உங்களுக்கு ஹை பிளட் பிரஷரா ..... முதல்ல இதைப் படியுங்க....
High Blood Pressure Symptoms in Tamil-மாறிவரும் பரபரப்பான உலகில் நம் ஆரோக்கியத்தில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
High Blood Pressure Symptoms in Tamil-மனிதர்களுக்கு தற்போதுள்ள நாகரிக உலகில் தினம் தினம் புதுப்புது நோய்கள் பெருக்கெடுத்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. யாருக்கு எந்த நோயானாது எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடிவதில்லை. இதற்கெல்லாம் காரணம் தான் என்ன ? யாராவது சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா?
பரபரப்பான உலகில் தினமும் காலைஎழுந்தது முதல் இரவு வரை அலைச்சல், பதற்றம், டென்ஷன், நேரத்திற்கு உணவருந்தாமை , சரியான உறக்கமின்மை, போன்றவற்றினால் என்னென்ன நோய்கள் உருவாக காரணமாகிறது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? யாருக்கும் தெரிவதற்கு வாய்ப்பிலை? சாதாரண நிலைமையில் இருந்து நம்முடைய உடலில் ஏதாவது மாறுபாடு நிகழும் போதுதான் நம்மை ஏதோ நோய் தாக்குகிறது என்று அலறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்கிறோம்.
நம்மில் எத்தனை பேர் வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையை மேற்கொள்கிறோம்.விரல் விட்டு எண்ணும் அளவான நபர்களே இதனை மேற்கொள்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் போங்கப்பா... ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தால் நம் பர்சானது காலியாகிவிடுகிறது எனும் மெத்தனத்தில் விட்டுவிடுகிறார்கள். அது ஒரு நாளன்று ஆளையே காலி செய்து விடுகிறது. அவருடைய குடும்பமானது என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் விடப்படுகிறது.
காலையில் நன்றாக இருந்தார்... ஆனால் மாலையில்..... கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர்கள் எல்லாம் இந்த லிஸ்டைச் சேர்ந்தவர்களே. எனவே இனியாவது திருந்துங்கள். முழு உடல் பரிசோதனையை 6 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ நல்லதொரு டாக்டரிடம் காண்பித்து பரிசோதனை செய்யுங்கள். ஆரோக்யத்தைப் பேணிக்காத்துக்கொள்ளுங்கள்.
உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் என்பது அமைதியான ஒரு நோய்க்கொல்லி .இது சிலருக்கு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சில சமயம் வர வாய்ப்பு உள்ளது. உயர் ரத்த அழுத்தம் என்பது உடம்பின் சீரான ரத்த அழுத்தத்தினைவிட 120/80 அதிகமாகும் போதுஇதயம் சுருங்கும்.அழுத்தம் 140 க்கு மேலும், விரிவடையும் அழுத்தம் 100 க்கு மேலும் போகும்போது உயர் ரத்தஅழுத்தம் என்கிறோம்.
நோய்க்கான காரணங்கள்
நாகரிகமான உலகில் மன அழுத்தம் என்பது அனைவருக்கும் வயது வித்தியாசமின்றி ஆட்டிப்படைக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறுபிரச்னைகளுக்கு மன அழுத்தமே காரணமாகிறது. ஒரு சிலருக்கு இந்நோயானது பரம்பரையாக வருவதற்கு வாய்ப்புண்டு. புகைபிடிப்பவர்கள், மற்றும் உடல் பருமனாக உள்ளவர்கள்,உணவுமுறை பழக்கம், சிறுநீரக கோளாறு மற்றும் இதயக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்நோய் தாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு.
நோய்க்கான அறிகுறிகள்
*உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலியானது ஏற்படும்.
*மயக்கம் வருவது போலத் தோன்றும்
*சாதாரண பார்வைப்புலம் குறைந்து பார்வைக்குறைபாடு ஏற்பட ஆரம்பிக்கும்
*இந்நோயின் அறிகுறியாக ஞாபக சக்தியானது குறையும்
*இருதயத்தில் வலி ஏற்படும்
*உடல் செய்கையில் பலவீனம் ஏற்படும்
*பாதவீக்கம், சிறுநீரில் அளவு குறைதல்
பொட்டாசியம்
பொட்டாசியம் சத்து சீரணத்தன்மைக்கும் அமிலத்தன்மையை சமநிலை செய்வதற்கு பயன்படுகிறது. பொட்டாசியம் சத்து ஒரு நாளைக்கு 3500 மிலி கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளலாம். பழங்கள், பால், காய்கறிகள் போன்றவற்றில் நிறைந்துள்ளது.
*ஆரஞ்சு, ஆப்பிள், பேரிக்காய், மாம்பழம், கொய்யா, அன்னாசி, எலுமிச்சை, கிவி நெல்லிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, போன்ற பழங்களை நிறைய சாப்பிடலாம். வாழைப்பழம் ஏதாவது ஒரு நாள் மட்டும் சாப்பிடவும். இதில் அதிகளவு மாவு சத்துள்ளது. அதனால் எடை அதிகரி்க்கும்.
*கீரை மற்றும் காய்கறிகளை நிறைய சாப்பிடவும். தினமும் உண்ணும் உணவுப்பொருட்களில் பாதியளவு வரை மற்றும் காய்கறிகள் இருப்பது அவசியம்.
*பூண்டு, வெங்காயம், இஞ்சி, போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
*சோயாபீன்சை மாவு செய்து கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி செய்யலாம்.
*கொழுப்பு நீக்கப்பட்ட பால் , தயிர், மோர் பயன்படுத்த வேண்டும்.
*காபியிலுள்ள கேஃபின் என்ற உட்பொருள் இதயத்துடிப்பை அதிகப்படுத்தும். அதனால் காபியை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் குடிக்கவும்.
*உப்பில் செய்த பொருட்கள் ஊறுகாய், வற்றல், வடகம், பேக்கரிப்பொருட்கள், சிப்ஸ், உப்பு பிஸ்கட், வெண்ணெய், டின் பொருட்கள், முந்திரி, காய்ந்த திராட்சை, சாஸ், நெய், டால்டா, தேங்காய், பாலாடைக்கட்டி போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது.
பின்விளைவுகள்
இருதய பாதிப்பு , பக்கவாதம், மற்றும் நரம்புகள் பாதிக்கப்படும் ஒரு சில நேரத்தில் சிறுநீரக பாதிப்புகளும்ஏற்படுவதோடு கண் பாதிப்பும் ஏற்படுகிறது.
சிகிச்சை முறைகள்
உயர்ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான டாக்டரை கலந்து ஆலோசித்து மருந்துகளை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். அதேபோல் கண்டதையும் சாப்பிடாமல் உணவுப்பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தினமும் காலை நேரங்களிலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். அதேபோல் எந்த நேரமும் டென்ஷனாக இல்லாமல் மனதிற்கு அமைதி தரும் வகையில் ஒவ்வொரு நாளின் செயல்பாடுகள் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம் ஆகும். மேலும் அதிக உடல் எடை பருமனுள்ளவர்கள் உடல் எடையினைக் குறைக்க தேவையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
உணவுக்கட்டுப்பாடு
*உணவு முறைக்கட்டுப்பாடு என்பது உயர் ரத்த அழுத்தத்தினைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், ஆரோக்யமான சுகமான வாழ்க்கை வாழவும், பின் விளைவுகளை தள்ளிப்போடவும்அல்லது தடுக்கவும் உதவுகிறது.
*மாவுச்சத்துநிறைந்த உணவுகளை அதிக எடை இருப்பவர்கள் சற்று குறைத்துக்கொள்ளவும். இது உடலில் எல்லா வேலைகளையும் செய்ய சக்தியளிக்கிறது.
*புரதசத்து திசுக்களின் செல்கள் வளர்ச்சிக்கு உறுதுணைபுரிகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 50 முதல் 60 கிராம் எடுத்துக்கொள்வது நல்லது.
*ஒரு நாளைக்கு 25-30 கிராம் வரை கொழுப்பு சத்து நிறைந்த எண்ணெய் வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
*இதன் நல்லெண்ணெய் , கடலை எண்ணெய் மற்றும் சூரிய காந்தி போன்ற எண்ணெயை 1:1:1 என்ற விகிதத்தில் 4-5 ஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம்.
சோடியம்
சோடியம் சத்து உடலுக்கு முக்கியமானது. இது அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதற்காக சுத்தமாகவும் சாப்பிடாமல் இருக்க கூடாது. சோடியம் சத்து நாம் உண்ணும் உப்பில் தான் அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு 8 கிராம் அளவிற்கு நல்ல ஆரோக்யமான மனிதர்கள் எடுத்துக்கொள்ளலாம். இது உயர் ரத்தஅழுத்தத்திற்கு தகுந்த மாதிரி அளவு மாறுபடும்.
*பேக்கிஸ் பவுடர், அஜினோ மோட்டோ போன்றவற்றைத்தவிர்க்கவும்.
*இனிப்புப் பொருட்கள், சாக்லேட், குளிர்பானங்கள், மதுபானங்கள், புகைப்பிடித்தல் போன்றவற்தைத்தவிர்ப்பது நல்லது.
*ஆட்டுக்கறி, தொடைக்கறியாக 50 கிராம் அல்லது கோழிக்கறி 50-75 கிராம், அல்லது மீன் 100 கிராம் இவற்றை எண்ணெயில் போட்டு பொறிக்காமல் கொழுப்பு நீக்கப்பட்டு குழம்பில் போட்டு சாப்பிடவும். வாரத்திற்கு ஒரு முறை மட்டும்.
*முட்டையில் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம்.
*தினமும் 2 ஸ்பூன் அளவு வெந்தயம் எடுத்துக்கொள்ளவும்
*தினமும் அ ரை மணிநேரம் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி மேற்கொள்ளவும்.
*உயரத்திற்கு ஏற்ற எடை பராமரிக்கவும்
*மனஅமைதிக்கு தியானம், யோகா, போன்றவற்றை செய்யலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2