கமலஹாசனின் முதல் காதலி : திருமணம் முறிய காரணம் என்ன?

கமல்ஹாசனுக்கும் தனக்குமான காதலை நடிகை ஸ்ரீவித்யா உணர்ச்சி வெள்ளமாக மலையாளப் பேட்டியொன்றில் பகிர்ந்திருக்கிறார்.;

Update: 2024-07-28 06:16 GMT

நடிகை ஸ்ரீவித்யா 

மலையாள பத்திரிகைக்கான பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ரீவித்யா கூறும்போது  ''கமல்ஹாசனும் நானும் காதலித்தோம். அது அவ்வளவு பெரிய ரகசியமில்லை. திரைத்துறையில் அனைவருக்குமே தெரியும். கமலுடைய தந்தையாருக்கு என் மீது அதிக அன்பிருந்தது. நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அனைவரும் விரும்பினார்கள். ஆனால் சில வருடங்கள் காத்திருக்கும்படி கமல்ஹாசனிடம் என் அம்மா வேண்டுகோள் விடுத்தார்.

‘'உங்கள் இருவருக்கும் 21 வயது தான் ஆகிறது. கமல் மகா நடிகனாக ஆக வேண்டியவன். ஸ்ரீவித்யாவும் அப்படியே. திரைத்துறையில் நீங்கள் அடைய வேண்டிய உயரம், போக வேண்டிய தூரம் அதிகம். அப்படி பெரிய நடிகர்களாக ஆகையில் உங்கள் இருவருக்குமே வேறு வேறு ஆட்கள் மீது காதல் வரலாம். ஒரு நான்கைந்து வருடங்கள் காத்திருங்கள். அதன் பின்னரும் காதல் இருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள்'' என்று கமல்ஹாசனிடம் அம்மா அறிவுறுத்தினார்.

ஆனால் கமலுக்கு அதில் விருப்பமில்லை. நானோ என் தாயார் பேச்சை மீற விரும்பவில்லை. இதனால் கமலுக்கு என் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். சிறிது காலத்திலேயே அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

நிறைவேறாத என் காதலை எண்ணி நான் மிகவும் காயமடைந்து விட்டேன். என்னை விட அந்தப் பெண்ணிடம் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது ? நான் எதில் குறைந்தேன் ? என்றெல்லாம் நினைத்து தீரா வலியில் விழுந்தேன். அந்த வலியில்தான், எதையும் யோசிக்காமல், என்னை விரும்புகிறேன் என்று சொன்ன ஒருவரை (மலையாளத் தயாரிப்பாளர் ஜார்ஜ்) எதையுமே யோசிக்காமல் திருமணம் செய்தேன். அந்த திருமணமும் தோல்வியடைந்தது'''என்று ஸ்ரீவித்யா கூறியுள்ளார்.

Tags:    

Similar News