11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சார்பில் 11அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாநில தலைவர் எஸ்.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான பொருளாக செங்கல், மணல், சிமென்ட், கம்பி ஆகிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி கட்டுமானத் தொழில் பாதிப்பின்றி நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த அமைப்புசாரா தொழிலாளர்கள் குறிப்பாக ஆட்டோ தொழிலாளி, தையல் தொழிலாளி, சமையல் தொழிலாளி, சலவைத் தொழிலாளி உள்ளிட்டவர்களுக்கு கருவிகள் மற்றும் மானிய அடிப்படையில் கடன் உதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பியவாறு ஈடுபட்டனர்.ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் மாநில துணைத்தலைவர் கே.மணிகண்டன், மாநில பொருளாளர் எம்.ஆர்.ஆறுமுகம், மாநில துணைத்தலைவர் ஆர்.முனுசாமி, மாநில மகளிர் அணி இ.கோமதி,சட்ட ஆலோசகர் எம்.சக்திவேல், மாநில பொதுச்செயலாளர் வி.பி.பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu