கண்டாச்சிபுரத்தில் குடும்ப அட்டை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கண்டாச்சிபுரத்தில் குடும்ப அட்டை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

மாற்றுத் திறனாளிகளுக்கு ஏஏஒய் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) வழங்க வலியுறுத்தி கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூர் அருகே கண்டாச்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஏஒய் குடும்ப அட்டை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், சார்பில் அந்த்யோதயா அன்ன யோஜனா மைய அரசின் திட்டப்படி,வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஏஏஒய் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) வழங்க வலியுறுத்தி, மனு கொடுக்கும் போராட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.முருகன் தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார், பின்னர் மாற்றுத்திறனாளிகள் வட்ட வழங்கல் அதிகாரியிடம் மனு கொடுத்தனர், வட்ட செயலாளர் எம். முருகன், வட்டத் தலைவர் சி.அஞ்சுலட்சம், வட்ட பொருளாளர் எஸ்.வெற்றி, மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தண்டபாணி எஸ்.தேவி எஸ்.புஷ்பா எம்.வள்ளி இ.சிலம்பரசன் எம்.சக்தி உட்பட மாற்றுத்திறனாளிகள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!