நடிகை அனுஷ்கா நடிப்பதற்கு முன் என்ன வேலை பார்த்தார் தெரியுமா?

தமிழ்ப்படங்களில் அழகான கதாநாயகிகள் பலர் இருந்தாலும், கவர்ச்சியும், அழகும் சேர்ந்து நடிப்பவர்கள் மிகக் குறைவு தான்.;

Update: 2024-02-18 06:05 GMT

அனுஷ்கா (கோப்பு படம்)

நடிகை அனுஷ்காவைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவரைப் பற்றிய சில கேள்விப்படாத தகவல்களைப் பார்க்கலாமா?

அனுஷ்கா ஷெட்டி என்ற பெயரைக் கேட்டதுமே நமக்கு பாகுபலி தான் நினைவுக்கு வரும். அந்தப்படத்தில் இவரது நடிப்பு அபாரமாக இருக்கும். இவரது இயற்பெயர் ஸ்வீட்டி ஷெட்டி. இவர் தனது திரையுலக வாழ்க்கைக்காக அனுஷ்கா என்று: பெயரை மாற்றிக் கொண்டார். இவர் ஒரு யோகா ஆசிரியை. வெள்ளித்திரைக்கு வரும் முன் அனுஷ்கா ஒரு யோகா ஆசிரியையாகவே இருந்தார். புகழ்பெற்ற பாரத் தாக்கூரின் கீழ் செயல்பட்ட மையத்தில் இவர் யோகா கற்றுக்கொடுத்தார்.

இந்தப் பயிற்சியை இவர் கற்றுக்கொடுப்பதால் அவரது ஒழுக்கமும், உடற்தகுதியும் அவரது செல்வாக்கை அதிகரிக்கிறது. ஆங்கிலம் தவிர அவர் துளு, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.

நடிக்க வரும் முன் இவர் ஆசிரியையாக இருந்தார். அதன் மூலம் வளர்ப்பு மற்றும் வழிகாட்டுதல் திறனையும் நன்கு வெளிப்படுத்தினார். கவர்ச்சியான வாழ்க்கைக்கு மாறாக, அனுஷ்கா இயற்கை பேரழிவுகள் தொடர்பான செய்திகளை சேகரித்தார். அதன் வாயிலாக சுற்றுச்சூழலுக்கான விழிப்புணர்வையும், அக்கறையையும் எடுத்துக் காட்டுகிறார்.

அருந்ததி படத்தில் ஒரு சக்திவாய்ந்த போர் ராணியாகவே நடித்தார். ஜெஜெம்மா என்ற பாடல் படப்பிடிப்பிற்காக யானை மீது ஏறுவதற்கு அவர் ஆரம்பத்தில் பயந்தார்.

ஒருமுறை அவர் தனது பச்சாதாபத்தையும், கருணையையும் வெளிப்படுத்தினார். எப்படி என்று தெரியுமா? அதாவது தனது திரைப்பட ஒப்பந்தத் தொகையில் 90 சதவீதத்தை உதவி என்று கேட்ட ஒரு வேலைக்காரருக்கு வழங்கினாராம்.

பாகுபலி படத்தில் நடித்ததற்காக அவர் தன் உடலில் 20 கிலோ எடையை அதிகரித்தார். கதாபாத்திரத்திற்கேற்ப தன்னையே மாற்றிக்கொள்ளும் சக்தி படைத்தவர்.

நடிப்புக்கு அப்பாலும் அவர் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார். அவற்றின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுகிறார்.

மற்றவர்களைப் போல இல்லாமல், அனுஷ்கா தனது தனிப்பட்ட வாழ்க்கையை சீராக பராமரித்து வருகிறார். அவரது அந்தஸ்து ஆகியவற்றை முறையாகக் கவனித்து வருகிறார். அதே போல கைவினைப்பொருள்களிலும் ஆர்வம் காட்டி அசத்தி வருகிறார் இந்த பிரபலம்.

Tags:    

Similar News