நீண்ட தூர பயணங்களுக்கு எலக்ட்ரிக் கார்களிலும் செல்லலாம்..!
முன்பு எலக்ட்ரிக் கார்கள் வைத்திருப்பவர்கள் வீட்டில் சார்ஜ் செய்து கொண்டு டவுனை மட்டும் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
எலக்ட்ரிக் கார்கள் வைத்திருப்பவர்கள் இப்போது நீண்ட தூர பயணங்களிலும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதற்கான இன்ஃப்ராஸ்ட்ரக்சர் வந்துள்ளதே காரணம். மின்சாரக் கார்களில் நீண்ட தூர பயணம் முன்பு நாம் கவனிக்க வேண்டியது நாம் செல்லும் பாதையில் எங்கெங்கு சார்ஜிங் ஸ்டேஷன் உள்ளது என்பதை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் அதற்கு இப்போது நிறைய மொபைல் ஆப்ஸ் இருக்கின்றன.
இப்போது தமிழகம் முழுவதும் 100 அல்லது 150 கிலோ மீட்டர்களுக்கு இடையே எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து செலவு மிகவும் குறைவாக உள்ளது. உதாரணத்துக்கு 1200 கிலோமீட்டர் செல்வதற்கு வெறும் 3000 இருந்தால் போதும். இதே பெட்ரோல், டீசல் காராக இருந்தால் நீங்கள் 8000 இருந்து 10,000 வரை செலவு செய்ய வேண்டும். இதில் இருக்கும் ஒரு சிரமம் சார்ஜ் செய்யும் போது நாம் காத்திருப்பது மட்டுமே.
600 கிலோமீட்டர் செல்வதற்கு சுமார் 2 மணி நேரம் எக்ஸ்ட்ராவாக ஆகும். சில சார்ஜிங் ஸ்டேஷனுக்கு அருகே ஹோட்டல்கள் இருப்பதனால் நம் அந்த நேரத்தை மிச்சப்படுத்தலாம். இப்போது ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 200லிருந்து 400 கிலோமீட்டர் வரை செல்லும் கார்கள் இருக்கின்றன.
இன்னும் எதிர்காலத்தில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிலோ மீட்டர் வரை செல்லலாம் என்று சொல்கிறார்கள். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த சார்ஜிங் ஸ்டேஷன் வைக்கலாம். இதுதான் எதிர்காலத்தில் நல்ல பிசினஸ் ஆக இருக்கும். ஆக, வருங்கால வளர்ச்சிக்கு தயாராகுங்கள்.