முடக்கு வாதத்தை குணப்படுத்தும் புதிய மருந்து
முடக்கு வாதத்தை அழற்சி எதிர்ப்பு மருந்துகளுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட மருந்துகள் குணப்படுத்துவதை சாத்தியமாக்கியுள்ளது.
முடக்கு வாதத்தை அழற்சி எதிர்ப்பு மருந்துகளுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட மருந்துகள் குணப்படுத்துவதை சாத்தியமாக்கியுள்ளது.
அழற்சி எதிர்ப்பு மருந்துகளுடன் இணைந்து புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட மருந்து, முடக்கு வாதத்தை குணப்படுத்துவதில் ஆய்வக அளவில் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தியுள்ளது. இது முடக்கு வாதத்தினால் ஏற்படும் வலியைச் சரிசெய்யவும், எலும்புக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும் குருத்தெலும்பு ஒருங்கிணைப்பை மீட்டெடுப்பதன் மூலம் நோயைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
முடக்கு வாதத்திற்கு சிகிச்சையளிப்பதற்கான முறைகள் பெரும்பாலும் வலியில் இருந்து நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்துகின்றன. இந்நோய்க்கு நிரந்தரத் தீர்வு இன்றுவரை கிடைக்கவில்லை. இந்நோயின் சிகிச்சைக்கு மெத்தோட்ரெக்ஸேட் (எம்.டி.எக்ஸ்) மருந்தைத் சிறந்தத் தேர்வாகக் கருதினாலும், அதன் கடுமையான பக்க விளைவுகள் காரணமாக, ஆராய்ச்சியாளர்கள் தற்போது மாற்று மருந்துகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஆப் நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (இன்ஸ்ட்) விஞ்ஞானிகள், இந்த புதிய மருந்தின் திறனை ஆய்வு செய்துள்ளனர். டாக்டர் ரெஹான் கான் தலைமையிலான ஆய்வுக் குழு, அழற்சி எதிர்ப்பு மருந்துடன் இணைத்து ஒருங்கிணைப்பட்ட மருந்து, சோதனையளவில் குருத்தெலும்பு சிதைவைத் தடுப்பதில், மேம்பட்ட திறனை வெளிப்படுத்தியது. இந்த மருந்து விநியோக முறை எளிமையானதாக உள்ளதோடு, செலவு குறைந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது. இந்த மருந்து ஆய்வகத்தில் எலிகளுக்கு அளித்து பரிசோதிக்கப்பட்டது.