தூக்க கலக்கத்தில் டிரைவர் லாரி ஓட்டியதில் தடுப்பு சுவரில் மோதி விபத்து

தூக்க கலக்கத்தில் டிரைவர் லாரி ஓட்டியதில் தடுப்பு சுவரில் மோதி விபத்து
X

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அருகே விபத்துக்குள்ளான லாரி 

விழுப்புரம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்செந்தூரில் இருந்து ஆந்திரா விஜயவாடா விற்கு காய்கறிகள் ஏற்றி வந்த லாரி திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் அடுத்த பாரதி நகர் ஏரிக்கரை வளைவில் அதிகாலையில் சாலை தடுப்பு கட்டையில் மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்தது. ஓட்டுனர் தூக்கக்கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார், கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை வந்த ரோந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரிசெய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture