எப்படி இருந்த சினிமா உலகம், இப்படி மாறி விட்டது..!
இன்று தமிழக சினிமா உலகம் பெரும் கட்டுப்பாட்டிற்குள் இயங்குவது போல் ஒரு தோற்றம் உருவாகி உள்ளது.;
சினிமா தியேட்டர் (கோப்பு படம்)
முந்தை நாட்களில் தீபாவளி அன்று சினிமா உலகம் எப்படி இருந்தது என பார்க்கலாம். 1992ம் ஆண்டு தீபாவளி உலகிற்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவிற்கும் தான் கொண்டாட்டமாக அமைந்தது. இன்றைக்கு போல அன்றெல்லாம் ஒரு பெரிய நட்சத்திரத்தின் படங்கள் வரும் போது மற்ற நட்சத்திரங்களின் படங்கள் பம்முவது இல்லை. எந்த ஹீரோக்கள் நடித்த படமாக இருந்தாலும் பாகுபாடின்றி வெளியாகும். படம் எடுத்து முடித்ததும் இன்று போல் அன்றைய தயாரிப்பாளர்கள் யாருக்காகவும் காத்திருந்ததும் இல்லை. அன்று படம் முடிந்த அனைத்து ஹீரோக்களின் படங்களும் வெளிவந்தன.
அதாவது 1992ம் ஆண்டு தீபாவளிக்கு கமலின் தேவர் மகன், ரஜினியின் பாண்டியன், விஜயகாந்தின் காவியத்தலைவன், சத்யராஜின் திருமதி பழனிசாமி, பாக்கியராஜின் ராசுக்குட்டி, சிவகுமாரின் சத்தியம் அது நிச்சயம், பிரபுவின் செந்தமிழ் பாட்டு என ஏழு படங்கள் வெளிவந்தன. இதில் 5 படங்களுக்கு இளையராஜாவின் இசை தான். அத்தனை படத்தின் பாடல்களும் செம ஹிட்.
ஆனால் இன்று சினிமா பாடல்கள் எதுவும் கேட்கும் படியாகவே இல்லை. அது கூட பிரச்னை இல்லை. இன்று ஒரு பெரிய நடிகர் படம் ரிலீஸ் என்றால், மற்ற சின்ன நடிகர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்வதில்லை. அதுவும் குறிப்பாக அன்று தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை காலங்களில் மட்டும் வெளிவந்த படங்கள், இன்று விடுமுறை காலங்களை கணக்கு வைத்து வெளியிடப்படுகின்றன.
தினம், தினம் எவ்வளவு வசூல் என்ற விவரங்களும் வெளியாகின்றன. அன்று சினிமாத்துறையில் போட்டி மட்டுமே இருந்தது. இன்று சினிமா உலகை ஆளுபவர் யார்?அதிக சம்பளம் வாங்குபவர் யார்? அதிக வசூல் அள்ளுபவர் யார்? என்ற போட்டி நிலவுகிறது. இந்த போட்டி சில சினிமாக்களுக்கு தியேட்டர்கள் கூட கிடைக்காமல் செய்து விடுகிறது. சில ஹீரோக்களின் படங்களை ரிலீஸ் செய்யும் தியேட்டர் அதிபர்கள் கூட மிரட்டப்படுகின்றனர். மொத்தத்தில் இன்றைய சினிமா அன்று போல் சுந்திரமாக இல்லாமல் கட்டுப்பாட்டில் இருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி உள்ளது என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
அப்படியென்றால் எப்படி சினிமாவை ரசிக்க முடியும்?