இலகுவாய் வாக்களிக்க 14ஆயிரம் சிறப்பு பஸ் இயக்க ஏற்பாடு

தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 14,215 சிறப்பு பஸ்களை தமிழக அரசு இயக்க உள்ளது.

Update: 2021-03-24 06:02 GMT

2021 சட்டசபைக்காக தேர்தல் வருகிற ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையிலிருந்து தினசரி செல்லும் 2,225 பஸ்களுடன் கூடுதலாக 3,090 பஸ்களும் பிற பகுதி பஸ்களும்  சேர்த்து 14 ஆயிரத்து 215 பஸ்கள்  இயக்கப்பட உள்ளது. இதே போல், கோவை, திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும்  பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

தேர்தல் முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு திரும்ப ஏப்ரல் 6 முதல் 7ம் தேதி வரையில் தினசரி இயக்கப்படும் 2,225 பஸ்களுடன் 2,115 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும். மேலும், சேலம், மதுரை, திருச்சி, தேனி ஆகிய இடங்களிலிருந்து திருப்பூர் மற்றும் கோவை, சேலம், திருண்ணாமலை, வேலுார் ஆகிய இடங்களிலிருந்து பெங்களூருக்கும் என மொத்தம் 1,738 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News