ஒரு கோடி சிக்கிய விவகாரம் திருச்சி கலெக்டர் எஸ்பி இடமாற்றம்
திருச்சியில் ரூ 1 கோடி சிக்கிய விவகாரத்தில் கலெக்டர் சிவராசு, போலீஸ் எஸ்.பி. ராஜன், ஸ்ரீரங்கம் சப் - கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோரை இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.;
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மற்றும் . ஆகிய மூவரும் தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தபோது ஒரு கோடி ரூபாய் சிக்கியது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி., மற்றும் சப்கலெக்டர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி கலெக்டராக திவ்யதர்ஷினி, திருச்சி மாவட்ட எஸ்பியாக மயில்வாகனன்,ஸ்ரீரங்கம் சப்கலெக்டராக விஷ்ணு மகாஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சியில் அதிகாரிகள் இடமாற்றம் செய்தது அதிகாரிகள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.