அரகண்டநல்லூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு

அரகண்டநல்லூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
X

அரகண்டநல்லூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட அரகண்டநல்லூர் ஸ்ரீ லட்சுமி வித்யாஸ்ரமம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான த.மோகன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மகளிர் திட்ட அலுவலர் பூ.காஞ்சனா, வருவாய் கோட்டாட்சியர் அரிதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி