திருக்கோயிலூர் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

திருக்கோயிலூர் அருகே 500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
X

அரகண்டநல்லூரில் சாராய ஊறலை கொட்டி அழித்த போலீசார்

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்திருந்த 500 லிட்டர் ஊறலை போலீசார் அழித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வசந்த கிருஷ்ணாபுரத்தில் போலீஸார் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டிருந்த போது அங்கு ஒரு கரும்பு தோட்டத்தில் சுமார் 500 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடித்தனர்

விசாரணையில் அந்த ஊரல் கோட்டமருதூரைச் சேர்ந்த பாலாஜி மற்றும் ஆறுமுகம் ஆகியோருக்கு சொந்தமானது என தெரியவந்தது, இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர், தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அந்த 500 சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!