நீங்க .... கம்ப்யூட்டரில் அதிகம் வேலை செய்பவரா?.... முதல்லஇதைப் படியுங்க....

Computer Job Work - இந்தியாவில் இன்றுஅனைத்து துறைகளுமே கம்ப்யூட்டர் மயமாகி விட்டது. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு சில உடல் ரீதியான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Update: 2022-10-11 11:37 GMT

computer work person take precaution



computer work person take precaution

நம்நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்கள், அரசு ஆபீஸ்கள், மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தற்போது கம்ப்யூட்டர் ஆக்கிரமித்துவிட்டது. இப்போதுள்ள சூழ்நிலையில் கம்ப்யூட்டரை ஆபரேட் செய்ய தெரியாதவர்களுக்கு வேலை இல்லை. சாதாரண கடைகளில் கூட இப்போது கம்ப்யூட்டர் ஆதிக்கம்தான். இதனால் கம்ப்யூட்டரை தொடர்ந்து உபயோகிப்பதன் காரணமாக கண்களில் நோய் பாதிப்பு ஏற்படுவதாக டாக்டர்கள், கருத்துதெரிவித்துள்ளதோடு அதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளனர்.

கம்ப்யூட்டர் பார்வைக்கோளாறு

கம்ப்யூட்டரை தொடர்ந்து உபயோகிப்பதால் முதலாவதாக கண்களானது களைப்படைகிறது. பின்னர் கண்கள் உலரும் தன்மையைஅடைகின்றது. தொடர்ந்து சேரிலேயே உட்கார்ந்துகொண்டு வேலை செய்வதினால் கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலி ஏற்படுகிறது. இதுபோல்தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு தலைவலியும் தொடர்ந்து தாக்குகிறது. நாளடைவில் கண்களில் கோளாறு ஏற்பட்டு பார்வையானது மங்கலாகி இரட்டைப்பார்வை கிடைக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் உடனடியாக கண் டாக்டரைச் சந்தித்து உடனடி சிகிச்சை மேற்கொள்வது அவசியம் ஆகும்.

தடுப்பிற்கான பயனுள்ள குறிப்புகள்

* நீங்கள் உபயோகிக்கும் கம்ப்யூட்டரின் நிலையினை சரிசெய்து கொள்ளவும். 20 இஞ்ச் முதல் 26இஞ்ச் அங்குலம் எனும் பார்வைத் தொலைவானது மிகச்சிறந்தது.

*கம்ப்யூட்டர் மானிட்டரை உங்களது கண்களின் பார்வை நிலைக்கு கீழிருக்குமாறு அமைக்க வேண்டும்.

*கம்ப்யூட்டர் திரையினை 10 டிகிரிமுதல் 20 டிகிரிக்கு சாய்க்கவும்.

*எழுத்தின் அளவானது உங்களால் படிக்க முடிகின்ற மிகச்சிறிய எழுத்தளவை விடமூன்று மடங்கு பெரிதாக இருக்க வேண்டும்.

*சிரமமில்லா பார்வைக்கு ஏற்ப ஒளிர்வையும் காண்ட்ராஸ்டையும் சரி செய்து கொள்ள வேண்டும்.

computer work person take precaution


படத்தில்  5 மானிட்டர்களை ஒரு சேர பார்த்து வேலை செய்கிறார்  (பைல்படம்)

கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு...

*உங்களுக்கு கண்களில் பிரச்னைகள் ஏற்படும் அபாயத்தைக்குறைப்பதற்கு, உங்களுடைய கண்டாக்டரைச் சந்தியுங்கள்.

*கம்ப்யூட்டர் கண் கண்ணாடிகள் திரையின் பார்வையை தெளிவாக்குமா? கம்ப்யூட்டர் பார்வைக் கோளாறைக் குறைப்பதற்கு கம்ப்யூட்டர்கண்ணாடிகள் உதவுகின்றன. கண் பிரச்னையைத் தடுப்பதற்கு முறையான கம்ப்யூட்டர் கண் கண்ணாடிகளுக்கு கண் டாக்டரைஆலோசியுங்க..

*கம்ப்யூட்டர் கூசொளி தடுப்பு திரைகள், கம்ப்யூட்டர் பார்வைக்கோளாறைத் தடுக்கிறதா? அது சற்றே சவுகரியத்தைக் கூட்டலாம். ஆனால் உங்களது கம்ப்யூட்டர் பார்வை பிரச்னைகள் அனைத்தையுமே அவை சரி செய்யாது. பிரதிபலிப்புகள் மூலமான கூசொளியைக்குறைப்பதற்கு அவை உதவுகின்றன. ஆனால் கம்ப்யூட்டர் பார்வைக் கோளாறின் காரணமான பார்வை பிரச்னைகளைக் குறைப்பதில்லை.

*கம்ப்யூட்டர் பார்வைக் கோளாறின் அறிகுறிகள் இல்லையென்றாலும் கண் கண்ணாடிதேவையா?

கம்ப்யூட்டர் பார்வைக் கோளாறின் அறிகுறிகள் இல்லாத கம்ப்யூட்டர் பயனர்களும் கூட கம்ப்யூட்டர் கண் கண்ணாடிகள் மூலம் பயனடையக்கூடும்.

computer work person take precaution

இடைவேளை எடுங்க..

20-20-20 விதியை பின்பற்றுங்கள்.

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் 20 அடி தொலைவிலுள்ள பொருளை 20நொடி நேரத்திற்கு பார்க்க வேண்டும்.

தொடர்ந்து கம்ப்யூட்டர் உபயோகிப்பவராக இருந்தால் கண் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வதேஉத்தமம். 

இதுமட்டுமல்லாமல் தற்காலத்தில் நம்  கண்களை கபளீகரம்  செய்ய ஸ்மார்ட்போன் என்ற ஆயுதம் வேறு உள்ளதால்நம் கண்களுக்கு ஓய்வு என்பதே உறக்க நேரத்தில் என்பதாகிவிட்டது. எனவே கடவுள் கொடுத்த கண்களைக் காப்பாற்றிக் கொள்வது நம்  கையில்தான்இருக்கிறது.  அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுங்க. குறிப்பாக உங்கள் வீடுகளில் சிறு குழந்தைகள்இருந்தால் அவர்களிடம் அதிக நேரம் ஸ்மார்ட் போனை தராதீர்கள். காரணம்  என்ன வெனில்கண்களிலுள்ள இளநரம்புகள் பாதிக்கப்படுவதோடு பார்வைக்கோளாறு பிரச்னையை சந்திக்க நேரிடும். 

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News