நீரிழிவு நோய் சிகிச்சைக்காக பேரறிவாளன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் குற்றவாளி பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை பெற தருமபுரி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.;
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் குற்றவாளி பேரறிவாளன் நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட சிகிச்சைக்காக ஸ்கேன் செய்வதற்காக தருமபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார்.
இந்த மருத்துவமனை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. டாக்டர் செந்தில்குமார் சொந்தமானதாகும். பேரறிவாளனுடன் அவரது தாயார் அற்புதம்மாள் தனி காரில் வந்துள்ளார்.