இந்த நட்சத்திர தம்பதியும் பிரிய போறாங்களா..?

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Update: 2024-06-28 04:46 GMT

ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதி


சமீபத்தில் கூட ஆர்த்தி தனது கணவர் ஜெயம் ரவி மடியில் அமர்ந்திருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அதை நடிகர் விஜய் எடுத்ததாக கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில்..

சினிமா உலகில் நட்சத்திர தம்பதிகளுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம். சினிமா வட்டாரத்திற்குள்ளேயே காதலித்து திருமணம் செய்துகொள்ளும் நட்சத்திர தம்பதிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பும், அன்பும் இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக சினிமா பிரபலங்களின் திருமண விவாகரத்து செய்தி அதிகரித்து கொண்டே வருகிறது என்றுதான் கூற வேண்டும். அட என்ன ஜோடிப்பா.. மேட் பார் ஈச் அதர் என்றெல்லாம் சொல்லப்பட்ட தம்பதி திடீரென தங்களது விவாகரத்தை அறிவிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நாக சைதன்யா - சமந்தா, தனுஷ் - ஐஸ்வர்யா, ஹ்ரித்திக் ரோஷன், அமீர் கான், சமீபத்தில் ஜிவி பிரகாஷ் - சைந்தவி போன்றோரின் விவாகரத்து சினிமா வட்டாரம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஷாக் கொடுத்தது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த விவாகரத்து செய்தியால் எது வதந்தி.. எது உண்மை என்றே தெரியாத வகையில் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஆரம்பத்தில் வதந்தி என்று புறக்கணிக்கப்படும் செய்தி, பின்நாளில் உண்மையாகவே நடந்து விடுகிறது.

அப்படி, தற்போது இந்த விவாகரத்து விவகாரத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் பெயர் சில நாட்களாகவே அடிபட்டு வருகிறது. ஜெயம், சம்திங் சம்திங், பேராண்மை, தனி ஒருவன், இறைவன், பொன்னியின் செல்வன், சைரன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நட்சத்திர தம்பதிகளில் இவர்களும் ஒருவர்.

சமீபத்தில் கூட ஆர்த்தி தனது கணவர் ஜெயம் ரவி மடியில் அமர்ந்திருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அதை நடிகர் விஜய் எடுத்ததாக கேப்ஷனுடன் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், சமீப காலமாக ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் உலா வந்தது, இது வதந்தியா என்று நினைக்கையில், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் பதிவிட்டிருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் உண்மையிலேயே பிரிக்கின்றார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Tags:    

Similar News