நாளை உலக பிரசித்திப்பெற்ற திருவாரூர் தியாகராஜர் தேரோட்டம்
உலக பிரசித்திப் பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆழித் தேரோட்டம் நாளை நடக்க உள்ளதையொட்டி கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் ஆழித்தேர் நாளை நடைபெற உள்ளதையொட்டி பணிகளை கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகபெரிய தேராகும் . இந்த தேர் கீழ வீதி, தெற்கு வீதி வடக்கு வீதி, மேல வீதி என நான்கு வீதிகளிலும் அசைந்தாடி வருவதை காண கோடி கண் வேண்டும் என்பார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற தேரோட்டமானது நாளை ( 25ந்தேதி) நடைபெற உள்ளது.
இந்த தேர் 30 அடி உயரம் 30 அடி அகலமும் கொண்டது அலங்கரிக்கபட்ட நிலையில் 96 அடி உயரமும் 300 டன் எடையும் கொண்டது. மேலும் எந்த தேரிலும் இல்லாத சிறப்பாக திருச்சி பெல் நிறுவனத்தின் மூலம் செய்யபட்ட ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேரின் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை திருவாரூர் கலெக்டர் சாந்தா மற்றும் காவல் கண்காணிப்பாளர் கயல்விழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இவ்வாய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிகரன், திருவாரூர் நகராட்சி ஆணையர்(பொ).சண்முகம், தியாகராஜ சுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் கவிதா, வட்டாட்சியர் நக்கீரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.