இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் என்ன இருக்கிறது?

இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் என்ன இருக்கிறது?
X

லண்டனில் இந்திய சுதந்திரதினவிழாவில் பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்.

இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் ஹனுமன் சிலையும், விநாயகர் சிலையும் உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ரிஷிசுனக் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இந்திய சுதந்திர விழா கொண்டாட்டம் நடந்தது. அப்படியே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டு பேசியது இப்போது பரபரப்பு செய்தியாகின்றது.

இந்திய மத அறிஞர் மொராரி பாபு, கேம்ப்ரிட்ஜ் பல்கலை வளாகத்தில் ராமகதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். இந்திய சுதந்திர தினத்தை தொடர்ந்து அங்கே நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக வந்தார் ரிஷி சுனக்.

அவர் தன் பேச்சில் சொன்னார். "நான் இங்கு பிரதமராக வரவில்லை. ஹிந்துவாக வந்துள்ளேன் , அடிக்கடி ராமாயணத்தையும், பகவத் கீதையையும் மற்றும் ஹனுமன் சாலீசாவையும் நினைந்து கொள்வேன். என் வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி பணியாற்றவும் ராமன் எனக்கு வழிகாட்டியாக இருப்பார்.

மொராரி பாபுவுக்கு பின்னால், தங்க நிறத்திலான ஹனுமன் படம் உள்ளது போல், எனது அலுவலகத்திலும் ஹனுமன் உள்ளார். எனது மேஜை மீதும் விநாயகர் மகிழ்ச்சியுடன் அமர்ந்துள்ளார். இதனை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன் என்றார். எவ்வளவு அழகான வார்த்தைகள்?சுதந்திரம் கிடைத்த 77 ஆண்டுகளில் இந்திய ராமாயணம் லண்டனை ஆக்கிரமிகின்றது என்பது சிலிர்ப்பூட்டும் செய்தி. 100 ஆண்டுக்கு முன் அந்த லண்டனில் இப்படி ஒரு காட்சி நடக்கும் என யாராவது கருதியிருக்க முடியுமா? அப்படி அடுத்த 100 ஆண்டில் இன்னும் பெரும் ஆச்சரியங்கள் நிகழலாம். காலம் அப்படித்தான் மாறும் என்று ராமபக்தர்கள் கூறி வருகின்றனர்.

100 ஆண்டுகளுக்கு முன்பு எம்மை அடிமைப்படுத்தி இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு இன்று இந்திய வம்சாவளியில் வந்த ஒருவர் பிரதமராக இருக்கிறார். காலங்கள் இன்னும் மாறிக்கொண்டிருக்கின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது.

Tags

Next Story
Similar Posts
ஹேலி மேத்யூஸின் உடற்பயிற்சி ரகசியங்கள்!
உலக செஸ் சாம்பியன் குகேஸ் ஐ கௌரவிக்கும் வகையில் கூகுல் டூடுல் செஸ் வடிவில் மாற்றம்
மாஸ் காட்டும் புஷ்பா..! அல்லு அர்ஜூன் எப்படி ஃபிட்டா இருக்காரு? 6 தடவ சாப்பிடுவாராம்..!
சவுந்தர்யாவின் அழகுக்கு காரணம் இந்த மூணும் தான்..! நீங்களும் டிரை பண்ணுங்க..!
Chennai Rain Today News In Tamil
Will AI Replace Web Developers
Weight Loss Tips In Tamil
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings
உடல் எடை வேகமா குறைய முட்டைக்கோஸ் சாப்பிடுங்க..! இப்படி சாப்பிட்டா ரொம்ப ஈஸி..! | 5 Ways Nutritious Cabbage Can Boost Your Health
புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய  முதலை இறந்தது
மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு  ஏலம்: விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்
இசைஞானியின் முதல் சிம்ஃபொனி ஜனவரி மாதம் வெளியீடு
ai in future agriculture