தர்மபுரி அருகே ரூ. 7 லட்சம் மதிப்பிலான குட்கா லாரியுடன் பறிமுதல்
தர்மபுரி அருகே ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான குட்கா லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.;
தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவின்பேரில் தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் மேற்பார்வையில் தொப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா பானு உதவி காவல் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் மொபைல் போலீசார் நேற்று நள்ளிரவில் தர்மபுரி சேலம் நெடுஞ்சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். போலீசார் நிறுத்தி சோதனை செய்த உடனே ஈச்சர் லாரி டிரைவர் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி ஓடி மறைந்தனர். இந்த லாரியில் பொருட்கள் எதுவுமே இல்லாததை கண்டு போலீசார் திகைத்தனர். பின்னர் அதனை முழுமையாக சோதனை செய்தபோது ரகசிய அறைகள் வைத்து பெங்களூரிலிருந்து குட்கா கடத்திவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் லாரியையும்,குட்காவையும் பறிமுதல் செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரகசிய அறை அமைத்து குட்கா எடுத்து வந்தது போலீசாரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது தொடர்ந்து தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குட்காவின் மதிப்பு சுமார் ரூபாய் 7 இலட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.