விழுப்புரத்தில் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது

விழுப்புரத்தில் நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது
X

முன்கள பணியாளர்களுக்கு உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் மோகன் வழங்கினார்,

விழுப்புரம் நகராட்சியில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை கலெக்டர் மோகன் வழங்கினார்.

விழுப்புரம் நகராட்சியில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும், கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் தனியார் மண்டபம் ஒன்றில் ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் நடைபெற்றது,

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு 683 நகராட்சி முன்கள பணியாளர்களுக்கு ரூ.7.5 லட்சம் மதிப்பிலான மண்வெட்டி, துடைப்பம் உள்ளிட்ட சுகாதார பணிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்,

முன்னதாக அங்கு நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, முன்கள பணியாளர்களுக்கு மாஸ்க் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களை வழங்கினார், நிகழ்ச்சியில் நகராட்சி மருத்துவ அலுவலர் பாலசுப்பிரமணியன், மருத்துவர் ஜோதி, நகராட்சி ஆய்வாளர் ரமணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!