ஃப்ளூ காய்ச்சல் எப்படி ஏற்படுகிறது? அதற்கான தடுப்பு முறைகள் என்னென்ன?
Fever Symptoms in Tamil-ஃப்ளூ காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு ,100டிகிரி ஃபாரன்ஹீட் வரை காய்ச்சல் இருக்கும். இதனால், உடல்வலி , அசதி,மூட்டு வலி, கை கால்வலி, இருமல்,தும்மல், தலைவலி, கண்கள் சிவந்து போதல், வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்தக் காய்ச்சல் பார்ப்பதற்கு சாதாரண ஜலதோஷம் போலவே இருக்கும்.
Fever Symptoms in Tamil
மனிதர்களுக்கு நோய்கள் ஏற்படக் காரணம் என்ன? என யோசித்துப்பார்த்தால் உடல் ஆரோக்யத்தில் பலர் போதிய அக்கறையினை காட்டுவதில்லை. அலட்சியமாக இருந்துவிட்டு பின்னர் நிலைமை விபரீதம் ஆனபின்பு தான் அலறியடித்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்வதை இன்றளவில் பலர் வழக்கமாகிக்கொண்டுள்ளனர்.
மேலும் நாகரிகம் என்ற போர்வையில் பலர் உணவுப்பழக்கத்தில் போதிய கட்டுப்பாடுகள் இல்லாமல்இருப்பதும் நோய்கள் வரக்காரணியாகிறது. உடலுழைப்பு குறைந்து போனது, உடற்பயிற்சி இல்லாதது போன்றவைகளும் நோய்கள் உருவாக காரணமாகின்றன.
ஃப்ளு காய்ச்சல் ஏன் ஏற்படுகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம். ஃப்ளுகாய்ச்சலும் வைரஸால் ஏற்படுவதுதான். இதை இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் என்றும் சொல்வதுண்டு. இதனை இன்ஃப்ளுயன்சா வைரஸ் ஏற்படுத்துகிறது.இந்த ஃப்ளூ காய்ச்சல் இல்லாத நாடே கிடையாது. ஒரே நேரத்தில் பல நாட்டு மக்களையும் பாதிக்கக்கூடியது இந்தக் காய்ச்சல்.
இன்ஃப்ளூயன்சா வைரஸ்,ஆர்தோமிக்யோ வைரீடியே குடும்பத்தைச் சார்ந்தது. இந்த வைரஸில் ஏ,பி,சி என மூன்று வகைகள் உள்ளன.இவற்றில் பி வகை வைரஸ்மட்டுமே மனிதர்களைப் பாதிக்கக்கூடியது. மற்ற இரண்டும் விலங்குகளைப் பாதிக்கக்கூடியவை.இன்ஃப்ளூயன்சா வைரஸ்,ஆர்.என்.ஏவகை வைரசாகும். இந்த வைரஸின் உள்கருவில் 11 வகையான புரதங்கள் உள்ளன.அவற்றில் முக்கியமானவை.நியூராம்னிடேஸ் மற்றும் ஹீஅக்கிளிட்டினின் இந்த வைரஸ் 80-120 நானோமீட்டர் அளவு கொண்டது.
இந்த வைரஸ், தனதுவெளிப்புற புரதங்களின் உதவியால், மனித உடலில் உள்ள மெல்லிய சவ்வுப் பகுதியில் சேர்த்து வளர்ந்து பெருகும். குறிப்பாக, நாசிப்பகுதி, தொண்டைப்பகுதி, நுரையீரல், குடல் ஆகிய பகுதிகளில் இந்த வைரஸ் வளர்ந்து பெருகும்.
இந்த வைரஸின் ஆர்.என்.ஏ பாலிமரேஸ் என்ஸைம் செயல்பட்டால், இதன் மூலக்கூறுகள் உற்பத்தியின் போது மாறுபடும். எனவே , இந்த வைரஸ் பொருள்கள் உற்பத்தியாகி மனித செல்லில் புதிய வைரஸாக மாறும்போது,அவற்றின் மூலக்கூறுகள் வெவ்வேறு இனங்களாக மாறுபட்டிருக்கும். இதனால் இந்த வைரஸீக்கு எதிராக உடலில் எதிர்ப்பாற்றல் உருவாகும் முன்பே இவை வேகமாக வளர்ந்து பெருகி விடுகின்றன.
நோய் அறிகுறிகள்
ஃப்ளூ காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு ,100டிகிரி ஃபாரன்ஹீட் வரை காய்ச்சல் இருக்கும். இதனால், உடல்வலி , அசதி,மூட்டு வலி, கை கால்வலி, இருமல்,தும்மல், தலைவலி, கண்கள் சிவந்து போதல், வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்தக் காய்ச்சல் பார்ப்பதற்கு சாதாரண ஜலதோஷம் போலவே இருக்கும்.
சிகிச்சைகள்
ஃப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓய்வு மிகவும் அவசியம். இவர்களுக்குகாய்ச்சலைக் குறைப்பதற்கான மருந்துகள் கொடுக்க வேண்டும். ஆனால்,ஆஸ்பிரின் கொடுக்கக்கூடாது. இதனால் கல்லீரல் பாதிக்கப்படக்கூடும். இந்த வைரஸ் காய்ச்சலுக்கான பிரத்யேக தடுப்பூசிகள் உள்ளன. இருந்தாலும் வைரஸின் அமைப்புஅடிக்கடி மாறுவதால், இந்த நோயை முழுமையாகத் தடுக்க முடிவதில்லை. இத்தகைய தடுப்பூசிகள் ,குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் போடப்படுகின்றன.
தடுப்பூசி
ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை , காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கும்போது அதுவரை காய்ச்சல் வராதவர்கள் கண்டிப்பாகப் போட்டுக்கொள்ளவேண்டும். ஆண்டுக்குஇருமுறை இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளள வேண்டும்.இந்த வைரஸ் காய்ச்சல் ஜனவரி மாதங்களில்தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பதால், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் , நவம்பர் மாதங்களில் இந்த ஊசியைப் போட்டுக்கொள்வது நல்லது.
இந்தத்தடுப்பூசியை ஆறுமாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டுக்கொள்ளலாம். உடலின் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்களும், நோய் வர வாய்ப்பு உள்ளவர்களும்கூட இந்த தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
ஆனால், முட்டையின் புரதத்துக்கு ஒவ்வாமை (அலர்ஜி) உள்ளவர்களுக்கும், ஆறு மாதத்துக்கும் குறைவான குழந்தைகளுக்கும் இந்தத் தடுப்பூசியைப் போடக்கூடாது. ஏற்கனவே இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு அதனால் பின் பக்கவிளைவுகள் ஏற்பட்டவர்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. மேலும், வைரஸ் தடுப்பூசிகளால் நரம்புப் பாதிப்புகள் ஏற்பட்டவர்களும் கண்டிப்பாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளக்கூடாது.
நன்றி:டாக்டர்.முத்துசெல்லக்குமார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2