கண் புரை ஏற்படுவதை தவிர்ப்பது எப்படி? வைட்டமின் குறைவால் ஏற்படும் நோய்கள்

மனிதர்களுக்கு முக்கியமான உறுப்பான கண்ணில் ஏற்படும் புரையினை தவிர்ப்பது எப்படி.என்பதை பற்றி அனைவரும் உணர்வது அவசியம் மேலும் வைட்டமின்குறைவால் என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பதையும் அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்கின்றனர் டாக்டர்கள்.;

Update: 2022-07-16 14:04 GMT

கண்புரை - கோப்புப்படம் 

கண்புரை ஏற்படுவதை  தவிர்ப்பது எப்படி?

வைட்டமின் குறைவால் ஏற்படும் நோய்கள் 

மனிதர்களாக பிறந்த அனைவருமே நோயகளால் பாதிப்படைவது என்பதுதவிர்க்க முடியாதது என்றாலும் விழிப்புணர்வோடு செயல்பட்டால்  நாம்  நோயிலிருந்து தப்பிக்கலாம். அந்த வகையில் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் எதனை சாப்பிட்டால்  நமக்கு என்ன சத்து கிடைக்கும் அது எப்படி கண் புரை வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கும் மேலும் வைட்டமின் குறைவால் ஏற்படும் நோய்கள் என்னென்ன? என விரிவாக பார்க்கலாம்.


வைட்டமின் ஏ நிறைந்த  கேரட்,  பொன்னாங்கணிக்கீரை, பப்பாளி, மாம்பழம், பால், வெண்ணெய், முட்டை, மீன்,  மீன்எண்ணெய், வைட்டமின் சி நிறைந்த நெல்லி, கொய்யா,  எலுமிச்சம்பழம், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, வைட்டமின் இ நிறைந்த  முட்டைக்கோஸ்,பருப்பு வகைகள், கோதுமை, ஆப்பிள், ஆகியவ ற்றை  உணவுடன்  சேர்த்து கொள்வதால்  புரை வருவதைத் தவிர்க்கலாம். 

வைட்டமின் ஏ

  எலும்புகளின் வளர்ச்சிக்கும் தோல் மற்றும் சளிச்சவ்வின் செயல்பாட்டுக்கும் பார்வை செயல்பாட்டுக்கும் பயன்படுகிறது.  இது குறைந்தால் எலும்புகளின்  வளர்ச்சியானது தடைப்படும்.  தோலில் பருக்கள்  தோன்றும். பார்வைக் கோளாறு ஏற்படும்.இந்த வைட்டமினைப் பெற மஞ்சள் வண்ணம் கொண்ட   காய்கறிகள், அதாவது   கேரட், தக்காளி,  பப்பாளி மற்றும்   மக்காச்சோளம், முட்டைக்கோஸ், முட்டை ,பால் பொருட்கள்,  ஈரல், மீன் எண்ணெய், போன்ற உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ளவேண்டும். 

வைட்டமின் டி

   இது குறைந்தால்  எலும்புகளின்  வளர்ச்சி பாதிக்கப்பட்டு  ரிக்கெட்ஸ் என்ற நோயும், தோல் நோயும் ஏற்படும். ஈரல், மீன் எண்ணெய், சூரிய ஒளி மூலம் இந்த உயிர்ச்சத்து  கிடைக்கும். 

வைட்டமின்  இ

இதுகுறைந்தால்  மலட்டுத்தன்மை  ஏற்படும்.  மேலும் தசை செயலிழப்பு ஏற்படும்.பால்,முட்டை, தாவர எண்ணெய்கள், முழுத்தானியங்கள்,ஆகியவற்றில்  இந்த இ வைட்டமின் இருக்கிறது.

வைட்டமின் பி1

இந்த வைட்டமின் குறைந்தால் பெரி பெரி  என்ற நோய் ஏற்படும். அதாவது உடல் முழுவதும் நரம்பு இருதயம், வயிற்றுச் சுற்றோட்ட  மண்டலங்களின் செயல்கள் பாதிக்கப்படும். தாவரங்களின்  விதைகள்,  தானியங்களின்  மேல் உறைகள்,  பட்டாணி, கொட்டை, மற்றும் இறைச்சி  இவற்றின் மூலம்  இச்சத்து கிடைக்கும்.

   வைட்டமின் பி2  இது குறைந்தால் வாயில் புண் ஏற்படும்., பால், முட்டை, ஈரல்,  காய்கறிகளிலிருந்தும்  கொட்டைகளில்இருந்தும்   இச்சத்தைப் பெறலாம். 

வைட்டமின் பி6

இது குறைந்தால்  அரிதாக நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.தேன், தானியங்களிலிருந்து  இச்சத்தைப் பெறலாம்.

வைட்டமின்பி2

இதுகுறைந்தால் வாய்ப்புண்ணும்  ,நரம்பு மண்டலக்குறைபாடும், ரத்த சோகை நோயும் ஏற்படும்.

பால் , முட்டை, ஈரல், மீன் மற்றும்  சிறிதளவு இறைச்சியிிலிருந்து இச்சத்தைப் பெறலாம்.,

வைட்டமின்  கே

இதுகுறைந்தால் ரத்தம் உறையும்,.நேரம் பிந்தி அதனால் உடலிலிருந்து  ரத்தம் வெளியேறும் ஆபத்து ஏற்படும்.பச்சை இலைக்காய்கறிகள், உருளைக்கிழங்கு, மீன் போன்ற  உணவுகளில் இச்சத்து உண்டு.

வைட்டமின் சி

இச்சத்து குறைந்தால்  உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்.  பல் ஈறுகளில்  ரத்தம் வடியும்.  ஸ்கர்வி எனும் நோய்  ஏற்படும். எலுமிச்சை, ஆரஞ்சு, போன்ற சிட்ரிக் அமில வகைப்பழங்கள்,  காய்கறிகள், காலிஃப்ளவ்ர், முட்டைக்கோஸ், தக்காளி, முருங்கை,  கொய்யா, ஈரல், இவற்றில் இச்சத்து  உள்ளது. 

எனவே மேற்கண்ட வழிமுறைகளை முறைப்படி கையாளுங்கள். நோய் வரும் முன் விழிப்புணர்வுடன் இருங்க..

நன்றி :சதானந்தம்.


Tags:    

Similar News