Hair Growth Foods in Tamil-முடிவளர்ச்சிக்கான சத்துள்ள உணவுகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க...
Hair Growth Foods in Tamil - மனிதர்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களுடைய கேசங்களே. அந்த வகையில் முடிஉதிராமல் இருக்கவேண்டும் என்றால் என்னென்ன உணவுகளை உட்கொள்ளலாம் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.;
முட்டையிலுள்ள பயோடின் முடி வளர்ச்சிக்குபெரிதும் துணைபுரிகிறது.
சத்துகள் நிறைந்த பருப்பு வகைகள் மற்றும் விதைகள்.
மனிதர்களுக்கு அழகு கூட்டுவது அவர்களுடைய முடிகளே.அது ஆணாகட்டும், பெண்ணாகட்டும் அவர்களுடைய கேசங்களே அவர்களுடைய அழகிற்கு மெருகூட்டுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.அக்காலத்தில் தலைக்கு குளிப்பதென்றால் சீயக்காய், அரப்பு உள்ளிட்டவைகளை மட்டுமே உபயோகித்து வந்தனர். ஆனால் நாகரிகம் வளர வளர ஒரு கம்பெனியின் ஷாம்பூ மார்க்கெட்டைப்பிடித்தது.இன்று ஆயிரம் வகையான ஷாம்பூக்கள் கடைகளை அலங்கரிக்கின்றன. அதுவும் அதிலும் ஆங்கிலம், ஆயுர்வேதம், சித்தா ,யுனானி என பல மருத்துவ முறைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட ஷாம்பூக்கள்தான்இன்று கடைகளில் ஷோகேஷ்களை அலங்கரித்து வருகிறது.
அதுவும் பெண்களுக்கு நீண்ட கூந்தல் இருக்கவேண்டும் என ஆசைகள் அளவற்றுஇருந்தாலும் ஆரம்பத்தில் உள்ள நீண்ட கூந்தல் அவர்களுடன் நெடு நாட்களுக்கு வருவதில்லையே ஏன்? மாறிவரும் உணவுப்பழக்க வழக்கம், தண்ணீர் பயன்பாடு உள்ளிட்டவைகளினால் முடி உதிர ஆரம்பித்து பின்னர் முடிஉதிர்தலுக்கு பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகளை இக்கால பெண்களும், ஆண்களும்மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய நவீன யுகத்தில் பல கெமிக்கல்கள் கொண்டுதயாரிக்கப்பட்ட ஷாம்பூக்களை அதிகம் உபயோகிப்பதன்காரணமாக பல பேருக்கு முடி வளர்ச்சி பாதிக்கப்படுவதாக பலர் கருதுகின்றனர்.மேலும் போஷாக்கான உணவுகளை தவிர்த்ததும் இது போல் முடிஉதிர்தலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஆகியோருக்கும் இளம் வயதிலேயே முடியின் வலிமை குறைந்து விடுகிறது. இதற்காக பல டாக்டர்களிடம்சென்று சிகிச்சை மேற்கொண்டாலும் போதிய பலன் இல்லை.
இதனால் பலர் தலைக்கு விக் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும் பணக்காரர்கள் மட்டுமே அக்காலத்தில் தோப்பா என்று சொல்லப்படும் விக் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இன்று இதுபோன்ற பிரச்னையால் பலரும் விக் வைப்பதை அதுவும் லட்சக்கணக்கில்செலவழித்து வைத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்டான விஷயம். மேலும் பிளான்டேஷன் அதாவது முடியை நட்டு செய்யப்படும் சிகிச்சையும் பலர் மேற்கொள்கின்றனர். இப்படிசெய்தால் முடி தலையில் நிரந்தரமாகவே இருக்கும். எந்த பாதிப்புகளும் வராது. பறக்காது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கிலும் தேவையான சத்துகள் அதிகம் உள்ளது
இதனால் இளம் வழுக்கையில் இருந்து தப்பிக்க பல இளைஞர்கள் பிளான்டேஷன் செய்வதில்ந ாட்டம்கொண்டு வருகின்றனர். என்னதான் பிளான்டேஷன் செய்தாலும் அது செயற்கைதானே.. என ஒரு சில ர் இயற்கையான வழுக்கையோடு உலா வருகின்றனர். அவரவர்களின்கொள்கையைப் பொறுத்தது. இது தனிமனித விஷயம். அதுவும்இக்கால பெண்கள் முடியோடு இருக்கும் மாப்பிள்ளைகளையே விரும்புவதால் பல வழுக்கை கொண்டோருக்கு பெண் கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.இது ஒரு மைனஸ் ஆகிவிடுகிறது. என்னதான் செய்ய....
அந்த வகையில் முடி உதிராமல் பராமரிக்க பல வழிமுறைகள்உ ண்டு. அதில் எந்தெந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முடியின் பாதுகாப்பினை உறுதிசெய்து கொள்ளலாம். அந்தந்த வகையில் என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் என்பதைப்பற்றி பார்ப்போமா....
மனிதர்களுடைய முடியானது மாதத்திற்கு 0.5 அங்குலம் (1.25 செ.மீ) மற்றும் வருடத்திற்கு 6 அங்குலங்கள் (15 செ.மீ) தான் வளரும்.ஒவ்வொருவரின்முடி வளர்ச்சி கூட மரபியல் ரீதியான காரணிகளைக் கொண்டது.ஒருசிலருக்கு ஒரு சில உணவுகள் ஒவ்வாமையாக கூட இருக்கலாம்.இதனால் முடி உதிர்தலும் துவங்கலாம். இதுபோன்ற பாதிப்பு உள்ளோர் தங்களுடைய உணவுப்பழக்கத்தினை மாற்றிக்கொள்வதன் மூலம் இந்த விஷயத்திலிருந்து தப்பிக்க வழியுண்டு.
பச்சைக்காய்கறிகள்
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் காய்கறிகள், மற்றும் கீரை வகைகளை தினந்தோறும் சேர்த்துக்கொள்ளவேண்டும். காய்கறிமற்றும் கீரைகளில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும்இரும்புசத்துகள் அதிகம் உள்ளது. இந்த சத்துகள் அனைத்துமே முடிவளர்ச்சியை பராமரிக்கும். கீரையிலுள்ள விட்டமின் ஏ தலையில் வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. ஒரு நாளைக்கு 30 கிராம்கீரையை பயன்படுத்துவதன் மூலம் 50 சதவீத வைட்டமின் சத்துகளையும் பெறலாம்.
காய்கறி வகைகளிலேயே பீன்சில்தான்துத்தநாகம் அதிகம் உள்ளது. இது முடிவளர்ச்சிக்கும் மறு சுழற்சிக்கும் உதவுகிறது. தாவரங்களிலேயே அதிக புரதத்தைக்கொண்டது பீன்ஸ் தான்.
ஒமேகா 3 நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதாக நிறைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களாக இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் இவற்றில் அதிகம் நிறைந்துள்ளன. கொழுப்பு நிறைந்த மீன்களில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் சத்துக்கள் அதிகம் உள்ளன.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஒன்றில் 114 கிராம் பீட்டா கரோட்டின் உள்ளது. நமக்குதேவையான விட்டமின் ஏவின் 4 மடங்கு அதிகமாக பீட்டா கரோட்டின் உள்ளது. இந்த பீட்டா கரோட்டின் முடி உதிர்வை குறைக்கிறது.
ஆரோக்யமான கொழுப்பு சத்துநிறைந்த பொருளுக்கு ஒரு சிறந்த உதாரணம் அவகொடோ எனப்படும் பட்டர் ஃப்ரூட்.இவை சத்தானதோடல்லாமல் சுவையானதும் கூட.முடிவளர்ச்சிக்குபெரிதும் துணைபுரியும் வைட்டமின் இ இதில்நிறைந்துள்ளது. சுமார் 200கிராம் அளவு கொண்ட அவகடோவில் வைட்டமின் இ 21 சதவீதம் உள்ளது.
விதைகள்
நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகள் மட்டுமல்லாமல் ஒரு சில விதைகளில் குறைந்த கலோரி கொண்ட ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. மேலும் இவற்றை நாம் உட்கொள்ளும்போது நம் உச்சந்தலைக்கு நன்மை செய்வதோடு முடியின் பாதுகாப்பினை உறுதிசெய்கிறது.
துத்தநாகம், செலினியம் ,விட்டமின் இ இவற்றில் உள்ளது. சூரியகாந்தி விதை ஒரு அவுன்சில் 28 கிராமில் 50 சதவீத வைட்டமின் ஈயில் உள்ளது. பாதாம் முந்திரி, சியாவிதைகள், ஆளிவிதைகள் ஆகியவற்றை தினமும்சாப்பிடுவதன் மூலம் முடி வளர்ச்சி மற்றும்பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளலாம்.
உணவில் புரதம் இல்லாததால் தான் முடி உதிர்தல் ஏற்படுகிறது. கரோட்டின் எனப்படும் முடியின் புரதத்தை உற்பத்தி செய்வதற்கு பயோட்டின் மிக முக்கியமானது.புரதம் மற்றும் பயோட்டினின் சிறந்த மூலம் முட்டை. முடியின் நிலையை மேம்படுத்தவும் முடி வளர்ச்சியை அதிகரிக்க இது உதவுகிறது.
பட்டர் ப்ரூட் என்று சொல்லக்கூடிய அவகோடா
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2