தேர்தலை யொட்டி 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை

தேர்தலை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-24 12:04 GMT

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவுப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைப்பெறும் நாளான மே 2ம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tags:    

Similar News