தசைகளுக்கு வலிமை தரும் ஷீலா வகை மீன் உணவுகள் முதல்ல படிச்சு பாருங்க.....

Bararcuda Fish in Tamil-கடல் வாழ் உயிரினங்களான மீன் வகைகள் அனைத்தும் தன்னகத்தே பல தாதுப்பொருட்களை கொண்டுள்ளது.;

Update: 2022-09-03 07:48 GMT

Bararcuda Fish in Tamil


Bararcuda Fish in Tamil-அசைவ உணவு பிரியர்கள் அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்ய பாதிப்பு ஏற்படும் என எச்சரித்தாலும் அவர்கள் விடுவதாக இல்லை. ஆனால் இறைச்சி வகைகளில் இந்த வகையான பாதிப்பு இருக்கிறது என சொல்லப்படுகிறது. அதுவே மீன் வகைகளில் ஒரு சில மீன்கள் சத்தான தாதுப்பொருட்களை தன் சதைப்பகுதியில் கொண்டுள்ளதால் இதனால் பல நோய்களுக்கு அருமருந்தாகிறது அவ்வகை மீன் உணவுகள். இதனை அதிகமாக சாப்பிடக்கூடாது. இருந்தாலும் அவ்வப்போது சாப்பிடலாம்? என சொல்கின்றனர். அந்த வகையில் கடல் வாழ் உயிரின மீன் வகைகளில் ஒன்று ஷீலா மீன் வகை . இதனை ஆங்கிலத்தில் பாரகுடா என அழைக்கின்றனர்.

இந்த மீன் உணவிற்குப் பயன்படும் முதுகெலும்புள்ள திருக்கை மீன் போன்ற ஒருவகை மீன் இனம் ஆகும். இவற்றின் தோல் பகுதி மென்மையான செதில்களைக்கொண்டு காணப்படுகிறது. இவை பொதுவாக 2.1 மீட்டர் (6.9 அடி) நீளமும், 30 செமீ (12 அங்குலம்) அகலமும் கொண்டு காணப்படுகிறது.இவை அட்லாண்டிக் பெருங்கடல், கரிபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் போன்றவற்றில் காணப்படுகிறது. இவை உப்பு நீரிலும், நன்னீரிலும் வளரும் தன்மைகொண்டது. இவை தண்ணீரின் மேல் மட்டத்திலும் பவளப்பறைக்கு அருகிலும் வாழுகிறது.

ஓலை போன்று நீளமாகவும், மெல்லியதாகவும் இருக்கக்கூடிய ஓலைச் சீலா, கட்டையாக உடல் முழுவதும் சாம்பல் நிறத்தில் இருக்கும் கட்டையஞ்சீலா, உருண்டை வடிவத்தில் இருக்கும் குழிச் சீலா, உடல் முழுவதும் சாம்பல் நிறத்திலும், வாலில் மட்டும் மஞ்சள் நிறத்தில் கரை ஓரங்களில் வாழக்கூடிய கரைச் சீலா, கொழுப்பு அதிகமாக உள்ள சாப்பிடுவதற்கு, சுவை அதிகம் கொண்ட நெய் சீலா, மற்றும் வெள்ளுராச் சீலா, லோப்புச் சீலா, நாய்க்குட்டி சீலா என எட்டு வகையான சீலா மீன்கள் காணப்படுகின்றன.

இதில் நெய் சீலா மீன்களை மட்டும், அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.400 வரையிலும் விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். மற்ற 7 விதமான சீலா மீன்கள் கருவாடாக அதிகளவில் பதப்படுத்தி, தமிழகம் மற்றும் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன

தசைகளுக்குவலிமை

இந்த வகை மீன் சாப்பிடுபவர்களின் தசையானது வலுவாகிறது. மேலும் விளையாட்டு வீரர்களுக்கு இது அவசியம் தேவையான உணவுப்பொருளாகவும் விளங்குகிறது. தசைகளின் வளர்ச்சிக்கு இம் மீன் உணவு பெரும் பங்காற்றுகிறது.

Bararcuda Fish in Tamil

தோல் அழற்சிக்கு

ஒரு சிலருக்குதோல் அழற்சி நோயால் பாதிப்படைந்திருப்பர். அதாவது பாக்டீரியா, வைரஸ் மற்றும் உணவுகளினால் ஏற்படும் அலர்ஜி போன்றவற்றால் இதுஏற்படுகிறது. மேலும்இத்தகைய நோய் உள்ளவர்களுக்குஅருமருந்து ஷீலா வகை மீன். காரணம் நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளதால் இந்த மீனை உட்கொண்டால் இந்நோய்க்கு தீர்வு கிடைக்கும். அதுவே டாக்டர்கள் எழுதித்தரும் நோய் எதிர்ப்பு திறன் மருந்துகள் அனைத்துமே குறுகிய கால பலனை மட்டுமே அளித்து நோயில் இருந்து நிவாரணம் பெற வைக்கும்.மேலும் மருந்துகளினால் வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால் இம் மீனைச் சாப்பிட்டால் நிரந்தர தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

வைட்டமின் பி 2

இந்த வகை ஷீலா மீன்களில் வைட்டமின் பி 2 சத்து அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் பி2 உடலுக்கு வெளியே இருந்து சப்ளை செய்யப்படுகிறது. இந்த மீனில் வைட்டமின் பி2 சத்து அதிகம் உள்ளதால் நரம்புகளை பாதுகாக்க பயன்படுகிறது.

ஹீமோகுளோபின் உற்பத்தி

இந்த வகை மீன்களில் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு பயன்படும் வினையூக்கியான பிரிடாக்சின் அதிக அளவு உள்ளது. இதனால் இது நமது ரத்த உற்பத்தியை சீராக்கும் .

வளர்சிதை மாற்றத்துக்கும் இவ்வகை மீன் நமது ஆரோக்யத்துக்கு துணை புரிவதாக உள்ளது. அதாவது வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளை இந்த வகை மீன் உணவு சீரமைத்து ஆரோக்யத்தினை பாதுகாக்ககூடியதாக உள்ளது.

மேலும் நமது உடலில் ஏற்படக்கூடிய வலிகள், சுவாச சீரான இயக்கம், மயக்கம் வருதல் போன்ற நிலை, துாரப்பார்வை, மற்றும் இதய படபடப்பு போன்ற ஆரோக்ய பிரச்னைகளையும், மனநிலை பிரச்னைகளை போக்கும் குணம் கொண்ட தன்மைகளை ஷீலா வகை மீன் உணவுகள் கொண்டுள்ளது.

Bararcuda Fish in Tamil

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் பாதிப்படைந்துள்ளோர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இந்த வகை மீனில் உள்ள சத்துகள் இந்நோயைத்தடுக்க பேருதவி புரிகிறது. மேலும் உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தருவதாக உள்ளது.

உயிரணுக்கள்

ஆண்களின் உயிரணுக்களின் எண்ணி்க்கையை அதிகரிக்கவும் வலுவானதாகவும் மாற்ற இவ்வகை மீன் உணவு பயன்படுகிறது.இதுபோல் பாதிப்படைந்தவர்கள் இவ்வகை மீனை உட்கொண்டால் அந்த பாதிப்பிலிருந்து மீளலாம்.

ஷீலா வகை மீனை உட்கொண்டால் நம் ரத்த ஓட்டத்தினை சீர்படுத்தும் பணியினை இது செய்கிறது. மேலும் இதிலுள்ள டிபிஏ, டிஎச்ஏ, மற்றும் ஒமேகா 3 ஆகியவைகள் நம் உடலிலுள்ள ஐகோசனாய்டு ஹார்மோனை உற்பத்தி செய்து ரத்தம் உறைதலிலிருந்தும் வலிகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

பெரும்பாலான மருத்துவ ஆய்வுகள் மீன்களிலுள்ள ஒமேகா 3 அமிலங்கள் அனைத்தும் பார்வைகுறைபாடுகளை தடுக்கிறது என தெரிவிக்கிறது. ஷீலா வகை மீன்களிலுள்ள ரெடினால் பார்வை புலத்தினை அதிகமாக்குகிறது. மேலும் ரெடினால் என்பது ஒரு வகையான வைட்டமின் ஏ திரிபு ஆகும்.

இந்த வகை மீன்களை அதிகம் சாப்பிடுவோருக்கு நுரையீரலை பாதுகாக்கிறது. மேலும் ஆஸ்துமா மற்றும்குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளையும்இது குணமாக்குகிறது. மேலும் இதனை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு நுரையீரல் பாதுகாப்பினை வழங்குகிறது.

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு வகை நோய்தான் மனச்சோர்வு . இந்த வகை மன அழுத்தம் மனசோர்வு உள்ளிட்ட மனநல நோய்களுக்கு தீர்வே கடல் வாழ் உயிரினங்களான மீன் உணவுதான் என்று ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளது. மேலும்மன அழுத்தம் ஒமேகா 3 குறைவினால் ஏற்படக்கூடியது. இம் மீன் உணவினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த நோயிலிருந்து விடுபட்டு விடலாம்.

மூளைக்கு புத்துணர்ச்சி

ஒமேகா 3 கொழுப்பிலுள்ள டிஎச்ஏவின் அளவு குழந்தைகளின் நினைவாற்றலை அதிகமாக்குகிறது. மேலும் குழந்தைகள் படித்தல் மற்றும் கவனத்திலுள்ள சிக்கல்களை போக்குகிறது. மனித மூளையானது 60 சதவீத கொழுப்பு கொண்டது என்பதை நினைவில் கொள்ளவும்.

Bararcuda Fish in Tamil

அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்பது போல் எந்த வகை உணவாக இருந்தாலும் அளவோடுதான் சாப்பிட வேண்டும். மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது என அதிகமாக சாப்பிட்டால் நமக்கு எந்த நோயுமே வராது என்ற கணிப்பு தவறானது. எனவே எந்த உணவாக இருந்தாலும் அளவோடுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இதற்கான பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை மட்டும் கவனித்து கொள்ளுங்க


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News