அட்டோர்வாஸ்டடின் மாத்திரையின் பயன்பாடுகள்

Atorvastatin Tablet Uses in Tamil-அட்டோர்வாஸ்டடின் மாத்திரை உடலின் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்க பயன்படுகிறது;

Update: 2022-05-26 09:24 GMT

Atorvastatin Tablet Uses in Tamil-அட்டோர்வாஸ்டடின் உடலில் குறைந்த அடர்த்தி லிப்போபுரதம் அல்லது கெட்ட கொழுப்புகளின் அளவை குறைக்கிறது. உடலில் கொழுப்பு அளவு அதிகமாக இருப்பதால் ஏற்படும் தமனிகள் குறுகுதல் போன்ற பல்வேறு நிலைமைகளையும் குணப்படுத்த இது உதவுகிறது. இந்த மருந்து, கல்லீரல் மற்றும் இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மூலம் கெட்ட கொழுப்பை வெளியேற்றி  உடலின் திறனை அதிகரிக்கும் 

மேலும் இது உடலில் உள்ள கல்லீரல் கொழுப்பின் அளவையும் பக்கவாதம், மாரடைப்பு அல்லது கரோனரி இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைக்க இந்த மருந்து பயன்படுகிறது.

அட்டோர்வாஸ்டடின் இரத்தத்தில் உள்ள அதிக அளவு லிப்பிடுகளால் ஏற்படும் ஹைப்பர்லிபிடேமியா நோய்க்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.

ஹைப்பர்ட்ரைக்ளைசெரிடெமியா (Hypertriglyceridemia)

இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பைக் கொண்டு இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் ஹைப்பெர்டிரைகிளிசெரிடெமியா என்ற நோயின் சிகிச்சையில் அட்டோர்வாஸ்டடின் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவரின் அறிவுரைப்படி அட்டோர்வாஸ்டடின் மாத்திரை பயன்படுத்த வேண்டும். இது மாத்திரை வடிவத்தில் கிடைக்கிறது.

சிறந்த முடிவுகளுக்கு வழக்கமான மருந்து அளவினை எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். எனினும், நீங்கள் ஒரு வேளைக்கான மருந்தை உட்கொள்ள தவறவிட்டீர்கள் என்றால், அடுத்த வேளை கூடுதல் மருந்தளவை எடுத்து அதை ஈடு செய்ய முயற்சிக்க வேண்டாம். அது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

இதனை யாரெல்லாம் பயன்படுத்தக் கூடாது?

நீங்கள் ஏதேனும் கல்லீரல் நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தால் அட்டோர்வாஸ்டடின் பயன்படுத்துவது தீங்கானது.

மேலும், இந்த மருந்தை 10 வயதுக்கு குறைவான யாரும் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. கர்ப்பிணிப் பெண் அல்லது கர்ப்பமடையத் திட்டமிடும் பெண்கள் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளக்கூடாது.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டாலோ அல்லது டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்தாலோ, இந்த மருந்தை உட்கொள்வது தொடர்பாக மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

மருத்துவரின் அனுமதி தேவைப்படும் வேறு சில நிபந்தனைகள்:

நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்து அல்லது உணவு பொருட்கள் எடுத்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஏதேனும் உணவு அல்லது மருந்துக்கான ஒவ்வாமை இருந்தால், நீங்கள் தொடர்ந்து மது உட்கொண்டிருந்தால், நீங்கள் ஏதேனும் வகையான தசை பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு நீரிழிவு நோய் போன்றவை இருந்தால் குறைந்த ரத்த அழுத்தம் இருந்தால், இவையெல்லாம் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

Atorvastatin Tablet uses in Tamil அட்டோர்வாஸ்டடின் மாத்திரை

பக்க விளைவுகள்.


மலச்சிக்கல், தலைவலி, வயிற்று வலி, பலவீனம் முதலியன அவற்றில் பொதுவாகக் காணப்படும். எனினும் சில நேரங்களில் ஒவ்வாமை எதிர்வினைகள், சிறுநீரில் இரத்தம், மார்பு வலி, கடுமையான முதுகு வலி, தோல் அல்லது கண்கள் மஞ்சள் நிறமாக இருப்பது போன்ற கல்லீரல் பிரச்சனைகளுக்கான அறிகுறிகளான சில கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

இந்த கடுமையான பக்க விளைவுகள் தோன்றினால், உடனே மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது

அட்டோர்வாஸ்டடின் மாத்திரையை 20 முதல் 25 டிகிரி செல்சிசைஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். வெப்பம், ஈரப்பதம், நேரடி சூரிய ஒளி ஆகியவற்றில் இருந்து இதை தள்ளி வைக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளின் கைக்கு எட்டாத தூரத்தில் இருந்து மருந்தை எடுத்து வைக்கவும்.

இதையும் படிங்க 

ஆஸ்பிரின் மாத்திரை, அசித்ரோமைசின் மாத்திரை, ஜின்கோவிட் மாத்திரை, ரனிடிடைன் மாத்திரை, பான் 40 மாத்திரை, 

Tags:    

Similar News