடுக்கும். அச்சமயம் சுக்கை அரைத்து பசுமோரில் கலந்து இரண்டு வேளை உட்கொண்டால் உடனடியாக பேதி நிற்கும்.
ஜலதோஷம் காய்ச்சல்
ஜலதோஷம் வந்தாலே கூடவே காய்ச்சலும் வந்துவிடும். இதனைப்போக்கிக் கொள்ள ஒரு எளியவழி. இஞ்சியை நன்றாக அரைத்து தண்ணீர்விட்டு கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும் டீத்துாளைப் போட்டு கொதி வந்ததும், கீழே இறக்கி நீரை வடித்துக்கொள்ளவும்.
அந்நீரில் பால், சர்க்கரை சேர்த்துகுடிக்கவும். குடித்தஒருமணி நேரத்தில் ஜலதோஷம் , காய்ச்சலும் காணாமல் போய்விடும்.
கடுமையான தலைவலிக்கு
கடுமையான தலைவலி இருந்து கஷ்டப்படுத்தினால் சுக்கை துாள் செய்து சிறிதளவு அரிசி மாவில் சேர்த்து களியாக கிண்டி நெற்றியில் பற்று போடவும். இதனால் கடுமையான தலைவலி குணமாகும்.
நன்றி :சூர்யநாத்.