கண்டாச்சிபுரத்தில் நடக்கவிருந்த கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

கண்டாச்சிபுரத்தில் நடக்கவிருந்த கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
X

கண்டாச்சிபுரத்தில் வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில் சமாதானம் கூட்டம் நடைபெற்றது

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரத்தில் நடக்கவிருந்த கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம் வட்டாட்சியர் சமாதானத்தால் கைவிடப்பட்டது

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் வட்டத்தில், பெரும்பாலான கிராமத்தில் வாழும், கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்குவது உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வரும் திங்கள் கிழமை, தமிழ்நாடு ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக, தீப்பந்தம் ஏந்தி காவல் காக்கும் போராட்டம் நடைபெற இருந்தது.

இந்நிலையில், இன்று கண்டாச்சிபுரம், வட்டாட்சியர் கார்த்திகேயன் தலைமையில் சமாதானம் கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் அனைத்து பிரச்சினைகள் குறித்து விவாதிக்கபட்டது,. கூட்டத்தில் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன் அனைத்து பிரச்சினைகளும் விரைவாக சரிசெய்யப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!