சும்மா ஜம்முன்னு ஒரு டிராக்டர் : சோலிஸ் ஹைபிரிட் 5015

இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் (ஐடிஎல்) ஜப்பானைச் சேர்ந்த யான்மார் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு புதிய ரக டிராக்டர்களைத் தயாரித்துள்ளது.

Update: 2021-04-22 07:08 GMT

மாதிரி படம்

இன்டர்நேஷனல் டிராக்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் (ஐடிஎல்) ஜப்பானைச் சேர்ந்த யான்மார் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு புதிய ரக டிராக்டர்களைத் தயாரித்து வருகிறது.

அதிக பவர் உடைய இந்த டிராக்டர்கள் சோலிஸ் ஹைபிரிட் 5015 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை விலை ரூ. 7.21 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிராக்டரில் இ.பவர் பூஸ்ட் என்ற புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்துக்கான காப்புரிமையை சோலிஸ் யான்மார் நிறுவனம் பெற்றுள்ளது. அந்நிறுவனத்திடமிருந்து இதற்கான உரிமையைப்பெற்று, இந்த நவீன டிராக்டரில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த டிராக்டர் ஃபோர் வீல் டிரைவ் என்று சொல்லக்கூடிய நான்கு சக்கர சுழற்சி கொண்டது. இதன் மூலம் பெறப்படும் இயக்க ஆற்றலை மின்னாற்றலாக மாற்றி பயன்படுத்திக்கொள்ளும் திறன் பெற்றது.

இந்த புதிய தொழில் நுட்பத்தால் 50 சிசி திறன் கொண்ட இந்த டிராக்டரிலிருந்து 60 சிசி திறன் வெளிப்படுகிறது. அதேநேரம் இது செலவிடும் எரிபொருள் 45 சிசி திறன் கொண்ட டிராக்டரின் அளவு மட்டுமே. அதனால், எரிபொருள் சிக்கனப்படுத்தும் தயாரிப்பாகவும் இது விளங்குகிறது.

இதில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இது ஹைபிரிட் மாடலாக செயல்படுகிறது. இந்த பேட்டரியை வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் உள்ள ஸ்மார்ட் எல்இடி திரையில் பேட்டரியின் மின் அளவு தெரியும். அதனால் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்வது எளிது.

Tags:    

Similar News