Health Benefits Of Curry Leaves ஒதுக்கித் தள்ளும் கறிவேப்பிலையில் எவ்வளவு மருத்துவ குணங்கள் தெரியுமா?.....

Health Benefits Of Curry Leaves கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதாக பல்வேறு ஆராய்ச்சியின் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம் போன்றவை உள்ளன;

Update: 2023-12-19 16:04 GMT

Health Benefits Of Curry Leaves

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை ஏதோ வாசனைக்காக சேர்க்கப்படுவதாக நினைத்து பலர் இலையின் ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஆனால் அதனை உணவோடு சேர்த்து உண்பவர்களுக்கு எத்தனை நன்மைகள் தெரியுமா? ...இது குறித்து ஒரு சொலவடை கூட நம் தமிழகத்தில் தேவைன்னா கூப்பிடுவாங்க...இல்லாட்டி கருவேப்பிலை மாதிரி துாக்கி எறிஞ்சிடுவாங்கன்னு...ஒரு சொல் உண்டு. அந்த வகையில் துாக்கி எறியக்கூடிய பொருள் கறிவேப்பிலை அல்ல. படிச்சு பாருங்க...உங்களுக்கே ஆச்சர்யமாகிவிடும்...

நம் உணவில் சேர்க்கும் பல பொருட்களும் நமக்கு உடல் நலத்திற்கு ஆரோக்யத்தைக் கொடுப்பவைகள் தான். அந்த வகையில் கறிவேப்பிலை உணவுக்கு மணம்கொடுக்க மட்டுமல்ல ஆரோக்யம் காக்கவும் தான் இது பயன்படுகிறது.

Health Benefits Of Curry Leaves


மருத்துவ குணங்கள்

கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதாக பல்வேறு ஆராய்ச்சியின் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம் போன்றவை உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர் ஜான்,சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன், போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன. இவைதான் கறிவேப்பிலைக்கு இனி மணத்தினைத் தருகின்றன.

பலமருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகின்றன.கறிவேப்பிலை, புற்றுநோயை ஆரம்பத்திலேயேக் கொல்லும் ஆற்றல் உடையது என்பதை ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

Health Benefits Of Curry Leaves


நியூட்ரிசன் சயின்டிஸ்ட் ஆப் சிசையரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனம் மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையவை மட்டுமல்ல. அவை பல மருத்தவ குணங்களைக் கொண்டவை என்பதைக் கண்டறிந்துள்ளது.இந்நிறுவனத் தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் , கறிவேப்பிலை ஒரு சிறந்த ஆன்டி ஆக்சிடண்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய் , இதய நோய் அபாயங்களைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

ஞாபகசக்திக்கு

மேலும் கறிவேப்பிலையால் ஞாபகசக்தி பெருகுகிறது என்கிறார் இவர்.கறிவேப்பிலையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை நுரையீரால், இதயம் ,கண்நோய்களுக்குத் தலைக்குத் தேய்க்கும் எண்ணெயாகப் பயன்படுத்தலாம் என இங்கிலாந்திலுள்ள விவசாய மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக 100கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணெயில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி, தினசரி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண் பார்வைக்குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்துச்சாப்பிட்டால் நுரையீரல், இதயம் சம்பந்தப்பட்ட, ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது மேற்கண்ட ஆஸ்திரேலிய நிறுவனம்.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழகத்தில், கறிவேப்பிலையையும், கடுகையும், தாளிக்கப்பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி மருத்துவக்குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கின்றன என்பது தெரியவந்தது.

மேலும் ’’பிரிரேடிக்கல்ஸ்’’ நிலைஏற்படுவதையும் கறிவேப்பிலை தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ பாதிக்கப்படுகிறது. செல்களிலுள்ள புரோட்டீன் அழிகிறது. விளைவு, கேன்சர், வாதநோய்கள், தோன்றுகின்றன. தாளிக்கும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் ப்ரிரேடிக்கல்ஸ் உருவாவதைத் தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இது தவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலைகளையும் , மாலையில் 10இலைகளையும், பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவைப் பாதியாகக் குறைத்துவிடலாம் என்கிறார்கள் டாக்டர்கள்.

Health Benefits Of Curry Leaves


தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டுவந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை, ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும்.அறிவைப் பெருக்கவும்உ தவுகிறது. கறிவேப்பிலையைப் பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் டாக்டர்கள்.

எனவே இனிமேலாவது கறிவேப்பிலையைச் சாப்பாட்டில் இருந்து துாக்கி எறிந்து விடாமல் அதையும் குடலுக்கு அனுப்புவோம்...அவ்வளவும் உடம்புக்கு நல்லதுங்க...

Tags:    

Similar News