எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
சினிமா ஊழியர்களும் கதாநாயகன் சாப்பிடும் சாப்பாட்டினை தான் சாப்பிடனும் என்ற விதிகளை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.,;
எம்.ஜி.ஆர்., வாரத்தில் நான்கு நாட்கள் அசைவ உணவுகள் சாப்பிடும் பழக்கம் வைத்திருந்தார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் அதிமுக உருவாக்கத்தின் போது 12 பேர்களில் ஒருவராக கையெழுத்து போட்டவருமான முன்னாள் எம்எல்ஏ. திருச்சி சௌந்தர்ராஜன். இவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் குறித்து இவ்வாறு சொல்கிறார்.
எம்ஜிஆர் ஒரு அசைவப்பிரியர். எல்லாம் சாப்பிடுவார். கோழி, கருவாடு எல்லாம் சாப்பிடுவார். வாரத்தில் நாலு நாள் நான் வெஜ். கறிக்கொழம்பு தேங்காய்ப்பால்ல தான் வைப்பாங்க. நெத்திலி கருவாடு நிறைய சாப்பிடுவாங்க. கொழம்பு ஊற்றினதும் கொஞ்சம் வாயில் வைத்து டேஸ்ட் பார்ப்பார். எம்ஜிஆர் என்ன சாப்பிடுகிறாரோ அதை லைட்மேன்கள் உள்பட படப்பிடிப்பில் உள்ள எல்லாரும் சாப்பிடணும் என்று அவர் தான் முதன் முதலில் கொண்டு வந்தார். எம்ஜிஆர் விரும்பி சாப்பிடுவது நெத்திலி கருவாடு. மீன், கறி கோழி, மீன் வறுவல் எல்லாமே சாப்பிடுவாரு.
எம்ஜிஆர் உடற்பயிற்சிக்கூடம் எல்லாமே வைத்துள்ளார். எவ்வளவு சாப்பிட்டாலும் தினமும் உடற்பயிற்சி செய்யத் தவற மாட்டார். எங்களுக்கு இணையா அவரும் நல்லா சாப்பிடுவாரு என்றார்.