காரியாபட்டியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு

காரியாபட்டியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
X

காரியாபட்டியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

காரியாபட்டியில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, அச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் சில ஆண்டுகளாகவே மனநலம் பாதிக்கப்பட்டு காரியாபட்டி பேருந்து நிலையம் பகுதிகளில் சுற்றி திரிந்து வந்தார். சாப்பாடு சரியாக சாப்பிடாமல் உடல் மெலிந்து காணப்பட்டார்.

இவரால், காரியாபட்டி பேருந்து நிலையம் வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்ததாலும், மனநிலை பாதிக்கப்பட்ட நபர் சாப்பிடாமல் உடல் மெலிந்து காணப்பட்டதை அறிந்த காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பா. அசோக்குமார் தலைமையில், போலீசார் மனநலம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.

அதன் அடிப்படையில், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமியை பிடித்து காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் உள்ள அன்னை மனநலக் காப்பக நிர்வாகிகளிடம் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஒப்படைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட லட்சுமியின் உறவினர்களுக்கு தகவல் தரப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!