பயன்பாட்டில் இல்லாத கண்டாச்சிபுரம் பங்களா கிணற்றை மூட கிராம மக்கள் கோரிக்கை

பயன்பாட்டில் இல்லாத கண்டாச்சிபுரம் பங்களா கிணற்றை மூட கிராம மக்கள் கோரிக்கை
X

கண்டாச்சிபுரத்தில் உள்ள பாழடைந்த கிணறு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் உள்ள பாழடைந்த கிணறு மூடப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை

கண்டாச்சிபுரம் பழைய தாலுகா அலுவலகம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி நிர்வாகம் கொட்டிய குப்பை கிணற்றில் (பங்களா கிணறு) வெள்ளிக்கிழமை சந்தைக்கு விற்பனை வந்த பசு மாடு தவறி விழுந்ததில் பலியானது.

தீயணைப்பு வீரர்கள் மற்றும் இளைஞர்களால் மாடு மீட்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதால், உடனடியாக கிணற்றை மண் அடித்து மூட வேண்டும் என்று ஊர் மக்கள் கூறி உள்ளார்கள்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், ஏற்கனவே இரண்டு மாடு மற்றும் 2003 ஆம் ஆண்டில் மழவந்தாங்கள் சேட்டு (என்கின்ற) முருகன் உள்பட தவறி விழுந்து இறந்துள்ளார்கள், எனவே எந்தத் பயன்பாடும் இல்லாத இந்தக் கிணற்றை தாலுக்கா நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகம் மூட ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
ai solutions for small business