கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!

எம்.ஜி.ஆரின் முதல் திருமணம் நல்லபடியாக முடிந்தது. அவரது மனைவி தங்கமணி கர்ப்பமானார்.;

Update: 2024-04-27 08:09 GMT

எம்.ஜிஆர் திருமணம் செய்த காலகட்டத்தில் தான் இரண்டாம் உலகப்போர் வந்தது. இதையடுத்து சென்னையில் குண்டு போட போகிறார்கள் என்ற தகவல் வேகமாக பரவ, எம்.ஜி.ஆர்., மனைவி தங்கமணி கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எம்.ஜி.ஆரின் முதல் திருமணம் குறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் ஆகாயம் தமிழ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அப்போது தான் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு 200 முதல் 300 ரூபாய் வரை சம்பளம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த சமயத்தில், அவர் வால்டாக்ஸ் ரோட்டில், ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தார். அந்த வீட்டிற்கு 30 ரூபாய் வாடகை. ஒரு நாள் அவர் அங்கே உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அருகில் தண்ணீர் எடுத்து வரக்கூடிய ஒரு பெண், எம்ஜிஆரை ஜொல்லு விட, இதை பார்த்த எம்.ஜி.ஆர் அம்மா உடனடியாக எம்ஜிஆருக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லி, கேரளாவிற்கு சென்று ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து வைத்து விட்டார்.

அவர் பெயர் தங்கமணி. அவர் மிக அழகாக இருப்பார். அப்போது எம்.ஜி.ஆர் காந்திய சிந்தனையில் மிகவும் வேரூன்றி இருந்தார். அதன் காரணமாக, எப்போதும் கதர் ஆடையை அணிந்து கொண்டிருந்தார். கல்யாணத்தின் பொழுதும், கதர் ஆடை அணிவேன் என்று ஒற்றைக் காலில் நின்றார். ஆனால் அதற்கு குடும்பத்தார்கள் அனுமதிக்கவில்லை.

நல்ல படியாக கல்யாணம் முடிந்தது. எம்.ஜி.ஆர் மனைவி  தங்கமணி கர்ப்பமானார். இந்த நிலையில் தான் இரண்டாம் உலகப்போர் வந்தது. இதையடுத்து சென்னையில் குண்டு போட போகிறார்கள் என்ற தகவல் வேகமாக பரவ, தங்கமணி கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் தங்கமணிக்கு எம்ஜிஆரை பார்க்காமல் மனது படபடத்தது. இதையடுத்து எம்ஜிஆருக்கு போன் செய்து எனக்கு பயமாக இருக்கிறது. உங்களைப்  பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் . ஆனால், அந்த பயத்திலேயே அவருக்கு கருக்கலைந்து விட்டது. அவரும் இறந்து விட்டார்.

ஒரு ஷூட்டிங் நடக்கும் பொழுது எம்ஜிஆருக்கு இந்த தகவல் வருகிறது. அவருடைய அண்ணன்மார்கள் வந்து அவரை அழைத்துச் சென்றார்கள். ஆனால் அவர் அங்கு செல்வதற்குள், தங்கமணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. இதனால் எம்ஜிஆர் அவரது முகத்தைக் கூட இறுதிக்கட்டத்தில் பார்க்க முடியவில்லை” என்று பேசினார்.

Tags:    

Similar News