திருக்கோவிலூர் அருகே புதிய ரேசன் கடை: அமைச்சர் திறந்து வைத்தார்

திருக்கோவிலூர் அருகே புதிய ரேசன் கடை:  அமைச்சர் திறந்து வைத்தார்
X

புதிய பகுதிநேர நியாய விலைக்கடையை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்

திருக்கோவிலூர் புரவடை பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையினை அமைச்சர் பொன்முடி இன்று திறந்து வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் வட்டம், கூட்டுறவுத்துறை சார்பாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட புரவடை பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகன்,விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன். கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!