தோல் நோய்களை விரட்டியடிக்கும் டெர்மி போர்டு க்ரீம்:முதல்ல படியுங்க.....
Use of Dermiford Cream-மனிதர்களின் உடலுக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குவது சருமத்திலுள்ள தோல்களே. ஆனால் அந்த தோலில் நோய்கள் வந்தால் எவ்வளவு பிரச்னைகள் தெரியுமா-?;
Use of Dermiford Cream-மனித உடம்பில் அனைவருக்கும்அழகு கூட்டுவது தோல்தான். தோலின் நிறம்வெள்ளை, கருப்பு என்று பேதம் பார்க்க கூடாது. அது நமக்கு உடலுக்கான பாதுகாப்பினை வழங்குகிறது. ஆனால் அதே தோலில் நோய்கள் ஏற்பட்டால் மட்டும் அவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுபோகாது. சோரியாசிஸ், அதாவது பூஞ்சைக்காளான் நோய், நம் உடம்பிலிருந்து தோல் செதில் செதிலாக வெளிவரும். இதுபோல் பல தொற்றுநோய்கள் தோல்களினால் ஏற்படுகிறது. உடம்பு முழுக்க பரவும் ஆற்றல் கொண்டவை இந்த நோய்கள். இந்நோயெல்லாம் கண்டுவிட்டால் நாம் சாப்பிடும் உணவில் கடும் பத்தியம்இ ருந்தால் மட்டும் தான்இதன் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
தற்காலத்தில் தோல்நோய்களும் நாளுக்கு நாள் புது புதியதாக ஏற்படுகிறது. தோல்சிகிச்சையளிக்கும் டாக்டர்களின் கிளினிக் ஆஸ்பத்திரிகளிலும் கூட்டம் அதிகம் வருவதைக் காணும்போது இவையெல்லாம் எப்படி ஏற்படுகிறது? என்பது நமக்கே வியப்பாக இருக்கிறது. நாம்அன்றாடம் உபயோகப்படுத்தும் சோப் , வாசனை திரவியங்களினால் கூட நமக்கு ஒரு சில நேரங்களில் அலர்ஜி ஏற்படுகிறது. இதனால் கூட இதுபோன்ற தொற்றுக்கள் பரவ அதிகம் வாய்ப்புள்ளது.
தோல்நோய்கள் அதிகம் தாக்குபவர்களிடம் போதிய நோய் எதிர்ப்பு திறன் இல்லாததே காரணம் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் நாம் சாப்பிடும் அன்றாட உணவுகள் கூட நமக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது.அதேபோல் இன்று நாகரிகத்திற்காக அன்றாட உபயோகப்பொருட்களான சோப், சென்ட், டை, உள்ளிட்ட அழகு சாதன நறுமண பொருட்கள் கூட ஒரு சில நேரங்களில் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் ஒவ்வாமையை ஏற்படுத்தி பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது. எனவே முடிந்த வரை உங்களுக்கு ஒத்துபோக கூடிய பொருட்களை மட்டும்வாங்கி உபயோகியுங்கள். வாசனையை நம்பியோ கவர்ச்சியை நம்பியோ வாங்கி அவதிப்படாதீர்கள் தோல் நோய் பாதிப்பிலிருந்து. உங்கள் ஆரோக்யம் .. உங்கள் கையில்தானுங்க ..... கவனமா இருங்க.,
டெர்மி போர்டு க்ரீம் மருந்தானது நமக்கு ஒரு மிக வலுவான ஸ்டீராய்டுகளைக்கொண்ட மருந்து கலவைஆகும். அதிக ஆற்றல் கொண்ட பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிபிராடோசால் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் ஆகியவைகளை இது உள்ளடக்கியுள்ளன. உடலின் அழற்சியை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களின் செயல்பாடுகளைக் குறைக்கிறது.
மேலும் இம்மருந்தானது தோல்குறைபாடுகளினால் ஏற்படக்கூடிய பலவித நோய்களைக் கட்டுப்படுத்த பயன்படுகிறது. அதாவது தோலில் ஏற்படக்கூடிய வீக்கம், தோல்சிவந்து போதல், தோல் அரிப்பு போன்ற பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாக இது திகழ்கிறது. மேலும் தோல்களினால் ஏற்படும் அலர்ஜிகள், டெர்மாடிடிஸ், தடிப்புகள், தடிப்பு தோல் அழற்சி, தோல் அழற்சி உள்ளிட்ட பாதிப்புகளுக்கான சிகிச்சைக்கும் இம்மருந்து பயன்படுகிறது.
இம்மருந்தானது க்ளோபீட்டாசோல், ஜென்டாமைசீன், க்ளோட்ரிமோசோல், க்ளியோகுவினோல், டோல்நாஃப்டேட், ஆகிய மருந்துகளை கொண்டுள்ளது. டெர்மி கிரீம் டெர்மேடோஸீக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் லிபோகார்ட்டின் எனப்படும் கிளைகோ புரோட்டீன் உற்பத்தியை செயல்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது.
இம்மருந்தானது சோரியாசிஸ், டெர்மட்டிட்டிஸ், நோய்த்தொற்று, தோல் கோளாறுகள், எக்ஸிமா, நகக்கோளாறு உள்ளிட்டநோய்களையும் குணப்படுத்த வல்லது.எனவே உங்களுக்குதோல்சம்பந்தமான மேற்சொன்ன எந்த ஒரு பிரச்னையானாலும் தள்ளிப்போடாமல் உடனே சென்று டாக்டரை சந்தித்து உங்கள் முழு பிரச்னைகளை பற்றி சொல்லுங்கள்-டாக்டர் உங்களைப் பற்றி முழுவதுமாக கேட்டறிந்த பின்தான் சிகிச்சையையே ஆரம்பிப்பார். தோல் நோய்கள் பொறுத்தவரையில் உடனடியாக ஏற்படாது. அப்படி ஏற்பட்டாலும் அவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு போகாது. அப்படி போனாலும் அந்ததழும்புகள் நம்மைவிட்டு போக பல நாட்கள் ஆகிவிடும். எனவே மற்ற நோய்களைப் போல் தோல் நோய்களால் பாதித்தால் சிகிச்சைக்கு நாட்களை தள்ளிப்போடுவது நாமே நம் நோயின் தாக்கத்தினை அதிகப்படுத்திக்கொள்கிறோம் என்பதே உண்மை. உடனடியாக சென்றுவிடவேண்டியதுதான் டாக்டரிடம். கவனமாக இருங்க.
உதாரணத்திற்கு உங்கள் உடம்பில் ஏதாவது ஒரு பகுதியில் உங்கள்தோல் நிறத்திலிருந்து மாறுபட்டு வெள்ளை நிற புள்ளி தோன்றுகிறது என வைத்துக்கொள்ளுங்கள். இதனை சாதாரணமாக விட்டுவிட்டால் பின்னர் உடல் முழுக்க பரவிவிடும். இதுதாங்க தேமல். பரவியபின் சிகிச்சை எடுப்பதை விட பரவும் முன் சிகிச்சை மேற்கொள்வதே சாலச்சிறந்தது.
பக்கவிளைவுகள்
எரித்மா, முகப்பரு வெடிப்புகள், உலர்ந்த சருமம், தோல் எரிச்சல், எரிச்சல் அல்லதுகூச்ச உணர்வு, சருமம் சிவத்தல், தோல் மெலிதல், எளிதான சிராய்ப்பு மற்றும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சொல்லிவிடவேண்டும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2