தினம் ஒரு பேரிச்சம்பழம்...! பழமாக சாப்பிட்டால் உடம்பில் நடக்கும் அதிசயங்கள்..! இனிமேல் நாமும் சாப்பிடலாமா....? | Dates Benefits in Tamil

Dates Benefits in Tamil - பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்வதால் எலும்புகள் உறுதியாகும். மேலும் இப்பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.அனைத்து சத்துக்களுமே இதில் உள்ளது.இதன் நன்மைகள் அனைத்தையும் பார்ப்போம்.;

Update: 2024-11-20 04:30 GMT

Dates Benefits in Tamil

பேரீச்சை (Dates)  பனை வகையைச் சேர்ந்த ஒரு மரம். இம்மரம் இதனுடைய இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது.இம்மரம் தோற்றத்தில் தமிழகத்தில் இயல்பாக காணப்படும் ஈச்சை மரத்தை ஒத்தது. இதனால் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கிறது. இதை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலிமை தரும். இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். வெறும் பேரிச்சம் பழமாகவும் சாப்பிடலாம் பாலில் ஊற வைத்தும் சாப்பிடலாம். உடலுக்கு மிகவும் நல்லது. 


பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Dates Benefits in Tamil

1. வெயில் காலங்களை விட குளிர் காலங்களில் நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும். அந்த வகையில் ஆரோக்கிய உணவுகளை குளிர் காலத்தில் எடுத்து கொண்டால் நோய் கிருமிகள் நம்மை அண்டாமல் தடுக்கலாம். குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும். இவை அனைத்துமே பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன.

2. சூரிய ஒளி நம்மீது குறைவாக படுவதால் உடலில் வைட்டமின் டி உற்பத்தி குறைவாக இருக்கும். எலும்புகளுக்கு வலு சேர்க்க வைட்டமின் டி பெரிதும் உதவுகிறது. எனவே பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்வதால் எலும்புகள் உறுதியாகும். மேலும் இப்பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் மெக்னீஷியம் நிறைந்துள்ளதால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

3. பேரிச்சம் (Dates) பழத்தில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் பற்கள் வலுவாக இருக்க உதவும்.

4. பேரீச்சம் பழத்தில் மெக்னீஷியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளதால் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.

5. பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ராலை (cholesterol) குறைத்து மாரடைப்பு மற்றும் அதிக இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும்.


6. பேரீச்சம் பழத்தை காலை மற்றும் மாலையில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டு வந்தால் குளிர் காலத்தில் ஏற்படும் மந்த தன்மை நீங்கும்.

7. உடலுக்கு தேவையான வெப்பத்தை குளிர் காலங்களில் பேரீச்சம் பழம் தர உதவும். எனவே இதை சாப்பிடுவதால் உங்களை எப்போதும் வெதுவெதுப்பாக வைத்து கொள்ளலாம்.

8. இன்று பல பெண்கள் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அவர்களின் ஆரோக்கியம் பெரிதளவில் மாற்றம் அடைந்துள்ளது. எப்போதும் சோர்வாக இருப்பது, முடி கொட்டும் பிரச்சனை, குறைந்த எதிர்ப்பு சக்தி, மங்கிய தோல், கர்ப்ப காலத்தில் கருக்கலைப்பு உண்டாகும் அபாயம் போன்ற பாதிப்புகள் இரத்த சோகையினால் ஏற்படுகிறது. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பேரீச்சம் பழம் பெரிதும் உதவும். எனவே இதை சாப்பிட்டு வருவதால் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்களின் கரு வளர்ச்சிக்கும் இது உதவும்.

9. பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் செரிமானத்தை சீராக்குவதோடு, குடல் புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கிறது.

10. பேரிச்சம் பழத்தில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மை உள்ளதால் சருமத்தை இளமையாக வைக்க இது உதவும் மற்றும் செல்களின் பாதிப்பையும் குணமாக்கும்.

Tags:    

Similar News