cat fish in tamil
உடலுக்கு பல நன்மைகளைத் தரும் கெளுத்தி மீனின் முழுத்தோற்றம். மீசையோடு.
cat fish in tamil
இந்தியாவில் பலர் அசைவ உணவுகளை வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடுவோர் உண்டு. ஒரு சிலருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடுவோர். பலருக்கு தினமும் ஒரு பீசாவது அசைவம் அதாவது முட்டையாவது உணவில் சோ்த்துக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் சாப்பிட்டது போல் இருக்காது என சாப்பிடுவோரும் உண்டு.உண்மையில் அசைவ உணவுகளை அளவோடு சாப்பிடுவோருக்கு மட்டுமே ஆரோக்ய பாதுகாப்பு. அளவில்லாமல் சாப்பிட்டால் ஆபத்து என்ற உண்மையும் உள்ளது. இது சரிதாங்க., ஆனால் ஒருசிலர் இதில் பாதக அம்சங்கள் இருப்பதால் நான் அசைவ உணவுகளையே தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறிவிட்டேன் என பலர் மாறியதும் உண்டு.
சரிங்க... கடல் வாழ் உயிரினங்களான மீன் வகைகள் அனைத்துமே சாதாரணமானவை அல்ல. ஒவ்வொரு மீன் வகைகளுக்கும் நோய் தீர்க்கும் மருத்துவ குணங்கள் உள்ளது. அந்த வகையில் கெளுத்தி மீன் என்றும் பூனை மீன் என்றும் சொல்லப்படும் கெளுத்தியில் என்னதாங்க சத்துள்ளது என்பதை பார்த்துவிடுவோமா.,.... வாங்க...
தற்போது மாறி வரும் உணவுப்பழக்கத்தால் சிறுகுழந்தைகள் கூட உடல் பருமனாகி அவதிப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் எடையை குறைக்க படாது பாடு படுவோரை நாம் கண்டிருக்கிறோம். இதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்வோரும் உண்டு. ஏங்க எக்சர்ஸைஸ் மெஷின் வீட்டிலேயே வாங்கணா லட்சத்துக்கு மேலயும் ஆகுமுங்க....
இவ்வகை கெளுத்தி மீனில் குறைந்த அளவு கலோரி உள்ளதால் இதனை தினமும் உணவில் சேர்த்து வரும் பட்சத்தில் இதயம் மற்றும் அறிவுசார்ந்த குறைபாடுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இவ்வகை மீனிலுள்ள புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை உடலுக்கு அதிக ஆற்றலை கொடுப்பதாக உள்ளது.மேலும் இதில் அதிக புரதம் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைாக இருப்பதால் உடலில் அ திகப்படியான கெட்டகொழுப்பை கரைக்க உதவுகிறது.
cat fish in tamilகெளுத்தி மீன் உயர் புரதச்சத்தால் நிரம்பியது. மனிதர்களுக்கு தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் ஒமேகா 3 புரதச்சத்துகளையும் உள்ளடக்கியது கெளுத்தி மீன். மனிதர்களுக்கு உடலில் உயிர்அணுக்களை சரிசெய்வது, புதியவற்றை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இம் மீன் உணவு அவசியமாகிறது.மனித உடலுக்குதேவையான தசைகள், திசுக்கள் மற்றும் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான வலிமையை கொடுக்கிறது. வளரும் குழந்தைகள் கர்ப்பிணிகள், இளவயதினர், தங்கள் உணவில் அதிகமாக இந்த வகை மீன்களை சேர்த்துக்கொள்ளலாம்.
இவ்வகை மீன்களை மதிய உணவிற்கு எடுத்துகொண்டாலும் சோம்பலோ துாக்கமோ வராது. இவற்றில் கார்போஹைட்ரேட்கள் இல்லாததால் எடை இழப்புக்கு ஒரு சிறந்த ஆதாரமாக இருக்கிறது.இவ்வகை மீன்களை உயர் ரத்த அழுத்த நோயாளிகள் சாப்பிட்டுவரும் பட்சத்தில் அவர்கள் அந்நோயிலிந்து விடுபட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இம் மீனில் குறைந்த அளவு சோடியம் உள்ளது. அதாவது 100 கிராம் கெளுத்தி மீனில் 47 மி.கி. சோடியம் மட்டுமே உள்ளது.
துத்தநாகம், பொட்டாசியம்,கால்சியம் போன்ற உடலுக்கு தேவையான முக்கியமான தாதுப்பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளதால் கெளுத்தி மீனை உட்கொள்வது உடலுக்கு ஆரோக்யமானதோடு பாதுகாப்பானதாக உள்ளது.மேலும் மனித உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், காயமடைந்த திசுக்களை மறுபடியும் புதுப்பிக்கவும், உடலில் எலக்ட்ரோலைட் சமநிலை சீராக்கவும் இது உதவுகிறது.
cat fish in tamilமனித உடலில்ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை அதிக அளவில் கொண்டவர்கள் குறைந்த அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டவர்களைவிட சுமார் 2.2 ஆண்டுகள் வாழ்ந்ததாக மருத்துவ ஆராய்ச்சி மூலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வகை மீன்களில் இக்கொழுப்பு சத்துகள் அதிகம் உள்ளன. இதனால் மாரடைப்பு, மூளை பாதிப்பு,. பக்கவாதம், போன்றவற்றினை உடலில் ஏற்படுவதை குறைக்கிறது.
இவ்வகை கெளுத்தி மீனைச் சாப்பிடுவோரை பக்கவாதம் மற்றும் பார்கின்சன் நோயிலிருந்து பாதுகாக்கிறது. மூளையின் ஆரோக்யம் அதிக அளவில் மேம்படுகிறது.மூளையின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதோடு ஆரோக்யத்தினையும் பாதுகாக்கிறது.